Sunday, July 1, 2018

அதிர்ஷ்டமில்லாத ஆர்ஜென்ரீனா


ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கிண்ண லீக்  போட்டியில் ஆர்ஜென்ரீனாவும் பிரான்ஸும் கஸான் நகரில் ஆர்ஜென்ரீனாவின் மெஸ்ஸி, பிரான்ஸின் கிரிஸ்மான் ஆகியோருக்கு இடையிலான போட்டியாகவும் இது அமைந்தது.  2014  ஆம் ஆண்டு தங்கக் காலணியையும் ஐந்து முறை ஃபிபாவின் விருதையும் வென்ற மெஸ்சியின் மீது  மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது.

பீலே, மரடோனா ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசப்படுபவர் மெஸ்ஸி. மெஸ்ஸியின் தலமையிலான் ஆர்ஜென்ரீனா கோபா அமெரிக இறுதிப் போட்டியிலும், 2014 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்தார். கிரின்மானின் நிலை  இதற்கு எதிர்மாறாக இருந்தது. பிரான்ஸ் ஒரு முறை சம்பியனாகியது. இம்முறை பிரான்ஸ் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழவில்லை.

லீக் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்ற ஆர்ஜென்ரீனா முதல் போட்டியை   அறிமுக அணியான ஐஸ்லாந்துக்கு எதிராக 1-1 என வெற்றி தோல்வியின்றி முடித்தது. செய்தது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி, பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிட்டது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இதைத் தொடர்ந்து குரோஷியாவுக்கு எதிரான போட்டியில்  3-0 என படுதோல்வி கண்டது.

எனினும் கடைசி லீக் போட்டியில்  நைஜீரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
 நைஜீரியா அணிக்கு எதிரான போட்டியில்  மெஸ்ஸியும் மார்கஸ் ரோஜோவும் கோல் அடித்தனர். லீக் சுற்றில் 3  போட்டிகளில் 5 கோல்களை வாங்கியுள்ளது அர்ஜென்டினா. அதிலும் குரோஷியாவுக்கு எதிராக மட்டும் 3 கோல்களை பெற்றது.

பிரான்ஸ்  லீக் சுற்றில்இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று,  ஒரு போட்டியைச் சமப்படுத்தியது. 7 புள்ளிகள் பெற்று சி பிரிவில் முதலிடம் பிடித்து அசத்தியிருந்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கிலும்  பெருக்கு எதிராகல் 1-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற பிரான்ஸ்  டென்மார்க் அணிக்கு எதிரான கடைசி ஆட்டத்தை கோல்களின்றி சமப்படுத்தியது.  லீக் சுற்றில்  தோல்வியடையாது   நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது  பிரான்ஸ்.

லீக் சுற்றின் 3 போட்டிகளிலும்  3 கோல்கள் மட்டுமே அடித்துள்ளது. அதிலும் ஒரு கோல் எதிரணி வீரரால் அடிக்கப்பட்ட ஓன் கோல்.இ மற்றொன்று பெனால்டியில் கிடைத்தது. அதேவேளையில் தற்காப்பு ஆட்ட வியூகத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ள பிரான்ஸ் ஒரு கோலை மட்டுமே வாங்கி உள்ளது. இந்த கோலும் பெனால்டி கிக் வாய்ப்பில் எதிரணியினரால் அடிக்கப்பட்டதுதான். 1998-ல் சாம்பியன் பட்டம் வென்ற போதும் பிரான்ஸ் அணி இதுபோன்று தற்காப்பு ஆட்டத்தில் அதீத பலத்துடன் காணப்பட்டது.


8 ஆவது  நிமிடத்தில் கிளியான் மாபேவை, பாக்ஸ் பகுதிக்கு வெளியே அர்ஜென்டினா வீரர் ஜேவியர் மஸ்செரேனோ தள்ளிவிட்டார். இதனால் பிரான்ஸ் அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதில் இலக்கை நோக்கி அன்டோனி கிரீஸ்மான் அடித்த பந்து கோல் போஸ்டில் பட்டு விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.

11 ஆவது நிமிடத்தில் பெனால்டி பகுதிக்குள் வைத்து பிரான்ஸ் வீரர் கிளியான் மாபேவை ஆர்ஜென்ரீனாவின் மார்கஸ் ரோஜோ தள்ளினார் செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதை பயன்படுத்தி கீரிஸ்மான் கோல் அடிக்க பிரான்ஸ் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
 21 ஆவது நிமிடத்தில் ஃப்ரீ கிக் மூலம் பால் போக்பா, பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்றது.
22 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனாவின் எவர் பனேகா அடித்த பந்து தடுக்கப்பட்டது.


40 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா பதிலடி கொடுத்தது. எவர் பனேகா உதவியுடன் பந்தை பெற்ற ஏஞ்சல் டி மரியாஇ பாக்ஸ் பகுதிக்கு வெளியில் 35 யார்டு தூரத்தில் இருந்து வலுவாக அடித்த ஷாட்இ உயரமாக கர்லிங் முறையில் சுழன்றபடி கோல்கம்பத்தின் வலது ஓரமாக கோல் வலையை துளைத்தது. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது.

48 ஆவது நிமிடத்தில் கப்ரியல் மெர்காடோகோல் அடித்தார். ஆர்ஜென்ரீனா 2-1 என முன்னிலை பெற்றது.

 57 ஆவது நிமிடத்தில் பெஞ்சமின் பவார்ட் கோல் அடிக்க 2-2 என சமமானது.

64 , 68 ஆவது நிமிடங்களில்  கிளியான் மாபே  இரண்டு கோல்கள் அடிக்க  4-2 என பிரான் முன்னிலை பெற்றது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் அர்ஜென்டினா அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது.

  காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 3-வது நிமிடத்தில் லயோனல் மெஸ்ஸி உதவியுடன் பந்தை பெற்ற அர்ஜென்டினாவின் அகுரோ தலையால் முட்டி கோலாக்கினார்.
ஆட்ட நேர முடிவில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் கால் இறுதிக்கு முன்னேறியது.


உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு போட்டியில்  இரண்டு கோல்கள் அடித்த இளம் வீரர் என்ற சாதனையில் பிறேஸில் ஜாம்பவான் பீலேவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார் பிரான்ஸின் வீரர் மாப்பே.

1958 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் 17 வயதான பீலே அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். 60 வருடங்களுக்குப் பின்னர் 19 வயதான ஒரு போட்டியில் இரண்டு கோல்கள் இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

No comments: