ரஷ்யாவின்
சோச்சி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் போத்துகலும்
உருகுவேயும் மோதின. ரொனால்டோ என்ற நட்சத்திரத்தை
மட்டுமே போத்துகல் நம்பி இருந்தது. சுவாரஸ்,கவானி ஆகியவர்களுடன் பலமான அணியாக உருகுவே
களம் இறங்கியது. உருகுவேயின் பலமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத போத்துகல் 2-1
என்ர கோல்கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.
உருகுவேயும்
போத்துகலும் லீக் போட்டியில் தோல்வியடையாமல்
இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. எகிப்தையும் சவூதியையும் 1-0 என்ற கோல்கணக்கில்
வென்ற உருகுவே, ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. உருகுவேக்கு எதிராக கோல் அடிக்கப்படவில்லை.
லீக் சுற்றில் முதலில் ஸ்பெயினைச் சந்தித்த போத்துகல்
3 -3 என்ர கோல்கணக்கில் சமப்படுத்தியது. 1-0 என்ர கோல்கணக்கில் மொராக்கோவை வென்றது.
ஈரானுடனான போட்டி போத்துகலுக்கு ஈடாட்டம் கொடுத்தது. ஈரானை போத்துகல் வென்றுவிடும்
என ஒட்டு மொத்த ரசிகர்களும் நம்பிக்கொண்டு இருந்தனர். 1-1 என்ற கோல்கணக்கில் போத்ஹ்டுகலுக்கு எதிரான போட்டியை
ஈரான் சமப்படுத்தியதால் ரசிகர்கள் ஆச்ச்சரியமடைந்தனர்.
போத்துகலுக்கும்
உருகுவேக்கும் இடயிலான போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் கவானி கோல் அடிக்க உருகுவே முன்னிலை
பெற்றது.பதில் கோல் அடிக்க போத்துகல் முயற்சி செய்தது. அதன் முயற்சிகள் அனைத்தும் உருகுவேயின்
பலமான தடுப்பரணைத் தாண்டி செல்ல முடியவில்லை.
55
ஆவது நிமிடத்தில் போத்துகல் வீரர் பீபே கோல் அடிக்க 1-1 என சமநிலையானது. 62 ஆவது நிமிடத்தில்
கவானி கோல் அடிக்க 2-1 என உருகுவே முன்னிலை பெற்றது. கோல் அடிப்பதற்காக இறுதிவரை போராடிய போத்துகல் தோல்வியுடன் வெளியேறியது.
உருகுவே
வீரர்கள் வசம் 30% தான் பந்து இருந்தது. போத்துகல் கோல் அடிப்பதற்காக 20 முறை முயற்சி
செய்தது.
2006 ஆம் ஆண்டு முதல் உலகக்கிண்ணப் போட்டியின் நொக்
அவுட் சுற்றில் மெஸ்ஸியும் ரொனால்டோவும் கோல் அடித்ததில்லை. அதேவேளை மற்றைய வீரர்கள்
கோல் அடிக்க உதவவில்லை என்பது கசப்பான புள்ளி விபரம்.
ஆட்ட
நாயகன் எடின்சன் கவானி, இந்த உலகக்கிண்ணப் போட்டியில் தனது கோல் கணக்கை
3ஆக உயர்த்தியுள்ளார். மொத்தமாக 45 கோல்களை சர்வதேச போட்டிகளில் அடித்துள்ளார் உருகுவே
முதல் முறையாக உலகக்கிண்ண வரலாற்றில் முதல்
4 போட்டிகளை வென்றுள்ளது.
No comments:
Post a Comment