உலகக்கிண்ண நொக்
அவுட் சுற்றில் ரஷ்யாவின் ரோஸ்டோவ் அன்ரான்
நகரில் பெல்ஜியத்துக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய ஜப்பான் 3-2 என்ற கோல்கணக்கில்
பரிதாபமாகத் தோல்வியடைந்தது
ஜி பிரிவில் இடம்பெற்றிருந்த
பெல்ஜியம் மூன்று ஆட்டங்களிலும் வென்றது. பனாமாவுடன் 3-0, துனீஷியாவுடன் 5-2, இங்கிலாந்துடன்
1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குத்
தகுதி பெற்றது.
எச் பிரிவில்
இடம்பெற்றிருந்த ஜப்பான் கொலம்பியாவை 2-1 என வென்றது. செனகலுடன் 2-2 என சமப்படுத்தியது..
போலந்திடம் 1-0 என தோல்வியடைந்தது. கடைசியில் ஃபேர் பிளே அடிப்படையில் செனகலை பின்னுக்கு
தள்ளி முன்னேறியது செனகலும் ஜப்பானும் ஒரு போட்டியில் வெற்றிபெற்று, ஒரு போட்டியில் தோல்வியடிஅந்து, ஒரு போட்டியைச் சமப்படுத்தின.
அடித்த கோல்கள்,வங்கிய கோல்கள், புள்ளிகள்
அனைத்தும் சமமாக இருந்தமையினால் குரந்த மஞ்சள் அட்டைகளைப் பெற்ற ஜப்பான் ஃபேர் பிளே
அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. உலகக்கிண்ண வரலாற்றில் ஃபேர் பிளேயில்
தகுதி பெற்ற ஒரே ஒரு நாடு ஜப்பான்தான்
ஜப்பானைவிட பலம்வாய்ந்த
ஐரோப்பிய அணியான பெல்ஜியம் இலகுவாக வென்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில்
இரண்டு கோல்கள் அடித்ஹ்டு முன்னிலை பெற்ற ஜப்பான் கடசி நிமிடம் வரை பெல்ஜியத்தை மிரட்டியது.
முதல் பாதி நேரம் முடியும் வரை கோல்
அடிக்கும் முயற்சிகள் எஅவையும் வெற்றி பெறவில்லை.. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெல்ஜியம் - ஜப்பான்
அணிகள் 0-0 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால்
ஆட்டத்தின் 48-வது
நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஜெங்கி ஹராகுசி ஒரு கோல் அடித்தார். 52 வது
நிமிடத்தில் டகாஷி இனுல் ஒரு கோல் அடிக்க ஜப்பான் 2-0 என முன்னிலை பெற்றது. ஜப்பன் ரசிகர்கள் உற்சாகமாகினர். பெல்ஜிய வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பெல்ஜியம் அணியின் ஜேன் வெர்டோகன் 69-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அதைத்தொடர்ந்து 74 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் மரானே பெலானி ஒரு கோல் அடித்தார். இதனால்
இரு அணிகளும் 2-2 என்ற
கோல் கணக்கில் சமனிலை வகித்தன. வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு அணிவீரர்களும்
எதிரணியின் கோல்கம்பத்தை முற்றுகையிட்டனர்.
காயம்,நேரவியரம்
ஆகியவற்றுக்காக கூடுதலாக நான்கு நிமிடம் வழங்கப்பட்டது.அந்த சந்தர்ப்பத்தில்பெல்ஜியம் வீரர் நாசர் சடி 94வது
நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.ஜப்பானை 3-2 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்குள் நுழைந்தது தோல்வியடைந்தாலும்
இரண்டாவது சுற்றுவரை முன்னேறிய மகிழ்ச்சியுடன் ஜப்பான் வீரர்கள் மைஅதானத்தை விட்டு
வெளியேறினர்.
No comments:
Post a Comment