ரஷ்யாவின்
சென்[பீற்றர் பாக்கில் நடைபெற்ற உலகக்கிண்ண
உதைபந்தாட்ட முதலாவது அரை இறுதிப் போட்டியில்
பெ;ல்ஜியத்துடன் மோதிய பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில்
விளையாடத் தகுதி பெற்றது. 1998, 2006 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடிய
பிரான்ஸ் 1998 ஆம் ஆண்டு சம்பியனாகியது.
20 வருடங்களின் பின்னர் பிரான்ஸ் சம்பியனாகும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
1998 ஆம்
ஆண்டு தாய்நாட்டில் நடைபெற்ற உலகக்கிண்ணப்போட்டியில்
பிறேஸிலை 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற பிரான்ஸ் சம்பியனாகியது. 2006 ஆம் ஆண்டு ஜேர்ர்மனி நடைபெற்ற இறுதிப்
போட்டியில் பெனால்ரியில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது ஐரோப்பியக் கண்டம் பிரான்ஸுக்க் வெற்றியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற ரசிகர்களிடம் உள்ளது. பிரான்ஸை எதிர்த்து விளையாடப் போவதும் ஐரோப்பிய
நாடுதான் என்றமும் ரசிகர்களிடன் இருக்கிரது. முன்னதாக ஐரோப்பிய நாட்டிடம் தான் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோல்வியடைந்தது.
பிரான்ஸ் , பெல்ஜியம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெறப்போகும்
போட்டியில் பெல்ஜியம் வெற்ரி பெறும் என்றே ரசிகர்கள் பதிவிட்டனர். போட்டி நடைபெறுவதற்கு
ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் 50க்கு 50 வெற்றி என ஃபீபாவில் ரசிகர்கள் கருத்திட்டனர். முடிவை அரிவதற்கு
பெலான்ரிவரை காத்திருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
பெல்ஜியத்தின்
தாக்குதலும் தற்பாதுகாப்பும் எதிரனிக்கு அச்சுறுத்தலக் கொடுக்ககூடியவை. பிரான்ஸும்
அதேபோன்றுதான். பிரான்ஸ் ஒரு கோல் அடித்துவிட்டால்
தற்பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும். சந்தர்ப்பம்
கிடைத்தால் இன்னொரு கோல் அடித்துவிடும். முன்கள, பின்கள, நடுக்கள வீரர்கள் ஆக்ரோஷமாக
ஓடி விளையாடினாலும் இரண்டு கோல் கீப்பர்களின் வேகம்,விவேகம், துடிப்பு ஆகியன கோல் இல்லாமல்
தவிர்த்தன. பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ், பெல்ஜியம் கோல் கீப்பர் கோட்வா இந்தப் போட்டியின் ஹீரோக்கள். போட்டி ஆரம்பமான
10 நிமிடங்களில் கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை
பிரான்ஸ் வீரர்கள் தவறவிட்டனர். இதே
போன்று பெல்ஜியம் வீரர்களின் முயற்சிகளும் கோலாகவில்லை.
முதலாம்
நிமிடத்திலேயே கிலியான் பாப்பே மிரட்டினார்.
4 ஆவது நிமிடத்தில் டிபுருய்ன் அடித்த ஷாட் ஒன்று
கோலிலிருந்து 6 அடியிலிருந்த ‘ப’-வுக்குள் செல்ல பவார்ட் அதனை அபாய இடத்திலிருந்து நகர்த்தினார்.
6
ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஹசார்ட் அடித்த பந்தை பிரான்ஸின் டீட்டி தடுத்ததால்
கோனர் கிடைத்தது.
15 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரரிடமிருந்து பந்தைப்
பறித்த விட்செல் பந்தை டிபுருய்னுக்கு அனுப்ப காண்ட்டேயைத் தாண்டி லுகாகுவுக்கு கொடுத்தார்.
பந்து சென்ற இடத்தில் லுகாலு இல்லை.
19
ஆவது நிமிடத்தில் மீண்டும் பெல்ஜியம்
21
ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் டிபுருன்ய் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்து கோனராகியது. அடிக்கப்பட்ட
கோனர் ஆல்டர்வெரியெல்டுக்கு பின்னால் விழ அவர் திரும்பி 14 அடியிலிருந்து கோல்கம்பத்தை நோக்கி அடித்தார். பெல்ஜிய ரசிகர்கள் உற்சாகமாக எழுந்து கோலை எதிர்
பார்த்து ஆர்ப்பரித்தனர். ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை அபாரமாகத் தடுத்தார்.
பெல்ஜிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்த
னர். இது பெல்ஜியத்துக்கு பறிபோன முதல் கோல் சந்தர்ப்பமாகும்.
28
ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஸ்டார் டிபுருய்ன்
கோல் நோக்கி அடித்தார் ஆனால் டீட்டி அதனை தடுத்து
விட்டார்.
ஒவ்வொரு
நிமிடமும் பதற்றமானது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 51 ஆவது நிமிடம் பிரான்ஸுக்கு கோனர்
வாய்ப்பு வந்தது. கிரீஸ்மேன் கோனரை அடித்தார். மேலே எழும்பிவந்த பந்தை நோக்கி இரண்டு
அணி வீரர்களும் பாய்ந்து எழும்பினர். ஃபெல்லானியின்
தலையில் பட்ட பந்து கோல் வலையில் முட்டியது. பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்
குதித்தனர்.1-0. என பிரான்ஸ் முன்னிலையானது.
போட்டி முடியும் வரை இரண்டு அணி வீரர்களும் கோல்
அடிக்க முயற்சி செய்தனர். எவையும் பலனளிக்கவில்லை. பதற்றத்தில் இரண்டு வீரர்களும் செய்த
தவறுகளால் கோல் அடிக்கும் சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.
60% சதவிகித பொசஷன், 594 பாஸ்கள், 5 கோனர்,
கோலை நோக்கி அடித்த 9 ஷொட்களில் 3 ஒன் டார்கெட் ஷாட்கள், 91% பாஸ் அக்யூரசி என ஆட்டத்தில்
பெல்ஜியம் ஜொலித்தது
40%
சதவிகித பொசஷன்,324 பாஸ்கள், 4
கோனர், கோலை நோக்கி அடித்த 19 ஷொட்களில் 5ஒன் டார்கெட் ஷாட்கள், 86% பாஸ் அக்யூரசி என ஆட்டத்தில்
பிரான்ஸ் பின்னிலையில் இருந்தாலும் வெற்றிபெற்றது என்னவோ பிரான்ஸ்தான்.
2016
யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியடைந்த பிரான்ஸ், அடுத்த இரண்டு
ஆண்டுகளில் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு
முன்னேறியுள்ளது இரண்டு ஆண்டு இடைவெளியில் ஃபீபா
இரண்டு பெரிய போட்டிகளின் இறுதிப் போட்டியில் முன்னேறுவது என்பது உதைபந்தாட்ட வரலாற்றில் சாதாரண சம்பவமல்ல. இதே சாதனையுடன்
அடுத்த சாதனைக்கு தயாராக காத்திருக்கிறது பிரான்ஸ்.
No comments:
Post a Comment