Monday, July 2, 2018

குரோஷியாவின் வெற்றிக் கொண்டாட்டம்


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் நொக் அவுட் சுற்றில் குரோஷிய கோல்கீப்பர் சுபாசிச்தான் பெனால்ரிகளைத் தடுத்தாட்கொண்டமையால் 3-2 என்ற கோல்கனக்கில் வெற்றி பெற்ற குரோஷியா கால் இறுதிப்  போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போட்டி ஆரம்பிது  நான்கு நிமிடங்களில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி  சூடு பிடித்தது
.
டென்மார்க்குக்காக மத்தியாஸ் ஸாங்கா ஜோர்கென்சன்  1 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, 4 ஆவது நிமிடத்தில் குரேஷிய வீரர் மரியோ மண்ட்சூகிக் பதிலடி கொடுத்துச் சமன் செய்தார். பரபரத் தொடக்கம் இறுதி வரைக் காக்கப்பட்டது. இரண்டு அணி வீரர்களும் கோல் அடித்து  முன்னிலை பெறுவதற்கு முயற்சித்ததால் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தவில்லை.  நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் வெற்றிக் கோல் அடிக்கப்படாமையால் மேலதிகமாக 30  நிமிடம் வழங்கப்பட்டது.

  30 நிமிட நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரோஷியாவுக்கு பெனால்ரி வாய்ப்பு கிடைத்தது. மோட்ரிச்  அடித்த பந்து டென்மார்க் கோல் கீப்பர் காஸ்பர் ஷ்மீச்செலுக்கு சற்று நெருக்கமாகச் சென்றதால் தடுக்கப்பட்டது.  . யூரோ 2008-ல் காலிறுதியில் துருக்கியிடம் பெனால்டியில்தான் தோற்றது குரேஷியா.மீண்டும் அதே போன்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. மேலதிக 30 நிமிடத்திலும் வெற்றிக் கோல் அடிக்கப்படாமையால்   இரண்டு அணிகளுக்கும் தலா ஐந்து பெனால்ரி வழங்கப்பட்டது.

டென்மார்க் அடித்த முதல் பெனால்ரியை குரோஷியா கோல் கீப்பர் தடுத்தார். அடுத்து குரோஷியா அடித்த பெனால்ரியையும்டென்மார்க் கோல் கீப்பர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  இரண்டாவது வாய்ப்பை டென்மார்க் கோலாக மாற்றியது. இதனால் 1-0 என முன்னிலை வகித்தது. குரோஷியா இரண்டாவது வாய்ப்பை கோலாக் மாற்றியதால் 1-1 என சமநிலை அடைந்தது.

டென்மார்க் மூன்றாவது வாய்ப்பை கோலாக மாற்றியதால் 2-1 என முன்னிலை பெற்றது. குரோஷியாவும் அடுத்த வாய்ப்பை கோலாக மாற்றியது. இதனால் இரு அணிகளும் 2-2 என சமநிலை பெற்றன.
டென்மார்க் அணியின் 4வது வாய்ப்பை குரோஷிய அணி கோல் கீப்பர் அபாரமாக தடுத்தார்.  குரோஷியா அணியின் 4வது வாய்ப்பையும் கோல் கீப்பர் தடுத்ததால் சமநிலை நீடித்தது.

டென்மாக் வீரர்களான கிறிஸ்டியன் எரிக்சன், போல் லாஸோஷீனி, நிகோலய் ஜோர்ஜ்கென்சன் ஆகியோர் அடித்த பெனால்ரிகளைகுரோஷிய கோல் கீப்பர் டானியல் சுபாசிச் தடுத்தார்.
குரேஷியாவின் மிலன் படேலி, ஜோஸிப் பிவாரிச் ஆகியோரின்  பெனால்ரிகளை டென்மாக் கோல்கீப்பர் ஷ்மெய்ச்சல் பிவாரிச் தடுத்தார்.
டென்மாக்கின் ஐந்தாவது பெனால்ரியும் தடுக்கப்பட்டது. 2-2 என்ற சமனிலை நீடித்தது.

  குரேஷியாவின் இவான்  ஐந்தாவ்து பெனாரிடியை அடிக்கத் தயாரானபோது பதற்றம் அதிகரித்தது.அது கோலானதும் கொரூஷியார்களின் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் உச்சத்தை அடைந்தது.கால் இறுதிப் போட்டியில்ரஷ்யாவும் குரோஷியாவும் மோதுகின்றன.


No comments: