Saturday, June 22, 2024

நேரடியாக தகுதி பெற்று அசத்திய அமெரிக்கா


 ரி20  2024 இல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அமெரிக்கா அடுத்த ரி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடி தகுதி பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அடுத்த ரி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் உள்பட 8 அணிகள் அடுத்த ரி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

  இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா,   மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, அயர்லாந்து  , பாகிஸ்தான் ஆகியன‌ நேரடியாக தகுதி பெற்றுள்ளன.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது,ஐ.சி.சி. ரி20 தரவரிசை அடிப்படையில் இந்த அணிகள் நேரடியாக  தகுதி பெற்றுள்ளன.

12 அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். அவை தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடி உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவார்கள். அடுத்த ரி20 உலகக்  கிண்ணப்  போட்டி  இந்தியாவிலும்,    இலங்கையிலும் நடைபெற உள்ளது.

 டி20 உலகக் கிண்ணப் போட்டியை முதன் முதலாக நடத்தும் வாய்ப்பை பெற்ற அமெரிக்க அணி, இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து என வலுவான அணிகள் இருந்த பிரிவில் இடம்பெற்றிருந்தது.

லீக் சுற்றிலே வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா முதல் போட்டியில் கனடாவை அதிரடியாக வீழ்த்தியது. அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. அயர்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட இந்திய அணியுடன் இணைந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. 

அடுத்த ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு  நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளில் இலங்கை, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிஸ் ஒலிம்பிக்கில் வெப்ப ஆபத்து குறித்து எச்சரிக்கை

பிரான்ஸ் தலைநகர்  பரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் வெப்ப அலைதாக்கம் அதிகமாக  இருகும் என "ரிங்க்ஸ் ஆஃப் ஃபயர்" அறிக்கை யில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  2021 ஆம் ஆஅண்டு  டோக்கியோவில் நடந்த  ஒலிம்பிக் வெப்ப அலையைவிட பரிஸ் வெப்ப அலை அதிகமாக  இருக்கலாம் எனவும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் வீரர்கள் வெப்ப அலையால் மிக் மோசமாகப் பதிக்கப்பட்டனர்.

வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ரீஹைட்ரேஷன் மற்றும் குளிரூட்டும் திட்டங்களையும் அவர்கள் வழங்க வேண்டும் என்று ஆய்வு ஆலோசனை தெரிவித்தது.

சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான சாதனை வெப்ப அலைகளால் தாக்கப்பட்ட பிரான்ஸ் தலைநகரில் வழக்கமாக வெப்பமான மாதங்களில் நடைபெற உள்ளது.

பொது சுகாதார தரவுகளின்படி, கடந்த ஆண்டு 40 டிகிரி சென்டிகிரேட் (104 பாரன்ஹீட்) க்கு மேல்   பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கோடை வெப்பத்தின் விளைவாக பிரான்சில் 5,000 க்கும் அதிகமானோர் இறந்தனர்.

கடந்த மே மாதம் லான்செட் பிளானட் ஹெல்த் ஜர்னலில் நடத்தப்பட்ட ஆய்வில்,  854 ஐரோப்பிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அதிக வெப்பம் தொடர்பான இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது என்று கண்டறிந்துள்ளது.

அதிக வெப்பநிலையைக் காட்டிலும், இடைவிடாத மழை தற்போது அமைப்பாளர்களுக்கு வானிலை தொடர்பான பெரிய கவலையாக உள்ளது, மே மற்றும் ஜூன் மாதங்களில் வழக்கமாக பெய்யும் மழை Seine ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக வலுவான நீரோட்டங்கள் மற்றும் மோசமான நீரின் தரத்திற்கு வழிவகுக்கிறது.

கடந்த மே மாதம் லான்செட் பிளானட் ஹெல்த் ஜர்னலில் நடத்தப்பட்ட ஆய்வில், பாரீஸ் 854 ஐரோப்பிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அதிக வெப்பம் தொடர்பான இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளது என்று கண்டறிந்துள்ளது.

அதிக வெப்பநிலையைக் காட்டிலும், இடைவிடாத மழை தற்போது அமைப்பாளர்களுக்கு வானிலை தொடர்பான பெரிய கவலையாக உள்ளது, மே மற்றும் ஜூன் மாதங்களில் வழக்கமாக பெய்யும் மழை Seine ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக வலுவான நீரோட்டங்கள் மற்றும் மோசமான நீரின் தரத்திற்கு வழிவகுக்கிறது.

டோக்கியோவில் நடந்த கடைசி கோடைகால ஒலிம்பிக், 80 சதவீத ஈரப்பதத்துடன் தொடர்ந்து 30C க்கும் அதிகமான வெப்பநிலையுடன், பதிவில் அதிக வெப்பமானதாக கருதப்பட்டது.

டோக்கியோ அமைப்பாளர்கள் ரேஸ் வாக் நிகழ்வுகள் மற்றும் இரண்டு மரதன்களை டோக்கியோவிலிருந்து வடக்கே 800 கிலோமீற்றர் தூரத்திற்கு நகர்த்தியுள்ளனர், அது உண்மையில் செயல்படாத குளிர்ந்த வானிலையின் நம்பிக்கையில்.

மிஸ்டிங் ஸ்டேஷன்கள் உட்பட பலவிதமான வெப்ப-எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ் உட்பட பல விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது போராடினர், அவர் இறந்துவிடலாமா என்று   உரக்க  சத்தம் போட்டார். அப்படி ஒரு நிலை பரிஸிலும் நடக்கல்லம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் அடாவடியால் அல்பேனிய, சேர்பிய அணிகளுக்கு நெருக்கடி


 யூரோ கிண்ணப் போட்டியில்  தேசியவாத வரைபடங்களுடன் கூடிய பதாகைகளை ரசிகர்கள் காட்டியதால்  அல்பேனிய ,சேர்பிய கால்பந்து கூட்டமைப்புகளுக்கு   புதன்கிழமை தலா 10,000 யூரோக்கள் ($10,700) அபராதம் விதிக்கப்பட்டது. ஏனெனில் மைதானங்களில்  ரசிகர்களின் நடத்தைக்கு அணிகளே பொறுப்பேற்க வேண்டும்.

 டார்ட்மண்டில் சனிக்கிழமை இத்தாலிக்கு எதிரான 2-1 தோல்வியின் போது  அல்பேனியா ரசிகர்கள் தங்கள் நாட்டின் வரைபடத்துடன் அதன் எல்லைகளை அண்டை நாடுகளின் எல்லைக்குள் விரிவுபடுத்தும் பேனரைக் காட்சிப்படுத்தினர்.

 கெல்சென்கிர்சனில் இங்கிலாந்துக்கு எதிர போட்டியின் போது  சேர்பியா ரசிகர்களின் பேனரில் கொசோவோவின் சுதந்திரப் பகுதியும், "சரணடைய வேண்டாம்" என்ற கோஷமும் இருந்தது. 2022 உலகக் கோப்பையில் பிறேஸிலுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக வீரர்கள் தங்கள் லாக்கர் அறையில் இதேபோன்ற பேனருடன் புகைப்படம் எடுத்தபோது பீபாவால் வழக்கு தொடரப்பட்டது.

 

திமுக எதிர் பாமக என மாறும் தமிழக அரசியல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி விமர்சனங்கள் ஓங்கி ஒலித்து வரும்  வேளையில் தமிழகத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகவேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் திகதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.    ஜூலை 13ஆம் திகதி வாக்கு எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்டோடு  சூடாக திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவித்து விட்டது. விகிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது அதிமுக‌. திமுக எதிர் பாமக என மாறும் தமிழக அரசியல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி விமர்சனங்கள் ஓங்கி ஒலித்து வரும்  வேளையில் தமிழகத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகவேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் திகதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.    ஜூலை 13ஆம் திகதி வாக்கு எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்டோடு  சூடாக திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவித்து விட்டது. விக்ரவாண்டி இடைத் தேர்தலில் திராவிட முனேற்றக் கழக வேட்பாளராக  அன்னியூர் சிவா,  நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக     அன்புமணி  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நேர்மையாகத்  தேர்தலை நடத்தாது என அவை கூறியுள்ளன.  இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் நடத்தும். இதில் மாநில அரசுக்கு எந்த்த தொடர்பும் இல்லை. இதைப் பற்றித் தெரிந்துகொண்டும் இரண்டு கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசுக்கும் இடைத்தேர்தலும் எதுவித தொடர்பும் இல்லை.

  விஜயகாந்த் இருந்தவரை எந்தத் தேர்தலையும் அவர் புறக்கணிப்பு செய்ததில்லை. தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் கூட அவர் துணிச்சலாக போட்டியிடுவார். ஆனால் அதற்கு முற்றிலும் நேர் மாறாக பிரேமலதா   முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தேர்தலைப் புறக்கணிக்கும் எடப்பாடியின் முடிவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பத்துத் தேர்தல்களில் தோல்வியடைந்த எடப்பாடியார் பதினோராவது தேர்தல் தோல்வியைத் தவிர்த்துள்ளதாக எதிரணியினர்  கேலி பண்ணுகின்றனர்.  இடைத் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றிக் கொடியை உயர்த்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலைக் கண்டு பயப்படுகிறது.

 ஜெயலலிதாவே     இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையு  மாறிமாறிச் சந்தித்தவர் ஜெயலலிதா. அனால், எடப்படியார் தோல்விமேல் தோல்வியைச் சந்தித்து நிலை குலைந்து போயுள்ளார். சகல தேர்தல்களிலும் வெற்றி  அல்லது இரண்டாம்  இடம்  பிடித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்    கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் மூன்றாம், நான்காம்  இடங்களுக்குத் தள்ளப்பட்டது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மூன்றாம்  இடத்துத் தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் எடப்பாடிக்கு எழுந்துள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என  இருந்த தமிழக அரசியலை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் பாரதீய ஜனதாக் கட்சி என  மாற்றுவதற்கு  அண்ணாமலை முயற்சி செய்தார்.தமிழகத்தில்  பாரதீய ஜனதவின் வாக்கு வங்கி உயர்ந்து விட்டது, தமிழகத்தில் தாமரை மலரும் என  அண்ணாமலை  முழக்கமிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் உண்மையை வெளிச்சம்  போட்டுக் காட்டியது. விகிக்ரவாண்டி இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா  போட்டியிடாமல்  ஒதுங்கியதால் பாட்டாளி  மக்கள் கட்சி களத்தில் இறங்கியது.

திராவிட முன்னேற்றக் கழ்கத்தைத் தோற்கடிப்பதற்காக தமிழக எதிர்க் கட்சிகள் அனைத்தும்  ஒன்று பட்டு பொது  வேட்பாளரை நிறுத்தி உள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகமும் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. அந்தக் கட்சிகளின் தொண்டர்கள்  தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை. இடைத் தேர்தலில் வாகளிக்க வேண்டாம் என எடப்பாடியும், பிரேமலதாவும் சொல்லப் போவதில்லை.  அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு  வாகளிக்க மாட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழ்கமே அந்தா வாக்குகளை அறுவடை செய்யும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

 நாடாளுமன்றத் தேர்தலின் போது    கோவை தொகுதியில் அதுதான் நடந்தது. அங்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள்  குறைந்தன. அதேசமயம், பாஜகவின்பாரதீய ஜனதாவின் வாக்குகள் அதிகரிக்கவில்லை.திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளைப் பெற்றது.    விக்கிரவாண்டியிலும் அதுவே நடக்க வாய்ப்புள்ளது.


விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக தேமுதிக வாக்குகள் பாமகவுக்குப் போய் பாமக வெற்றி பெற்றால் அல்லது கணிசமான தாக்கத்தை திமுகவுக்குக் கொடுத்தால் எதிர்காலத்தில் பகிரங்கமாகவே கூட்டணி அமைக்கும் முடிவுக்கு அதிமுக பாஜக போகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான முன்னோட்டமாக விக்கிரவாண்டியை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதிமுகவின் இந்த முடிவை  மற்றவர்களை விட திமுகதான் சீரியஸாக எடுத்துக் கொள்ளும். தனது உத்திகளை மேலும் வலுவாக்க திமுக திட்டமிடும்,வாக்குகள் சிதறிப் போய் விடாமல் ஒருங்கிணைத்து சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் இப்போது திமுகவுக்கு வந்துள்ளது. அதேசமயம், அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பால் அதிருப்திக்குள்ளான அதிமுகவினரை வளைக்கவும் திமுக முயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேமுதிகவினரின் வாக்குகளும் இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ளது. அவர்களின் வாக்குகளுக்கும் திமுக குறி வைக்கும்.

தமிழக அரசின்மீது மக்கள் கடும் வெறுப்பில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மண்ணைக்  கெளவும் என எதிர்க்கட்சிகள் முழங்கின. தமிழக மக்கள் லட்டுபோல 40 தொகுதிகளையும் திராவிட முன்னேற்றக் கூட்டணிக்குக் கொடுத்துவிட்டதை எதிர்க் கட்சிகள்  மறந்து விட்டன.

ரமணி

Wednesday, June 19, 2024

அமெரிக்க உதைபந்தாட்ட சம்பியன் போட்டி இன்று ஆரம்பம்


 

  கோபா அமெரிக்க  கிண்ணப் போட்டி இன்று வியாழக்கிழமை  அமெரிக்காவில் ஆரம்பமாகிறது. பலம் வாய்ந்த   அமெரிக்க சம்பியனைத் தெரிவு செய்யும் போட்டியாக  இது  விளங்குகிறது. இறுதிப் போடி  ஜூலை 14 ஆம் திகதி நடைபெறும் முதல் போட்டி  ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடப்பு சம்பியனான ஆர்ஜென்ரீனா கனடாவைவை எதிர் கொள்கிறது.

அமெரிக்காவின் 14 நகரங்களில் நடைபெறும் இந்த ஆண்டுப் போட்டியில், 10 தென் அமெரிக்க நாடுகளும், வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன்   கூட்டமைப்பில் உள்ளஆறு பேரும் பங்கேற்கும்.

குழு A : அர்ஜென்டினா, பெரு, சிலி, கனடா

குழு B : மெக்சிகோ, ஈக்வடார், வெனிசுலா, ஜமேக்கா

குழு C : அமெரிக்கா, உருகுவே, பனாமா, பொலிவியா

குழு D : பிறேஸில், கொலம்பியா, பராகுவே, கோஸ்டாரிகா.

கோபா அமெரிக்க  கிண்ணத்தையும்,  உலகக்கிண்ணத்தையும் வைத்திருக்கும் ஆர்ஜென்ரீனா கோபா  அமெரிக்க கிண்ணத்தை தக்கவைக்குமா என்ற எதிர் பார்ப்பு  எழுந்துள்ளது.

பீலேவுக்குப் பிறகு பிறேஸிலுக்காக தொடர்ந்து மூன்று போட்டிகளில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை இந்த மாதம் எண்ட்ரிக் பெற்றார். 

வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ, ரபின்ஹா, சவின்ஹோ ,கேப்ரியல் மார்டினெல்லி ஆகியோருடன்  கோபா அமெரிக்காவின் போது எண்ட்ரிக் விளையாடுவது சந்தேகம்.

கடந்த ஆண்டு மே மாதம் உருகுவேயின் பயிற்சியாளராக மார்செலோ பீல்சா,  பதவி ஏற்றார்.

 பிறேஸில் ஆர்ஜென்ரீனா  ஆகியவற்றுக்கு  எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று வெற்றிகளால்  பீல்சாவின் மீது நம்பிகை உருவகி உள்ளது.  பீல்சாவின் தலைமையின் கீழ் செலஸ்டி ஏழு வெற்றி, மூன்று டிரா , இரண்டு போட்டிகளில் உருகுவே தோல்வியடைந்துள்ளது.

 அனுபவமிக்க லூயிஸ் சுரேஸ்,    உதைபந்தாட்டத்தில் ஓய்வு பெறப்போவதாக அறிவித்த   எடின்சன் கவானி ஆகிய வீரர்கள் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு ஜேர்மனி, ஸ்பெயின், பிறேஸில், மெக்சிகோ ,அமெரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான  போட்டிகளில்  வெற்றி பெற்ற  கொலம்பியா பலமான அணியக இருக்கிறது.

 ஜான் லுகுமி ,கார்லோஸ் கியூஸ்டா ஆகியோரின் தாக்குதல் எதிரணிகளுகு அதிர்ச்சியளிகும் வகையில் இருக்கும்.

பீலேவுக்குப் பிறகு பிறேஸிலுக்காக தொடர்ந்து மூன்று போட்டிகளில் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை இந்த மாதம் எண்ட்ரிக் பெற்றார். 

வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ, ரபின்ஹா, சவின்ஹோ ,கேப்ரியல் மார்டினெல்லி ஆகியோருடன்  கோபா அமெரிக்காவின் போது எண்ட்ரிக் விளையாடுவது சந்தேகம்.

கடந்த ஆண்டு மே மாதம் உருகுவேயின் பயிற்சியாளராக மார்செலோ பீல்சா,  பதவி ஏற்றார்.

 பிறேஸில் ஆர்ஜென்ரீனா  ஆகியவற்றுக்கு  எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று வெற்றிகளால்  பீல்சாவின் மீது நம்பிகை உருவகி உள்ளது.  பீல்சாவின் தலைமையின் கீழ் செலஸ்டி ஏழு வெற்றி, மூன்று டிரா , இரண்டு போட்டிகளில் உருகுவே  தோல்வியடைந்துள்ளது. .

 அனுபவமிக்க ரர் லூயிஸ் சுரேஸ்,    உதைபந்தாட்டத்தில் ஓய்வு பெறப்போவதாக அறிவித்த   எடின்சன் கவானி ஆகிய வீரர்கள் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.

கடந்த ஆண்டு ஜேர்மனி, ஸ்பெயின், பிறேஸில், மெக்சிகோ ,அமெரிக்கா ஆகியவற்றுக்கு எதிரான  போட்டிகளில்  வெற்றி பெற்ற  கொலம்பியா பலமான அணியக இருக்கிறது.

 ஜான் லுகுமி ,கார்லோஸ் கியூஸ்டா ஆகியோரின் தாக்குதல் எதிரணிகளுகு அதிர்ச்சியளிகும் வகையில் இருக்கும்.