Wednesday, July 4, 2018

பெனால்ரி என்றால் அச்சப்படும் இங்கிலாந்து வெற்றி பெற்று சாதித்தது.


ரஷ்யாவின் ஸ்பாக்ரக் ஸ்ரேடியத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண நொக் அவுட் போட்டியில் கொலம்பியாவை எதிர்கொண்ட இங்கிலாந்து பெனால்ரியில் வெற்றி பெற்று காலிறுப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

இரண்டு அணி வீரர்களும் மிகவும் மூர்க்கத்தனமாக மோதினர். வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்ற ஒரே ஒரு குறுக்கோளுடன் மோதியதால் ஃபவுலுக்குப் பஞ்சமில்லாதிருந்தது. கொலம்பிய வீரர்கள் 14 முறையும் இங்கிலாந்து வீரர்கள் 16 முறையும் கோல் அடிக்க முயன்றனர். கொலம்பிய கோல்கீப்பர் மூன்று முறையும் இங்கிலாந்து கோல்கீப்பர் ஐந்து முறையும்  பந்தைத் தடுத்தனர். கோல் எதுவும் இல்லாமல் முதல் பாதி முடிந்தது.

இரண்டாவது பாதி ஆரம்பித்த 57 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடித்தது.  இங்கிலாந்துக்கு கோனர் வாய்ப்பு கிடைத்தது.அப்போது கொலம்பிய வீரர் கார்லோஸ் சாஞ்சேஸ்,இங்கிலாந்தின் ஹரி கேனை முறையற்ற வகையில் தடுத்தபோது நடுவர் பெனால்ரி கொடுத்தார். இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஹரி கேன் அதனை கோலாக்கினார். தங்கக் காலணிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்   ஹரி கேனின் 6 ஆவது கோலாகும்.  இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகித்தது. பதில் கோல் அடித்து சமப்படுத்த கொலம்பிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

90 நிமிடம் முடிந்து மேலதிக நேரம்  போட்டி தொடர்ந்தது.இங்கிலாந்து ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைத் தொட்டது. கொலம்பிய ரசிகர்கள் கண்ணீருடன் சோகமாக இருந்தனர். 93 ஆவது  நிமிடத்தில் கொலம்பிய ரசிகர்கள் துள்ளிக் குதித்து உற்சாகமடைந்தனர்.

93 ஆவது நிமிடத்தில் 25 அடி தூரத்திலிருந்து  கொலம்பிய வீரர் யூரிபி அடித்த   ஷாட் வலது புறம் கோல் மேல் மூலையை நோக்கி உள்ளுக்குள் சென்று கொண்டிருந்த போது இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு அருமையாக எம்பித் தட்டி விட்டார். இதன் விளைவாக கொலம்பியாவுக்குக் கார்னர் வாய்ப்புக் கிடைத்தது கொலம்பிய வீரர் மினா வலுவாக பந்தை முட்ட பந்து தரையில் பட்டு ட்ரிப்பியருக்கும் மேல் எழும்பி கோலுக்குள் சென்றது.  கொலம்பியா அடித்த கோலால்   1-1 என போட்டி சமமானது.

கொலம்பிய ரசிகர்கள் உற்சாகமானார்கள். வெற்றிக்கொண்டாட்டத்தில்  மகிழ்ந்திருந்த இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடைசி விசில் ஊதும் வரை சந்தோசம் நீடிக்காது வெற்றி பறிக்கப்படலாம் என்பதை இந்தப் போட்டி மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தியது. மேலதிகமாக வழங்கப்பட்ட  30 நிமிட நேரத்தில் கோல் எதுவும் அடிக்கப்படாமையால்  இரண்டு அணிகளுக்கும் தலா ஐந்து பெனால்ரி வழங்கப்பட்டது.

பெனால்ரி என்றால் இங்கிலாந்துக்கு தொடை நடுக்கம். 1990, 1998, 206 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் பெனால்ரியில் தோல்வியடைந்து இங்கிலாந்து வெளியேறியது. இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் கலக்கமடைந்தனர். மெக்ஸிகோ ரசிகர்கள் உற்சாகமாகினர்.
1 கொலம்பியாவின் ஃபால்கோ முதல் பெனால்டியை அடித்தார். கோல் 1-0 
1 இங்கிலாந்தின் ஹரி கேன் அடுத்து அடித்தார். கோல் 1-1

2   கொலம்பியாவின் குவாட்ராடோ கோல் அடிக்க 2-1

2 இங்கிலாந்து  ராஷ்போர்ட் அடித்தது கோலானது. 2-2.

3 கொலம்பியாவின் மியூரியல் கோலுக்குள் செலுத்தினார்   3-2.

3 இங்கிலாந்து வீரர் ஜோர்டான் ஹெண்டர்சன் அடித்த பக்கவாட்டு பாத உதையை ஆஸ்பினோ இடது புறம் பாய்ந்து தட்டிவிட கொலம்பியா 3- இங்கிலாந்து 2  கொலம்பியா முன்னிலை பெற்றது. யூரோ கிண்ணப் போட்டியிலும் இவர் பெனால்ரியை கோலாக்கவில்லை. 

4  கொலம்பியாவின் யூரிபி அடித்த பந்து மேலே கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.  கொலம்பியா 3- இங்கிலாந்து 2.

4 இங்கிலாந்தின் டிரிப்பியர் அடித்த பந்து கோலானது.   3-3 இங்கிலாந்து ரசிகர்கள் திருப்தியடைந்தனர்.

5 கொலம்பியாவின் கார்லோஸ் பாக்கா அடித்த பந்தை  இங்கிலாந்து கோல் கீப்பர் பிக்ஃபோர்டு தடுக்க 3-3. எனும் சமனிலை தொடர்ந்தது.

5 இங்கிலாந்தின் வெற்ரிக்காக எரிக் டயரின்  காலை அனைவரும் உற்று நோக்கினர்.   அது கோலாக வேண்டும் என இங்கிலாந்து ரசிகர்காலௌம் கோல் போகக்கூடாது என கொலம்பிய வீரர்களும் எதிர்பார்த்தனர் இங்கிலாந்தின் எரிக் டயர் தாழ்வாக கோல் நோக்கி அடிக்க kool kiippar ஆஸ்பினோ வலது புறம் பாய்ந்தார். அடித்தார் பந்து அவர் விரல்களில் பட்டு வலையில் தஞ்சமடைந்தது 4-3 எனும் கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இங்கிலாந்து   பெனால்ரியில் வெற்றி பெற்றதை அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
 மெக்ஸிகோ 23 ஃபவூல் செய்ததது. 6 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இங்கிலாந்து 13 ஃபவூல் செய்ததது.2 வீரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.



 பெக்கம்,ரூனி வரிசையில் இந்தத் தொடரில் 7  கோல் அடித்த ஹரி கேன்  இங்கிலாந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். காலிறுதிப் போட்டியில் சுவீடனுடன் இங்கிலாந்து மோதுகிறது. சுவீடனைச் சந்திக்கிறது.,

1966 ஆம் ஆண்டு சம்பியனான இங்கிலாந்து,இதுவரை நடைபெற்ற  உலகக்கிண்ண    நொக் அவுட் சுற்றுகளில் மிகவும் வலுவான ஐந்து அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.   1970, 1990,2010,  ஜெர்மனியிடம்  2006 ஆம் ஆண்டு போத்துகலிடமும்  1962,  2002, ஆம் ஆண்டுகளில் பிறேஸிலிடமும் 1986, 1998 ஆம் ஆண்டுகளில் ஆஜென்ரீனாவிடமும்.   1954 ஆம் ஆண்டு உருகுவேயிடமும்  நொக் அவுட் சுற்றில் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

No comments: