Thursday, July 5, 2018

காலிறுதிப் போட்டியில் கலக்கப்போகும் நாடுகள்


 உலகக்கிண்ணப் போட்டியின் நொக் அவுட் சுற்றுகள் முடியடைந்து காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்த நாடுகள் வெளியேறி புதியவை காலிறுதியில் மோதுகின்றன. 2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் விளையாடிய பிறேஸில்,பிரான்ஸ்,பெல்ஜியமாகியவை இம்முறையும் காலிறுதிக்குத் தகுதி பெற்றன.

  . 21 ஆவது  ஃபிபா உலகக்கிண்ணப் போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. இவை தலா 4 நாடுகள் என  8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஜூன் 14 ஆம் திகதி துவங்கிய பிரிவு சுற்று லீக் ஆட்டங்கள் 28 ஆம் திகதியோடு முடிந்தன.

 ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. நொக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஜூன் 30 ஆம் திகதி ஆரம்பமாகி  ஜூலை 3 ஆம் திகதி வரை நடந்தன. இதில் வெற்றி பெற்று பிரான்ஸ், உருகுவே,  பிரேசில்,  பெல்ஜியம்,  ரஷ்யா,  குரேஷியா,  சுவீடன்,  இங்கிலாந்து ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு நுழைந்துள்ளன. முன்னாள் சாம்பியன் இத்தாலி உலகக்கிண்ணப் ஓட்டியில்விளையாடத் தகுதி பெறவில்லை.
. நடப்பு சாம்பியன் ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. சம்பியனாகும் என  கருதப்பட்ட முன்னாள்  சம்பியன்களான ஸ்பெயின்,ஆர்ஜென்ரீனாவுடன் போத்துகலும் நொக் அவுட்டில் வெளியேறின. முன்னாள் சம்பியன்களான பிரான்ஸ், உருகுவே, பிறேஸில், இங்கிலாந்து ஆகியவை காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தற்போது காலிறுதியில் உள்ள பெல்ஜியம், ரஷ்யா,குரேஷியா ஆகியவை இதுவரை  விளையாடியதில்லை. . முதல் முறையாக பைனல் நுழைவதற்கான வாய்ப்பு இந்த அணிகளுக்கு கிடைத்துள்ளது. இங்கிலாந்து,ஸ்வீடன், உருகுவே ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில்  இறுதிப்போட்டியில் விளையாடியதில்லை. . அதனால், கடந்த 50 ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடாத ஒரு அணி  இந்த முறை இறுதிப் போட்டியில்  விளையாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அல்லது ஒரு புதிய அணி முதல் முறையாக சம்பியனாகும் நிலை ஏற்பட்டுள்ளது..
காலிறுதியில் விளையாடும் பிரேசில், பிரான்ஸ் ஆகியவை  மட்டுமே கடந்த 50 ஆண்டுகளுக்குள் சம்பியனாகின.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் உருகுவேயை எதிர்த்து பிரான்ஸ் விளையாடுகிறது. இந்தப் போட்டியின் முடிவில் முன்னாள் சம்பியன் ஒன்று வெளியேறிவிடும். இரண்டாவது போட்டியில் பிறேஸிலை எதிர்த்து பெல்ஜியம் விளையாடுகிறது. பிறேஸில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதியானால் இரண்டு முன்னள் சம்பியன்களில் ஒன்று வெளியேறிவிடும். மாறாக பிறேஸிலை பெஜியம் வென்றால் சிலவேளை இறுதிப் போட்டியில் பெல்ஜியம் விலையாடலாம்
நானை நடைபெறும்  முதலாவது காலிறுதியில் குரோஷியாவும் ரஷ்யாவும் மோதுகின்றன.  இரண்டாவ்து காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தும்  சுவீடனும் மோதுகின்றன. இவறில் இங்கிலாந்து மட்டுமே  இறுதிப் போட்டியில் விளையாடியது. காலிறுதி அல்லது அரை இறுதியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் புதிய நாடு ஒன்றுஇறுதிப் போட்டியில் விளையாடி சாதனை செய்யும்.
 காலி இறுதி  அட்டவனை.
 போட்டி எண் 57. ஜூலை 6 - இரவு 7.30 - நிஷ்னி நோவ்கோராட் : உருகுவே - பிரான்ஸ்
போட்டி எண் 58. ஜூலை 6 - இரவு 11.30 - கசான் : பிறேஸில் - பெல்ஜியம்
போட்டி எண் 59. ஜூலை 7 - இரவு 11.30 - சோச்சி : ரஷ்யா - குரேஷியா
போட்டி எண் 60 ஜூலை 7 - இரவு 7.30 - சமாரா : ஸ்வீடன் - இங்கிலாந்து



No comments: