பிறேஸில்
,பெல்ஜியம் ஆகியன மோதிய இந்தப்போட்டி உலகக்கிண்ண வரலாற்றில் பேசப்படும் போட்டியாக இருக்கப்போகிறது. உதை பந்தாட்ட அணிக்குத்
தேவையான சகலதையும் நேர்த்தியாகக் கொண்டிருக்கும் பிறேஸிலின் தோல்விக்கு பெல்ஜியத்தின் கோல்கீப்பர் கோர்ட்வா
மிக முக்கியமானவராக இருக்கிறார். அவரது கைகள்
மந்திரக்கைகளா, ,மாயக்கைகளா அதிர்ஷ்டக் கைகளா எனத் தெரியவில்லை. அவர் துடிப்பாகவும் வேகமாகவும் விவேகமாகவும்
செயற்பட்டமையால் உலகக்கிண்ணத் தொடரில் அதிக கோல்கள் வாங்கிய அணியாக பெல்ஜியம் விளங்கி
இருக்கும்.
இந்த
உலகக்கிண்ணத் தொடரில் விளையடிய அனைத்துப் போட்டிகளிலும் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது.
பெல்ஜியத்தின் லுகாகு 4 கோல்களுடன் அதிக கோலடித்தோரில் 2வது இடத்தில் உள்ளார் ஜப்பானுக்கு
எதிரான போட்டியில் 2-0 என பின்தங்கிருந்த நிலையில்
இருந்து தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து அபாரமாக வென்றது பெல்ஜியம். ஆனால்,பிறேஸிலுக்கு
எதிரான போட்டியில் அப்படியான ஒரு வெற்றியைப்
பெற முடியாது
போட்டி
ஆரம்பித்ததும் இரண்டு நாடுகளின் ரசிகர்களும் உற்சாகமாகினர். கோல் அடிக்கும் முனைப்பில் இரண்டு அணி வீரர்களும் பந்தைக் கடத்திச்
சென்றனர். அவர்கள் கோல் அடிக்க செய்த முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.
பிறேஸில்
வீரர்களான நெய்மர், மார்செலோ, தியாகோ சில்வா,
வில்லியன், கொடினியோ ஆகியோரின் பலமான ஷொட்கள்
அவையும் கோலாகவில்லை. அவர்கள் அடித்த 10 ஷொட்கள் மிகவும் அபாரமானவை அவற்றை பெல்ஜியத்தின்
கோல் கீப்பரான கோர்ட்வா, பிடித்தும் தட்டியும்
விட்டதால் பெல்ஜியம் வெற்றி பெற்றது. பெல்ஜியத்தில்
லுகாலு தன் பங்குக்கு பிறேஸிலின் பின் கள வீரர்களைத் திணறடித்தார்.
போட்டி
தொடங்கிய தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே
பெல்ஜியத்தின் பொக்ஸ் பகுதியை பிறேஸில் வீரர்கள் முற்றுகையிடத் தொடங்கினர்.
.
8-வது நெய்மர் அடித்த கோர்னர் கிக்கை கோலாக தியாகோசில்வா முயற்சிக்க அது போடில் பட்டுத்
திரும்பியது. அந்த அதிர்ச்சியில் இருந்து சில்வா மீள்வதற்கிடையில் கோல்கீப்பர் பந்தைத்தட்டிவிட்டார்.
13 ஆவது
நிமிடத்தில் பெல்ஜிய வீரர் சாட்லி அடித்த
பந்தைத் தடுக்க பிறேஸில் வீரர் ஃபெர்னான்டினியோ
முயற்சி செய்தபோது பந்து கோலானது. ஃபெர்னாண்டினியோவின் அந்த ஓன் கோல்தான் பிறேஸிலின் தோல்விக்குக் காரணம் என்பதை
யாரும் அப்போது உணரவில்லை
31 ஆவது நிமிடத்தில்
லுகாலு கொடுத்த பந்தை டி புருனே கோலாக்க
2-0 என பெல்ஜியம் முன்னில பெற்றது.
36-வது
நிமிடத்தில் பிறேஸிலின் மார்செலோ கொடுத்த பந்தை கெப்ரியல் ஜீஸஸ் அடித்த போது அது வெளியா
போனது. மார்செலோ தனக்குக் கிடைத்த பந்தை கொடினியோவிடன்
அனுப்பினார் கொடினியோ அதை கோல் கம்பத்தை நோக்கி அடித்தார் கோல் கீப்பர் விரைந்து சென்று
அதனைத் தடுத்தார்.
76 ஆவது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பந்தைப் பெற்ற
மாற்று வீரராகக் களம் இறங்கிய அகஸ்டோ ஹெட்டர்
கோலாக்கினார். 2- 1என பிறேஸில் நெருங்கியது. போட்டி முடிவதற்கிடையில் இன்னும் ஒரு கோல்
அடித்து விடலாம் என பிறேஸில் வீரர்கள் முயற்சி
செய்தனர்.
91வது நிமிடத்தில் நெய்மரைத் துரத்திச்சென்ற மியூனியர்
அவரின் கண்ணை மறைத்துத் தள்ளினார். பிறேஸில் வீரர்கள் பெனால்ரி
94வது
நிமிடத்தில் டக்ளஸ் கோஸ்டா வலது புறத்திலிருந்து வெட்டி உள்ளே கொண்டு வந்து நெய்மருக்கு
பந்தை அனுப் கோலின் வலது மூலையைக் குறிவைத்து
அவர் அடித்த ஷாட்டை கோல் கீப்பர் கோர்ட்வா முழுதும் எம்பி விரல் நுனியால் தட்டி விட்டார்.
2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜியம், 1986-ம்
ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்குத் தகுதிபெற்றது பெல்ஜியம்
பெல்ஜியம்
ரசிகர்களுக்கு இந்த உலகக்கிண்ணத் தொடரை மறக்க முடியாது. 2014-ம் ஆண்டு உலகக்கிண்ணப்
போட்டியிலும் 2016-ம் ஆண்டு யுரோ தொடரிலும்
பெல்ஜியம் காலிறுதியில் தோல்வியடைந்தது. ப்.
இந்த உலககிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெல்ஜியம் பதிவு செய்திருக்கிறது.
உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அரை இறுதியில் பிறேஸில், ஆர்ஜென்ரீனா,ஜேர்மனி ஆகிய நாடுகள் இல்லாத
முதலாவது அரை இறுதிப் போட்டி.
பிறேஸில் வீரர் பெர்னாண்டோ 'சேம் சைட்' கோல் அடித்தார்.
இது இத்தொடரில் 11வது 'சேம் சைட்' கோலாக அமைந்தது.
இதன்மூலம் அதிக 'சேம்சைடு' கோல் பதிவான தொடர்களின்
வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. பெனார்ண்டோ உலகக்கிண்ணப்போட்டியில் 100 ஆவது சேம்
சைட் கோலடித்த வீரராவார். இதுவரை 116 சேம்
சைட் கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
உலக
கோப்பை தொடரில் 'சேம் சைட்' அடித்த 2வது பிறேஸில் வீரரானார் பெர்னாண்டோ. இதற்கு முன்
2014ல் மார்செலோ இந்த முறையில் கோல் அடித்திருந்தார்.
இதே
மைதானத்தில் ஜேர்மனி
, ஆர்ஜென்ரீனா,ஆகிய நாடுகல் தோல்வியடைந்து வெளியேறின. இப்போது பிறேஸில் வெளியேறியுள்ளது. பெரிய பெரிய
அணிகளை குழிதோண்டிப் புதைக்கும் இடுகாடோ இந்த மைதானம்?உலகக்கிண்ணப் போட்டித் தொடரில்
தொட்ர்ச்சியாக ஏழாவது முறையாக காலிறுதியில் விளையாடிய பிறேஸில் 2006, 2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதியில் வெளியேறியது போன்று இம்முறையும் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது சகல காலிறுதிப்
போட்டிகளிலும் ஐரோப்பிய நாடுகளே பிறேஸிலை வெளியேற்றின.
பந்தைக்
குறைந்த நேரம் வைத்திருந்த நாடுகளே இந்த உலகக்கிண்னத்
தொடரில் வெற்றி பெற்றுள்ளன. பிறேஸில் 24 முறையும் பெல்ஜியம் 11 முறையும் கோல் அடிக்க
முயற்சி செய்தன. அவற்ரில் பிறேஸிலின் 10 முயற்சிகலையும் பெல்ஜியத்தின் 4 முயற்சிகளையும்
கோல்கீப்பர்கள் தடுத்து விட்டனர்.
No comments:
Post a Comment