Tuesday, July 3, 2018

பிறேஸில் வீரர்களுடன் தனி ஒருவனாகப் போராடிய கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா



ரஷ்யாவில் நடைபெற்ற உலககிண்ண நொக் அவுட் சுற்றில் மெக்ஸிகோவை எதிர்த்து விளையாடிய பிறேஸில் புதிய சாதனைகளுடன் வெற்றி பெற்று கால் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. மெக்ஸிக்கோவுக்கு எதிராக பிறேஸில் தோல்வியடைந்ததில்லை.   மூன்று போட்டிகளில்  வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.  

51 ஆவது நிமிடத்தில்  நெய்மர்  முதல் கோல் அடித்தபோது பிறேஸிலின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் நம்பினர் பிறேஸிலுக்காக முதலாவது கோலை நெய்மர் அடித்தால் வெற்ரி நிச்சயம் என்பது வரலாறு. இதனால் வீரர்கலும் ரசிகர்களும் நம்ப்பிக்கையுடன்  இருந்தனர்.  2-0  என்ற கோல்கணக்கில்  பிறேஸில்  வெற்றி பெற்றது.

ஃபிபா உலகக்கிண்ண காலிறுதிக்கு ஐந்து முறை சாம்பியனான பிறேஸில் 16 ஆவது முறையாக நுழைந்து சாதனை புரிந்துள்ளது. ஜேர்மனி மட்டுமே 16 முறை காலிறுதிக்கு நுழைந்துள்ளது. . தற்போது அதை பிரேசில் சமன் செய்துள்ளது.  இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகளிலும்  பங்கேற்றுள்ள ஒரேஒரு நாடு பிறேஸில். ஜேர்மனி 4 முறை சம்பியனாகியது.  பிரேசில் 5 முறை வெற்றிக் கிண்ணத்தை  முத்தமிட்டது.

பிஒறேஸீலுக்கு எதிரான போட்டியில் மெக்ஸிகோ தோல்வியடைந்தாலும், கடுமையாகப் போராடியது. பிறேஸீல் வீரர்களின் தாக்குதல்களைச் சமாளித்து கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா இரண்டு கோல்களை மட்டும் விட்டுக்கொடுத்தார். கோல்கம்பத்தை நோக்கி எட்டு முறை பிறேஸில் வீரர்கள் பந்தை அடித்தனர். சிலவற்றைப் பிடித்து சிலவற்றைத் தட்டி விட்டு அதிக கோல்கள் பெறாமல் காப்பாற்றினார் கோல் கீப்பர் கிலர்மோ ஓச்சா. இந்த உலகக்கிண்ணப் போட்டியில்    ஜேர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 9 கோல்களை தடுத்து நிறுத்திய கீப்பர் கிலர்மோ ஓச்சா  20 கோல்களைத்  தடுத்துள்ளார். உலகக்கிண்ண வரலாற்றில் 7 ஆவது முறையாக நொக் அவுட் சுற்றுடன் மெக்ஸிகோவின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது.

 5, 15, 26, 29, 32, 52, 64, 67,69 ஆவது நிமிடங்களில் பிறேஸில் வீரர்கள் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளை மெக்ஸிகோவின் கோல் கீப்பர் அபாரமாகத் தடுத்தார். இவற்றில் சில பந்துகள் கோல் கம்பங்களை உரசிச் சென்றது. முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி முடிவுற்றது.

இரண்டாவது பாதியில் 51வது நிமிடம் வில்லியன் அடித்த பந்து கோல் கீப்பரை தாண்டி சென்றது. இதை அருகில் இருந்த ஜீசஸ் தவற விட, வாய்ப்புக்காக காத்திருந்த நெய்மர் பந்தை வலைக்குள் தள்ளி கோல் அடித்தார். பிறேஸீல் 1-0 என முன்னிலை பெற்றது. நெய்மர் கோல் அடித்த போட்டிகளில் பிரேசில் தோற்றது இல்லை என்பதால்இ சக வீரர்கள் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டனர்.

  71வது நிமிடம் மெக்சிகோவின் லாயுன் நெய்மரை 'பவுல்' செய்ததால் நெய்மர் வலியால் துடித்தார். இதனால் 2014 தொடரைப் போல நெய்மர் பாதியில் வெ ளியேறி விடுவாரோ என ரசிகர்கள் பயந்தனர். நல்லவேளையாக சிகிச்சைக்குப் பின் மீண்டும் களம் புகுந்தார்
86வது நிமிடத்தில் பிலிப் கூட்டினியோ வெளியேற அவருக்குப் பதிலாக   ஃபர்மினோ களமிறங்கினார்.. போட்டியின் 88வது நிமிடம் மின்னல் வேகத்தில் பந்தை கொண்டு சென்ற நெய்மர், சக வீரர் பெர்மினோவிடம் 'பாஸ்' செய்தார். இதை அவர் அப்படியே கோலாக மாற்ற  பிரேசில் வெற்றி (2-0) உறுதியானது.  

கடைசியாக மோதிய ஐந்து உலககிண்ணத் தொடரில் மெக்ஸிகோவுக்கு பிறேஸில் ஒரு கோல் கூட விட்டுக்கொடுத்தது இல்லை. அதேநேரம் 13 கோல் அடித்துள்ளனர்.

உலகக்கிண்ந்த் தொடரில் அதிக கோல் அடித்த ஜேர்மனியை  முந்தி  முதலிடம் பிடித்தது பிறேஸில். ஜேர்மனி 226கோல்கள் அடித்தது பிறேஸில் இதுவரை 228 கோல்கள் அடித்ஹ்டுள்ளது.
  மெக்சிகோவுக்கு எதிராக ஒரு கோல் அடித்த நெய்மர்  உலகக்கிண்ணப் போட்டியில் 38 முறை முயற்சி செய்து  6வது கோல் பதிவு செய்தார். முன்னாள் வீரர்கள் ராபர்டோ ரிவலினோ (6), ரெபேட்டோ (6) .ஆகியோரின் எண்ணிக்கையை சமப்படுத்ஹ்டினார். எண்ணிக்கையை சமன் செய்தார்.

அர்ஜென்டினாவின் மெஸ்சி 67, போர்ச்சுகலின் ரொனால்டோ 74 முயற்சிகளில் தான்  முதல் 6 கோல்கள் அடித்தனர்.

பிறேஸில்  அணிக்காக கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் நெய்மர் 20 கோல்கள் அடித்தார். 11 கோல்கள் அடிக்க சக வீரர்களுக்கு உதவியாக இருந்தார். ஒட்டுமொத்தமாக 89 போட்டியில் 57 கோல்கள் அடித்த நெய்மர், 35 கோல் அடிக்க உதவினார்.
பிறேஸிலின்  நட்சத்திர வீரர் நெய்மரை  'பவுல்' செய்வதில் எதிரணிகள் அதிக அக்கறை காட்டுகின்றன. சமீபத்தில் தான் வலது கால் காயத்தில் இருந்து மீண்டார். தற்போது    4 போட்டிகளில்  விளையாடிய நெய்மரை 21 முறை இடித்து தள்ளினர். 

No comments: