Friday, April 27, 2018

பெங்களூரின் இமாலய இலக்கை விரட்டி அடித்த சென்னை



டோனி
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே சின்னசாமி ஸ்ரேடியத்தில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் லீக் போட்டியில் ஐந்து விக்கெற்களால் சென்னை வெற்றி பெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி கப்டன் டோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 20 ஓவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 205 ஓட்டங்கள் எடுத்தத்தது. 206 என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய சென்னை ஐந்து விக்கெற்களை இழந்து  207 ஓட்டங்கள் எடுத்து  வெற்றி பெற்றது.

பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லியும் குயிண்டன் டி காக்கும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். 4.2 ஓவர்களில் 35 ஓட்டங்கள் எடுத்து சென்னையின் பந்து வீச்சாளர்களை நொறுக்கினர்.தாகூரின் பந்தை கோஹ்லி ஓங்கி அடித்தபோது ஜடேஜா டைவ் அடித்து பிடித்தார். 18 ஓட்டங்களில் கோஹ்லி ஆட்டம் இழந்தார். ஒரு விக்கெற் ஓட்டமற்ற ஓவர் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். அதன் பின்னர் சென்னை ரசிகர்களின் ஆட்டம் அடங்கிவிட்டது. பெங்களூர் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச்சென்றனர்.
ராயுடு
குயிண்டன் டி காக்குடன் டிவில்லியஸ் இணைந்தார். இவர்களின் அதிரடியால் பெங்களூரின் ஓட்ட எண்ணிக்கை தாறுமாறாக உயர்ந்தது. இருவரும் அரைச்சதம் கடந்தனர். டி காக் 35 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். ஒன்பது ஓவர்களில் 103 ஓட்டங்கள் எடுத்து சென்னையின் பந்து வீச்சாளர்களைச் சோதித்தனர்.
37 பந்துகளில் ஒரு பவுண்டரி நான்கு சிக்ஸர் அடித்து 53 ஓட்டங்கள் எடுத்த டி காக், பிராவோவின் பந்தை அவரிடமே பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு விக்கெற்றுடன்  ஓவர் வீசினார் பிராவோ.இரண்டாவது விக்கெற்றுகு டிவில்லியஸ், டிகாக் ஜோடி 103  ஓட்டங்கள் சேர்த்தது.

இம்ரான் தாகிர் வீசிய 11 ஆவது ஓவரில் டிவில்லியஸ் அடித்த சிக்ஸர்111 மீற்றர் சென்றது இத்தொடரின் மிக நீளமான சிக்ஸ் இதுவாகும். பந்து காணாமல் போக புதிய பந்து பாவிக்கப்பட்டது. 30 பந்துகளுக்கு முகம் கொடுத்த டிவிலியஸ்  எட்டு சிக்ஸ் இரண்டு பவுண்டரிகளுடன் 68 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  மந்தீப் சிங்,கிரஹம் ஹோம் ,வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அதிரடியினால் பெங்களூர் 205 ஓட்டங்கள் எடுத்தது.   பெங்களூர் வீரர்கள் கடைசி ஓவரில் பதற்றமடைந்ததால் மூன்றுவிக்கற்கள் வீழ்த்தப்பட்டது.  சதூர் தாகூர், இம்ரான் தாஹிர்,பிராவோ ஆகியமூவரும் தலா இரண்டு விக்கெற்களை வீழ்த்தினர்.

206 என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய சென்னை பெங்களூர் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்வட்சன் 7, ரெய்னா 11, பில்லிங்ஸ் 9 ,ஜடேஜா 11 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். 7ஆவது ஓவரில் 3 விக்கெற்களை இழந்து 59 ஓட்டங்கள் எடுத்தது. 9 ஆவது ஓவரில் 74 ஓட்டங்கள் எடுத்த சென்னை நான்கு விக்கெற்களை எடுத்தது. சென்னையின் வெற்றி கேள்விக்குறியாக இருந்த நிலையில் ராயுடுவுடன் டோனி சேர்ந்தார். இருவரும் இணைந்து சென்னையை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 66 பந்துகளில் 132 ஓட்டங்கள் தேவை என்ற நெருக்கடியில் இருந்து  இருவரும் சென்னையை மீட்டனர்.
டிவில்லியஸ்
டோனி வந்தால் தடுத்தாடுவார் என்ற கருத்தை அவர் உடைத்தெறிந்தார்சிக்சருடன் ஆரம்பித்து சிக்ஸருடன் அணியை வெற்றி பெறவைத்தார் டோனி.பெங்களூர் பந்து வீச்சாளர்களை டோனியும் ராயுடுவும் பின்னி எடுத்தனர். 36 பந்துகளில் 80 ஓட்டங்கள் தேவை. இது சாதாரனமானதல்ல. 15  ஆவது ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரில் ஆறாவது சிக்ஸை அடித்தார் ராயுடு. கோரி அண்டர்சன் வீசிய 16 ஆவது ஓவரைஎதிர்கொண்ட ராயுடு ஓங்கி அடித்தார். மிக இலகுவாகப் பிடிக்க வேண்டிய பந்தை உமேஷ் யாதவ் தவறவிட்டார். 24 பந்துகளில் 55 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது சிராஜ் வீசிய ஓவரில் பவுண்டரி உட்பட 10 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. 29 பந்துகளில் சிக்ஸர் மூலம் டோனி  அரைச்சதம் அடித்தார். 53 பந்துகளில் மூன்று பவுண்டரி எட்டு சிக்ஸர்களுடன் 82 ஓட்டங்கள் எடுத்த ராயுடு 82 ஒட்டங்கள் எடுத்தபோது ரன் அவுட் முரையில் ஆட்டமிழந்தார். கடந்தபோட்டியிலும் ராயுடு  ரன் அவுட் முறையிலேதான் ஆட்டமிழந்தார். 5 ஆவது விக்கெற்றில் டோனி ராயுடு ஜோடி 101 ஓட்டங்கள் சேர்த்தது.
 கடைசி இரண்டு ஓவரில் 30  ஒட்டங்கள்தேவையான நிலையில் 19 ஆவது   14  ஓட்டங்கள் எடுக்கப்பட்டது சிராஜ் வீசிய அந்த ஓவரில் 5-வது பந்தில் டோனி சிக்சர் அடித்தார். வைட் போல் மூலம் மூன்று ஓட்டங்கள் மேலதிகமாகக் கிடைத்தது.

கடைசி ஓவரில் 16  ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பவுண்டரியும், 2-வது பந்தில் சிக்சரும் அடித்து பிராவோ முத்திரை பதித்தார்.  மூன்ராவது பந்தில் பிராவோ ஒரு ஓட்டம் எடுத்தார்.4-வது பந்தில் டோனி சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெற்களை இழந்து 207 ஓட்டங்கள் எடுத்து, 'திரில்' வெற்றி பெற்றது. 'டுவென்டி-20' அரங்கில் 101 வது முறையாக டோனி  ஆட்டமிழக்கவில்லை. டோனி 70 ஓட்டங்களுடனும் பிராவோ 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.ஆட்டநாயகன் விருத்டு டோனிக்கு வழங்கப்பட்டது.
கோஹ்லி


இந்தியா,   பெங்களூரு அணிகளுக்காக  இணைந்து,  100வது 'டுவென்டி-20' போட்டியில் கப்டனாக களமிறங்கினார் கோஹ்லி.. டோனி (244), கம்பீர்  (170 )  ஆவர்களுக்குப்பின், இந்த இலக்கை எட்டிய மூன்றாவது கப்டன் என்ற பெருமை பெற்றார் கோஹ்லி.

*   
வாட்சனை ஆட்டமிழக்கச்செய்த, பெங்களூரு வீரர்உமேஷ் யாதவ், .பி.எல்., அரங்கில் 100வது விக்கெட் சாய்த்தார். தவிர, இந்த இலக்கை எட்டிய 7வது வேகப்பவுலர் ஆனார்.

சென்னை, பெங்களூரு அணிகளுக்கு  '205' ரொம்ப பொருத்தம். கடந்த 2011ல் சென்னை  அடித்த (205/5) இலக்கை விரட்டி தோற்றது பெங்களூரு (147/8). அடுத்து 2012ல் பெங்களூரு (205/8) இலக்கை சென்னை (208/5) எட்டியது.  மீண்டும் பெங்களூருவுக்கு (205/8) எதிராக 207/5 ஓட்டங்கள் எடுத்து அசத்தியது சென்னை.

*
தவிர, .பி.எல்., அரங்கில், சென்னை அணி, 205 ரன்கள் என்ற இலக்கை இரண்டாவது முறையாக 'சேஸ்' செய்து அசத்தியது.



போட்டியின் 3வது ஓவரை, சகார் வீசினார். இதன் 2வது பந்தை பெங்களூரு வீரர் குயின்டன் டி காக், உயரே துாக்கி அடித்தார். இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் டோனி, ஓடிச்சென்று 'கேட்ச்' செய்ய முற்பட்டார். 'சூப்பர் மேன்' போல, வேகமாகச் செல்ல, பந்து எல்லைக் கோட்டுக்கு முன் விழுந்தது. மனம் தளராத தோனி, 'பீல்டிங்' செய்து, பவுண்டரியை தடுக்க, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

  11
வது ஓவரை வீசினார் இம்ரான் தாகிர். இந்த பந்தில் டிவிலியர்ஸ் அடித்த சிக்சர், 111 மீ., துாரம் சென்று, மைதானத்தில் மேற்கூரையில் விழுந்தது. இந்த சீசனில் அடிக்கப்பட்ட மிக நீள சிக்சராக இது அமைந்தது.


  
கோஹ்லி 18 ஓட்டங்கள் எடுத்த போது, .பி.எல்., அரங்கில், சின்னச்சாமி மைதானத்தில் மட்டும், பங்கேற்ற போட்டிகளில் 2000 ஓட்டங்கள் எடுத்த வீரர் ஆனார்.


No comments: