Tuesday, May 30, 2023

உடல் நலத்துடன் விளையாட வேண்டாம்

பொருளாதார ஸ்திரத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மெது மெதுவாக  மீண்டெழுந்து வருகிறது. காணாமல் போன அத்தியாவசியப் பொருட்கள்  சந்தைக்கு வந்துள்ளன. தட்டுபாடான  பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. சுமார் ஒன்றரை வருடங்களாக மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிரதுஇதனைச் சீர்செய்வதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

அரச வைத்திய சாலைகளில்  மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. வைத்திய சாலையில் அனும்திக்கப்பட்ட நோயாளிக்கு ஐந்து  ஊசி போட வேண்டும் என வைத்திய எழுதினால்  சில வேளையில் ஐந்தாவது ஊசி இருக்காது. ஊசியை மாரிப் போட்டு நோயாளி சிரமப் பட்ட சம்பவங்களும் உள்ளன. கிளினிக்குகளில்  சில மருந்துகள்  இல்லை என  சொல்கிறார்கள். அவற்றை கடையில் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

 நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இவ்விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின் முன்னணி மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

 இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் வின்யா ஆரியரத்ன. (SLMA) " அரசு மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக கிளினிக்குகளில், நோயாளிகள் வெளியில் இருந்து மருந்துகளை வாங்க டாக்டர்கள் மருந்துச் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள். மேலும், தனியார் மருந்துக் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் மருந்துகளால் சில நோயாளிகள் சரியான அளவை எடுத்துக் கொள்வதில்லை. இது ஒரு பெரிய பிரச்சினை, இது விரைவில் தீர்க்கப்பட வேண்டும்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பற்றாக்குறை நிலவுகிறது; எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த விடயத்தின் தீவிரத்தன்மையை சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. நன்கொடையாளர்கள் அரசாங்கத்திற்கு மருந்துகளை வழங்கும் செயல்முறையும் பல தடைகள் காரணமாக தடைபட்டுள்ளதுஎன்றார்.

இதேவேளை, வலிநிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோயாளிகளுக்கான மருந்துகள் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA)  ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க  தெரிவித்தார்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பஞ்சம் காணப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வக பொருட்களுக்கும் பற்றாக்குறை உள்ளது. 14 உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் டாக்டர் விஜேசிங்க மேலும் தெரிவித்தார். ஆயினும்கூட, நிலவும் மருந்துப் பற்றாக்குறை சுகாதாரத் துறையில் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால், அது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

மேலும், நிதிப்பற்றாக்குறை, கொள்முதல் முறையில் உள்ள சிக்கல், தெளிவின்மை, சப்ளையர்களின் ஏகபோகம் உள்ளிட்ட பல காரணங்களால் தற்போது மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கான காரணங்களை அடையாளம் காண முடியும் என்றார்.

அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 1,347 வகையான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, மேலும் நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவமனைகள் 2022 முதல் மருத்துவ பற்றாக்குறையை எதிர்கொண்டன.

 மருந்து பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவ நோயாளிகளின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், பல வகையான புற்றுநோய் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வைத்தியசாலைகளில் கிடைப்பதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

  அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதற்காக வந்த நோயாளர்கள் மருந்துகள் கிடைக்காததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், மருந்துப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த சம்பவமும் பதிவாகி உள்ளது.

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையை கண்டறியவும், தற்போதுள்ள கையிருப்பு பற்றிய தரவுகளை சேகரிக்கவும் உலக சுகாதார அமைப்பு இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின்  (WHO) தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியாசிஸ் சுமார்  11  மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

அவசரகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அடுத்த 3 மாதங்களில் சுகாதார அமைப்பை சரிவடையாமல் பராமரிப்பதற்கும் 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், இலங்கைக்கு குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை எட்டுவதற்கு 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் கூறினார். இது மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் மனிதாபிமான வேண்டுகோள் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அட்ஜோன் கேப்ரியாசிஸ் குறிப்பிட்டார்.

ஆனாலும் மருந்துகளுக்கு  இன்னமும்தட்டுப்பாடுநிலவுகிறது.

சில மருந்துகளின்  கொம்பனியும், நிறமும் மாறியுள்ளனஅது தாம் வழக்கமாகப் பாவிக்கும் மருந்துதானா என்ற சந்தேகம் சில நோயாளிகளுக்கு உள்ளது.மருந்து தட்டுப் பாட்டுக்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

No comments: