முஜிபுர் ரஹ்மான்
|
டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவற்றுக்கிடையே நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் நான்கு ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் போட்டியில் ஆறு விக்கெற்களால் பஞ்சாப் வெற்றி பெற்றது,.ஆகையால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் டெல்லி களம் இறங்கியது..
நாணயச்சுழற்சியில்
வெற்றி பெற்ற டெல்லி அணித்தலைவர் கம்பீர் களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் எட்டு விக்கெற்களை இழந்து 143 ஓட்டங்கள் எடுத்தது. 144 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் விளையாடிய டெல்லி எட்டு விக்கெற்களை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்து நான்கு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
டெல்லி
அணியில் ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக அவேஷ்கானும், ஷபாஸ் நதீமுக்கு மாற்றாக அமித் மிஸ்ராவும் இடம் பிடித்தனர். பிரித்வி ஷா, டேனியல் கிறிஸ்டியன், பிளங்கெட் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உடல் நலக்குறைவு காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம் பிடித்தார்.
பஞ்சாப் அணியில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் உடல் நலக்குறைவு காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் மில்லர் அணியில் இடம் பிடித்தார்.
பஞ்சாப்
அணியின் தொடக்க வீரர்களான லோகேஷ் ராகுலும், ஆரோன் பிஞ்சும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலே இரண்டு ஓட்டங்களுடன் அவேஷ்கான் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யரிடம் பிடி கொடுத்து ஆரோன் பிஞ்ச் வெளியேறினார்.
மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். 23ஓட்டங்களில் ராகுல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கருண் நாயர் ஆட்டத்தைத் தொடர்ந்தார். முதல் பவர் பிளேயில் பஞ்சாப் இரண்டு விக்கெற்களை இழந்து 51 ஓட்டங்கள் எடுத்தது.
ஸ்ரேயாஸ் அய்யர்
மயங்க் அகர்வால் 21` ஓட்டங்கள் , யுவராஜ்சிங் 14 ஓட்டங்கள்எடுத்து வெளீயேறினர். இதனை அடுத்து டேவிட் மில்லர், கருண்நாயருடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். 15 ஓவர்களில் பஞ்சாப் அணி 100ஒட்டங்கள் எடுத்தது. எதிர்பார்க்கப்பட்ட கருண்நாயர் 34 ஓட்டங்களில் பிளங்கெட் பந்து வீச்சில் ஸ்ரேயாஸ் அய்யரிடம்பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்து டேவிட் மில்லர் 19 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டேனியல் கிறிஸ்டியன் பந்து வீச்சில் பிளங்கெட்டிடம் பிடிகொடுத்து கொடுத்து ஆட்டம் இழந்தார்.
கடைசி ஓவரில்கப்டன்
அஸ்வின் 6, ஆன்ட்ரூ டை 3 ஓட்டங்களுடன் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. பரிந்தர் ஸ்ரன் ஓட்டமின்றி ஆட்டம் இழக்காமல் இருந்தார். டெல்லி டேர்டெவில்ஸ் அணி தரப்பில் பிளங்கெட் 3 விக்கெற்களையும், டிரென்ட் பவுல்ட், அவேஷ்கான் ஆகியோர் தலா 2 விக்கெற்களையும், டேனியல் கிறிஸ்டியன் ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினார்கள்.
144 என்றஎளிய இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு, ஐ.பி.எல்., அறிமுக வீரர் பிரிதிவி ஷா, காம்பிர் ஜோடி துவக்கம் தந்தது. ராஜ்பூட் பந்தில் பவுண்டரி அடித்து, கணக்கைத் துவக்கிய ஷா, 10 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 12 ,கம்பிர் 4, ரிஷாப் பன்ட் 4, ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்., 24 ஓட்டங்கள் எடுத்த தேவாட்டியா உதவ, ஸ்ரேயாஸ் மட்டும் போராடினார்.
கடைசி ஓவரில், டில்லி வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. முஜீப் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில்ஓட்டம் இல்லை. 2வது பந்தில் சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ், அரைசதம் எட்டினார். 3, 4வது பந்தில் 2 ஓட்டங்கள். 5வது பந்தில் ஸ்ரேயாஸ், பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் (57) ஆட்டமிழக்கக, டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டும் நடந்தது. பஞ்சாப் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில், டில்லி வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. முஜீப் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில்ஓட்டம் இல்லை. 2வது பந்தில் சிக்சர் அடித்த ஸ்ரேயாஸ், அரைசதம் எட்டினார். 3, 4வது பந்தில் 2 ஓட்டங்கள். 5வது பந்தில் ஸ்ரேயாஸ், பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரேயாஸ் (57) ஆட்டமிழக்கக, டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் மட்டும் நடந்தது. பஞ்சாப் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
டெல்லி
ஐந்தாவது போட்டியில் தோல்வியடைந்தது.பஞ்சாப் ஐந்தாவது போட்டியில் வெற்ரி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
No comments:
Post a Comment