Saturday, November 11, 2023

தென் ஆபிரிக்காவுக்கு எதிராகப் போராடி வெளியேறிய ஆப்கானிஸ்தான்


 அகமதாபாத் நகரில் நடைபெற்ற 42வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் தென்னாப்பிரிக்காவை 400 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு பையனுக்கு செல்ல முடியும் என்ற அசாத்தியமான சூழ்நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடுவதாக அறிவித்தது.

50  ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 244  ஓட்டங்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான். தென் ஆபிரிக்கா 47.3  ஓவர்கலில் 5 விக்கெர்களை இழந்த் 174   ஓட்டங்கள் எடுத்து  5விக்கெற்களால் வெற்றி பெற்றது.

ரஹமனுல்லா குர்பாஸ் 25, இப்ராஹிம் ஜாட்ரான் 15   கப்டன் ஷாகிதி 2 , ஓட்டங்களில் ஆட்டமிழக்க  ஓமர்சாய் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் ரஹமத் ஷா 26  ஓட்டங்களிலும்,  இக்ரம் கில் 12 ஓட்டங்களீலும் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர்.  நம்பிக்கை நட்சத்திரங்கள் முகமது நபி 14, ரசித் கான் 14 ஓட்டங்கள் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்கள் எடுக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஓமர்சாய் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி சதத்தை நழுவ விட்டபோதிலும் 7 பவுண்டரி 3 சிக்சருடன் ஆட்டமிழக்காது 97(107) ஓட்டக்கள் குவித்து அசத்தினார்.

 50 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட்களையும் இழந்து 244  ஓட்டங்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில்   ஜெரால்ட் கோட்சி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

 245 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 64  ஓட்டங்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கப்டன் தெம்பா பவுமா 23  ஓட்டங்களிலும், குவிண்டன் டீ காக் 41 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர்.

வேன் டெர் டுஷன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் நங்கூரத்தை போட முயற்சித்த ஐடன் மார்க்கம் 25, ஹென்றிச் க்ளாஸென் 10  ஓட்டங்களில் ரசித் கான் சுழலில் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடி 24 ஓட்டஙளில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்ட போதிலும் மறுபுறம் தொடர்ந்து சவாலாக விளையாடிய டுசன் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 76* (95) ஓட்டங்கள் குவித்தார். அவருடன் கடைசியில் ஆண்டிலோ பெலுக்வியோ 33* (37) ஓட்டங்கள் எடுத்ததால் 47.3 ஓவர்களிலேயே 247 ஓட்டங்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.  ரசித் கான் , முகமது நபி ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்து எழுச்சி கண்ட ஆப்கானிஸ்தானின் செமி ஃபைனல் வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச்சை முஜீப் தவற விட்டதால் முக்கால்வாசி பறிபோனது என்றே சொல்லலாம். இருப்பினும் அந்த அணி பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை அள்ளியதுடன் வருங்காலத்தில் அசத்தும் அணியாக முன்னேறியுள்ளது. மறுபுறம் இந்த வெற்றியால் தென்னாபிரிக்கா 2வது இடத்தை உறுதி செய்து செமி ஃபைனலில் விளையாட தயாராகியுள்ளது.

No comments: