சென்னை சுப்பர் சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகியவற்றுக்கிடையே புனேயில் நடைபெற்ற போட்டியில் சென்னையின் துடுப்பாட்டம் பந்துவீச்சு ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்க முடியாத ராஜஸ்தான் தோல்வியடைந்தது. முரளிவிஜய், ஹர்பஜன்சிங் ஆகியோருக்குப் பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்த சுரேஷ் ரெய்னாவும் சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மாவும் விளையாடினார்கள். ராஜஸ்தான் அணியில் டார்சி ஷார்ட், தவால் குல்கர்னி ஆகியோர் நீக்கப்பட்டு ஹென்ரிச் கிளாசென்னும், ஸ்டூவர்ட் பின்னியும் சேர்க்கப்பட்டனர்.
நாணய்ச்ச்சுழற்சியில்
வெற்ரி பெற்ற ராஜஸ்தான் கப்டன் ரஹானே களத்தடுப்பைத் தேர்வு செய்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷேன் வட்சனும், அம்பத்தி ராயுடுவும் களம் புகுந்தனர்.
முதல் ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பின்னி முதல் பந்தையே நோ-பாலாக வீசினார். அதன்பிறகு அடுத்தடுத்து இரு பவுண்டரியுடன் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் வட்சன் அதே ஓவரில் வட்சன் கொடுத்த எளிதான வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற திரிபாதி கோட்டை விட்டார். பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட வட்சன், ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்
முதல் ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பின்னி முதல் பந்தையே நோ-பாலாக வீசினார். அதன்பிறகு அடுத்தடுத்து இரு பவுண்டரியுடன் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் வட்சன் அதே ஓவரில் வட்சன் கொடுத்த எளிதான வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற திரிபாதி கோட்டை விட்டார். பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட வட்சன், ராஜஸ்தான் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்
வட்சன்,
ராயுடு ஜோடி 26 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தது. முன்னதாக இந்த ஜோடி கொல்கட்டாவுக்கு எதிராக 22 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்தது. சென்னை அணிக்காக சிமித் ,மக்கலம் ஜோடி முதல் விக்கெற்றுக்கு 2015 ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக 25 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தது. 6 ஓவர்களில் சென்னை 69 ஓட்டங்கள் எடுத்தது.இந்த மைதானத்தில் புனேக்கு எதிராக குஜராத் 6 ஓவர்களில் 72 ஓட்டங்கள் எடுத்ததே அதிக ஓட்டமாக உள்ளது.
லாக்லரின்
பந்தை பட்லரிடம் பிடி கொடுத்த ராயுடு 12 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
வட்சனுடன்
ரெய்னா ஜோடி சேர்ந்தார். இவர்களின் அதிரடியால் ஓட்ட எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் உயர்ந்தது. பென் ஸ்டோக்கின் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகள் அடித்த ரெய்னா ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். வட்சனும் ரெய்னாவும் போட்டி போட்டு அடித்ததால் சென்னை 225 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 9.5 ஓவர்களில் சென்னை 100 ஓட்டங்களை எடுத்தது. 11.5 ஒவரில் 131 ஓட்டங்களை சென்னை எடுத்தபோது ரெய்னா ஆட்டமிழந்தார். கோபால் வீசிய பந்தை கவுதமிடம் பிடிகொடுத்த ரெய்னா 29 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்தார்.
டோனி 5 ஓட்டங்களுடனும்
பில்லிங்ஸ் 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய பிராவோ, வட்சனுடன் இணைந்து மிரட்டினார். 28 பந்துகளில் அரைச்சதம் அடித்த வட்சன் 58 பந்துகளில் சதம் அடித்தார். இந்த சீசனைல் இது இரண்டாவது சதமாகும். ஐபிஎல் தொடரில் வட்சனின் மூன்றாவது சதம். முன்னதாக ரஜஸ்தான் வீரராக 2013 ஆம் ஆண்டு சென்னைக்கு எதிராகவும் 2015 ஆம் ஆண்டு கொல்கட்டாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஐபிஎல் தொடரின் 49 ஆவது சதம் இதுவாகும்.டேவிட் வானர் டிவில்லியச் ஆகியோரும் ஐபிஎல்லில் மூன்று சதம் அடித்துள்ளனர். 19.5 ஆவது ஓவரில் 106 ஓட்டங்களில் வட்சன் ஆட்டம் இழந்தார். 57 பந்துகளைச் சந்தித்த வட்சன் ஒன்பது பவுண்டரிகளையும் ஒன்பது சிக்சர்களையும் அடித்தார்
.
16 பந்துகளுக்கு முகம் கொடுத்த பிராவோ24 ஓட்டங்களுடனும் ஒரு பந்தில் இரண்டு ஓட்டங்களுடனும் ஜடேஜா களத்தில் இருந்தனர்.
முதல் 15 ஒவர்கள்
வரையிலும் 10-11 ஓட்டங்கள் என்று விகிதம் வைத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு கட்டத்தில் . ஆனால் ஷ்ரேயஸ் கோபால் தன் ஸ்பின் மூலம் 4 ஓவர்களில் வெறும் 2 பவுண்டரிகளையே கொடுத்து 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் முக்கிய விக்கெட்டுகளான ரெய்னா, டோனி (5) ஆகியோர் விக்கெட்டுகளும் அடங்கும். பிறகு சாம் பிலிங்ஸ் விக்கெட்டையும் கோபால் கைப்பற்றினார். இதனால்தான் கடைசி 7 ஓவர்களில் 54 ஓட்டங்கள் மட்டும் எடுக்கப்பட்டது. ஷ்ரேயஸ் கோபால் இந்தத் தொடரில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ரெய்னா, டோனி ஆகியோரை வீழ்த்தி அசத்தியுள்ளார்
205 என்றஇலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென் முதல் ஓவரில் கொடுத்த சுலபமான கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற வாட்சன் தவற விட்டார். ஆனாலும் கிளாசென் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.. சஞ்சு சாம்சன் 2 கடன் ரஹானே 16 ஓட்டங்களில் வெளியேறினர். இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ‘வீழ்த்தினார். ஜோஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் அணியை மீட்கப் போராடினர். ஜோஸ் பட்லர் 22 ஓட்டங்களிலும் . பென் ஸ்டோக்ஸ் 45 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.
ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 140 ஓட்டங்கள் எடுத்தது. தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா, பிராவோ தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது வட்சனுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment