ரஷ்யாவில்
நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில்
குரோஷியாவை எதிர்த்துவிளையாடிய பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது
முறையாக சம்பியனாகியது.
21
ஆவது ஃபிபா உலகக்கிண்ண உதைப்ந்தாட்டத்தொடர் ரஷ்யாவில் ஒருமாதமாக நடைபெற்றது. 32 நாடுகள்
போட்டியிட்ட இந்த உதைபந்தாட்டத் திருவிழாவின்
இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில்
நடைபெற்றது.
ரஷ்ய ஜனாதிபதி புடின், பிரான்ஸ் ஜனாதிபதி குரோஷிய ஜனாதிபதி ஆகியோர் இறுதிப் போட்டியை நேரடியாகக்
கண்டு ரசித்தனர். உலகக்கிண்ண சம்பியனாகும் என எதிர்பார்க்கப்பட்ட பிறேஸில்,ஜேர்மனி,ஆர்ஜென்ரீனா
ஆகியவை ரசிகர்களை ஏமாற்றிவிட்டன. நெய்மர்,மெஸ்ஸி,ரொனால்டோ ஆகியோரின் மீது ரசிகர்கள்
நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றமாகின.
ஆட்டத்தின்
9வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் கப்டன் லுகா மாட்ரிச்
துாக்கி அடித்த பந்தை பிரான்ஸின் பவார்டு தலையால் முட்டி தடுத்தார். இந்நிலையில்
18வது நிமிடத்தில் கிரீஸ்மேனை குரோஷியாவின் மார்சிலோ புரோஜோவிச் 'பவுல்' செய்ய
பிரான்ஸ் அணிக்கு 'பிரீ கிக்' வழங்கப்பட்டது. இதில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்து
குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜூகிச் தலையில் பட்டு 'சேம்சைடு' கோலானது. அப்போது மைதானத்தில்
இருந்த குரோஷிய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
21வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு கிடைத்த 'பிரீ
கிக்' வாய்ப்பில் மாட்ரிச் அடித்த பந்தை விடா 'கோல்போஸ்ட்டுக்கு' மேலே அனுப்பி வீணடித்தார்.
ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் மாண்ட்ஜூகிச் அடித்த
பந்தை பெற்ற விடா, இவான் பெரிசிச்சிடம் 'பாஸ்' செய்தார். சிறிதும் தாமதிக்காத பெரிசிச்
பந்தை கோலாக மாற்றிஇ 1-1 என சமநிலை பெறச் செய்தார்
ஆனால்
இது நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த 'கார்னர்'
வாய்ப்பில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்தை குரோஷியாவின் பெரிசிச் கையால் தடுத்து
வெளியே அனுப்பினார். இதற்கு பிரான்ஸ் வீரர்கள் 'மேட்ச் ரெப்ரியிடம்' முறையிட்டனர்.
அவர், உடனடியாக 'வி.ஏ.ஆர்.' தொழில்நுட்ப உதவியை நாடினார். இதில் 'ரெப்ரி', நடந்த சம்பவத்தை
'ரீப்ளே'யில் பார்த்து முடிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 'ரீப்ளே'யில் பந்து
கையில் பட்டுச் சென்றதை உறுதி செய்த 'ரெப்ரி' பிரான்ஸ் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு
வழங்கினார். இதில் கிரீஸ்மேன் (38வது நிமிடம்) ஒரு கோலடித்தார்.
முதல்
பாதி முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது
பாதியின் 48வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு அடுத்தடுத்து கிடைத்த 3 'கார்னர்' வாய்ப்புகளில்
கோலடிக்கவிடாமல் பிரான்ஸ் அணியினர் சாமர்த்தியமாக செயல்பட்டனர். ஆட்டத்தின் 59வது
நிமிடத்தில் கிரீஸ்மேன் 'பாஸ்' செய்த பந்தை பால் போக்பா கோலாக்க முயற்சித்தார். அதனை
குரோஷியாவின் விடா தடுத்தார். அப்போது திரும்பி வந்த பந்தை போக்பா கோலாக்கினார்.
தொடர்ந்து அசத்திய பிரான்ஸ் அணிக்கு 65வது நிமிடத்தில் ஹெர்ணான்டஸ் 'பாஸ்' செய்த பந்தில்
கிலியன் எம்பாப்பே ஒரு கோலடித்து 4-1 என முன்னிலை பெற்றுத் தந்தார். இந்நிலையில்
69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியுகோ லோரிஸ் பந்தை உம்டிடியிடம் 'பாஸ்'
செய்ய முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த குரோஷியாவின் மாண்ட்ஜூகிச் பந்தை தடுத்து
கோலாக்கினார். தொடர்ந்து போராடிய குரோஷிய அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர
முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுஇ 2வது முறையாக (1998,
2018) கோப்பை வென்றது.
போட்டி
துவங்குவதற்கு முன்இ கடந்த 2014ல் கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு கேப்டனாக இருந்த பிலிப்
லாம் சாம்பியன் கோப்பையை மைதானத்திற்குள்
கொண்டு வந்தார்.
குரோஷியாவுக்கு
எதிராக பிரான்ஸ் அணி 4 கோல் அடித்தது. இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து பைனலில்இ
48 ஆண்டுகளுக்கு பின்இ ஒரு அணி 4 கோல் அடித்துள்ளது. கடைசியாக கடந்த 1970ல் மெக்சிகோவில்
நடந்த தொடரின் பைனலில் பிரேசில் அணி 4-1 எனஇ இத்தாலியை வென்றது.
பிரான்ஸ்
அணிக்கு வழங்கப்பட்ட 'பெனால்டி' வாய்ப்புஇ உலக கோப்பை பைனலில் ஒரு அணிக்கு கிடைத்த
6வது 'பெனால்டி'. கடந்த 2006ல் இத்தாலிக்கு எதிரான பைனலில் பிரான்சின் ஜிடேன்இ 'பெனால்டி'
மூலம் கோலடித்திருந்தார்.
உலக
கோப்பை பைனலில் 'சேம்சைடு' கோலடித்த முதல் வீரரானார் குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜூகிச்.
No comments:
Post a Comment