Friday, April 27, 2018

மின்னல் வேக டோனியின் புதிய சாதனை.


  
பெங்களூருக்கு எதிராக நடந்த போட்டியில் டோனி வேகமாக பவுண்டரியை தடுக்க ஓடிய வீடியோ வைரல் ஆகியுள்ளது. அதன்படி தற்போது இவர் எவ்வளவு வேகத்தில் ஓடினார் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது
இந்த போட்டியில் தொடக்கத்தில் டோனி வேகமாக ஓடிய பீல்டிங் ஒன்று வைரல் ஆனது. டி காக் அடித்து பின் பக்கம் சென்ற பந்தை தடுப்பதற்காக அவர் வேகமாக ஓடினார். காலில் பேட் கட்டிக் கொண்டு, கிளவுஸை தூக்கி போட்டுவிட்டு அவர் வேகமாக ஓடி பவுண்டரியை தடுத்தார்.

 அவரின் இந்த பீல்டிங் மிகவும் வைரல் ஆனது. பலரும் இவரை பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.  ''டோனிக்கு வயதாகிவிட்டது என்று கூறி இப்போதும் பலர் அவரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற சொல்கிறார்கள். ஆனால் அவர் மிகவும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்'' 
எவ்வளவு வேகம் இந்த பந்தை தடுப்பதற்காக இவர் மொத்தம் 28 மீற்றர் ஓடி இருக்கிறார். இதை இவர் மொத்தம் 6.12 நொடிகளில் கடந்து இருக்கிறார். இந்த நேரம் பந்தை தடுப்பதையும் சேர்த்து ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவர் 22 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடி இருக்கிறார், என்று கிறிக்கெற் ஜாம்பவான்கள் கணித்து இருக்கிறார்கள். காலில் பேட் கட்டிக்கொண்டு இப்படி ஓடுவது மிகவும் கடினம் ஆகும்.

 ஏற்கனவே உலகின் மின்னல் வேக மனிதனான உசேன் போல்டை விட டோனி வேகமானவர் என்று கருத்து வெளியாகி இருந்தது. பொதுவாக பேட்டிங் செய்யும் போது டோனியை எடுத்துக் கொண்டால் அவர் 20 மீற்றர் தூரத்தை கடப்பதற்கு 2.7 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். உசேன் போல்ட் முதல் 20 மீற்றர் தூரத்தை கடக்கவே 2.89 நொடிகள் எடுத்துக் கொள்கிறார். இது டோனியை விட குறைவான நேரம் ஆகும் என்றுள்ளனர்.
  

No comments: