ரோகித் |
முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை ரோகித் சர்மாவின் 94 ஓட்டங்கள் கைகொடுக்க, ., , ஓட்டங்கள் வித்தியாசத்தில், பெங்களூருவை வென்றது.
இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, பெங்களூரு அணிகள் மோதின.நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி கப்டன் கோஹ்லி, களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
இந்தியாவில் 11வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, பெங்களூரு அணிகள் மோதின.நாணயச்சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி கப்டன் கோஹ்லி, களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
மும்பை அணிக்குதுவக்கமே 'அதிர்ச்சியானது.. உமேஷ் யாதவ் வீசிய போட்டியின் முதல்இருபந்தில், சூர்யகுமார் (0),இஷான் கிஷான் (0) போல்டாகினர்.அடுத்து எவின் லீவிஸ்,கப்டன் ரோகித் சர்மாஇணைந்தனர். இருவரும் வேகமாக ஓட்டங்கள் சேர்க்க,துவக்க அதிர்ச்சியில் இருந்து மீண்டது. லீவிஸ், ஐ.பி.எல்., அரங்கில் முதல் அரைசதம் எட்டினார்.மூன்றாவது விக்கெட்டுக்கு 66 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்த நிலையில், லீவிஸ்(65)ஆட்டமிழந்தார்.
மனம் தளராதரோகித், 32 பந்தில் அரைசதம் கடந்தார். ஐ.பி.எல்., அரங்கில் இது, இவரது 33வது அரைசதம். குர்னால் பாண்ட்யா (15),போலார்டு (5) நீடிக்கவில்லை.ரோகித் 52 பந்தில், 94 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணி 20 ஓவரில்,6விக்கெட்டுக்கு213ஓட்டங்கள் எடுத்தது.பாண்ட்யா ஆட்டமிழக்காது 17 ஓட்டங்கள் எடுத்தார்.
214 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு கோஹ்லி, குயின்டன் டி காக் ஜோடி, நல்ல துவக்கம் (40 ரன்/4 ஓவர்) தந்தது. இதன் பின் எதுவும் சரியாக அமையவில்லை. டி காக் (19), டிவிலியர்ஸ் (1), மன்தீப் (16), ஆண்டர்சன் (0), சுந்தர் (7) என, வரிசையாக திரும்பினர். சர்பராசும் (5) ஏமாற்றினார். கோஹ்லி, 32 வது அரைசதம் அடித்தார். வோக்ஸ் (11), உமேஷ் (1) விரைவில் வெளியேறினர். கடைசியில் பெங்களூரு அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. தனி ஆளாக போராடிய கோஹ்லி (92), சிராஜ் (8) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் மூன்று தோல்விக்குப் பின், மும்பை அணி, 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில், முதல் வெற்றியைப் பெற்றது.
No comments:
Post a Comment