Friday, April 20, 2018

சன் ரைசர்ஸின் வெற்றியை முடித்து வைத்த கெய்ல்ஸின் சதம்


ஐபிஎல் சீசனில் மூன்று வெற்றிகளைப் பெற்று பெருமையுடன் இருந்த ஹைதராபாத் சன் ரைசர்ஸை மொகாலியில் சந்தித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் கெய்ல்ஸின் சதத்துடன்  வெற்றி பெற்றதுமுதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் மூன்று விக்கெற்களை இழந்து 193 ஓட்டங்கள் எடுத்தது. ஹைதராபாத் நான்கு விக்கெற்களை இழந்து 178 ஓட்டங்கள் எடுத்து 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கப்டன் அஸ்வின் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இந்த சீசனில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட முடிவு செய்த முதல் கப்டன் அஸ்வின்தான்.
கெய்ல்ஸும், கே.எல்.ராகுலும் தொடக்கத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் விளையாடினார்கள். புவனேஷ்வர் குமாரும், கிறிஸ் ஜோர்டானும் சிறப்பாக வீசி ஒரு 12 பந்துகளில் ஓட்டம் எதுவும் கொடுக்கவில்லை..
கெய்ல் 14  ஓட்டங்களில் இருந்த போது ரஷீத் வீசிய பந்தை   விக்கெட் கீப்பர் சஹா ஒரு    வாய்ப்பை விட்டார்
 . கே.எல்.ராகுல் புவனேஷ்வர் குமார் பந்தில் எல்.பி. என்று  நடுவர் அறிவித்தார். ஆனால் பந்து மட்டையில் லேசாகப் பட்டது தெரியவந்ததால் ரிவியூவில் பிழைத்தார்.
பஞ்சாப் 53 ஓட்டங்கள் எடுத்தபோது ரஷீத்கானின் சுழலில் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறஙிய மயங் அகர்வால் 18 ஓட்டங்களுடன் வெளியேறினார். 11 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இரண்டு விக்கெற்களை இழந்து 83 ஓட்டங்கள் எடுத்தது. 39 பந்துகளில் அரைச்சதம் அடித்த கெய்ல்ஸ் 19 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து சதம் அடித்தார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த ஆறாவது சதம் இதுவாகும். 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.


கெய்ல்ஸ் கருண் நாயர் ஜோடி  சிறப்பாக விளையாடியது. கருண் நாயர் 31 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஆட்டநேர முடிவில் 63 பந்துகளைச் சந்தித்த கெய்ல்ஸ் ஒரு பவுண்டரி 11 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் எடுத்தார்பிஞ்ச் ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்கள் எடுத்தார். பஞ்சாப் மூன்று விக்கெற்களை இழந்து  193 ஓட்டங்கள் எடுத்தது.

கிங்ஸ் லெவன்  பஞ்சாப் 200 ஓட்டங்களைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பை  சன் ரைசர்ஸின் பந்து வீச்சாளர்கள் சிதறடித்தனர்.  7வது ஓவரில் ஹூடா 2ஓட்டங்களை மட்டும்  கொடுத்தார், 8வது ஓவரில் ரஷீத்தும்  2 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து  கொடுத்து ராகுல் (18) விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு 11 ஆவது  13வது ஓவர்களில் தலா நான்கு ஓட்டங்களே கொடுக்கப்பட்டது. புவனேஷ்வர் ஒரு ஓவரில் பவுண்டரியே கொடுக்காமல் 8 ஓட்டங்களையும் ஜோர்டான் கடைசியில் ஒரு ஓவரில் 6 ஓட்டங்களையும் கொடுத்து  கிங்ஸ் லெவன் அணியை 200 ஓட்டங்களை எடுக்க விடாமல் தடுத்தனர். சன் ரைசர்ஸ் அணியில் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெற்றை வீழ்த்தினார்இவருடைய பந்து வீச்சில் ஒரு பவுண்டரியும் 1 சிக்சரும் தான் அடிக்கப்பட்டது.. 10 பந்துகளில் ஓட்டம் எதுவும் கொடுக்கவில்லை.. ரஷீத் கான் 4 ஓவர்களில் அதிகப்படியான55  ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.


194 என்ற இலக்குடன்   களம் புகுந்த ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 15ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 57 ஓட்டங்களும், கப்டன் வில்லியம்சன் 54 ஓட்டங்களும் எடுத்தனர்.
  சன் ரைசர்ஸ் அணியில் ஷிகர் தவண் காயமடைந்து வெளியேறியது பெரிய சறுக்கலுக்கு இட்டுச் சென்றது, பாரிந்தர் ஸ்ரண் பந்து ஒன்று நல்ல லெந்த்தில் பிட்ச் ஆகி எழும்பியது தவண் கட் செய்ய முயன்றார் இடது முழங்கையில் சரியான அடி. வெளியேறினார்.
 கேன் வில்லியம்சன் (54), மணீஷ் பாண்டே (57) ஆகியோர் 3வது விக்கெட்டுக்காக 76 ஓட்டங்க்களைச் சேர்த்தாலும் தேவைப்படும் ஓட்ட விகிதத்துக்கு ஏற்ப அவர்கள் அடிக்க முடியவில்லைஆட்ட நாயகனாக கிறிஸ் கெய்ல் தேர்வு செய்யப்பட்டார். 

No comments: