Thursday, December 1, 2022

ஜனநாயக அடக்குமுறைக்கு வித்திடும் ஜனாதிபதி


 ஜனாதிபதி ரணில் வி போராட்டம்  நடைபெறுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், இராணுவ மற்றும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி அத்தகைய முயற்சிகளை "கையாளுவதற்கு" நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 “இந்த நாட்டில் ஒரு ‘டின்ஹ் டைம்’ ஆட்சியை ஏற்படுத்த நான் விடமாட்டேன். அரசை கவிழ்க்க இனி 'போராட்டம்  இருக்காது. இதுபோன்ற முயற்சிகளை கையாள நான் ராணுவத்தை நிலைநிறுத்தி அவசர நிலையை பிரகடனப்படுத்துவேன். இந்த நாட்டில் 'டின் டிம்ஸ்'களுக்கு இடமில்லை” என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சட்டப்பூர்வ போராட்டங்களுக்கு தாம் எதிரானவன் அல்ல என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். “மக்கள் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் கூட்டங்களில் சட்டப்பூர்வமான முறையில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் சர்வாதிகாரி என்று கத்தினாலும் பரவாயில்லை, எனக்கு கவலையில்லை. ஆனால், உரிமம் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட முயன்றால், சாலைகளை மறித்திருந்தால், அது அனுமதிக்கப்படாது," என்று அவர் உறுதியளித்தார்.

இதனை  அறிவித்தல் எனக்  கருத முடியாது  கிட்டத்தக்க  ஒரு எச்சரிக்கைபோலவே இருக்கிறது. கோத்தா அரசுக்கு எதிராக நடந்த  போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது அரசாங்கத்துக்கு எதிரான  போராட்டம் மட்டுமல்லா.  ஊழல் அரசுக்கு, ஊழல் அரசியல்வாதிகளுக்கு, ஊழலை அனுமதிப்பவர்களுக்கு எதிராக  முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

ஜனநாயகத்தைக் காப்பாற்ருவதற்காக, மக்களின் அதிருப்தியே  போராட்டமாக விஸ்வரூபம் எடுத்தது.   போராட்டங்களை சில அரசங்கங்கள் விரும்புவதில்லை. அமைதியான  போராட்டங்கள் சில சமயங்களில் அரசாங்கத்தின் அடக்கு முறையால வன் செயலாக  மாறிவிடுவதுண்டு. அரகலய  என்பது அரசியல் இயக்கமல்ல. அதனை அரசியல் இயக்கமாக சில அரசியல்வாதிகள்  கருதி பயப்படுகின்றனர்.

கோத்தாபய ஜனாதிபதியாக இருந்தபோது நியாயமாகத் தெரிந்த போராட்டம், ரணில்   ஜனாதிபதியானதும் அடக்கப்பட வேண்டிய  ஒன்றாக  மாறிவிட்டது.

கோத்தாபய ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவேண்டும்.  ராஜபக்ஷக்களின்  அதிகாரம்  இலங்கை அரசியலில் இருந்து இல்லாதொழிக்கப்பட வேண்டும்  என்ற நோக்க்க்த்திலேயே  போராட்டம்              முன்னெடுக்கப்பட்டது.

போரட்டத்தின் திசை மாறியதால், ரணில் ஜனாதிபதியானார். அவரின் வீடு எரிக்கப்பட்டது. மகிழ்ச்சியும், துக்கமும் அவருக்கு  ஒரே நேரத்தில் கிடைத்தன. மே  9 ஆம் திகதி நடைபெற்ற  போராட்டம் பற்றியே  ஜனாதிபதி   பேசுகிறர் என அவருக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர். மக்கள்  கிளர்ந்தெழுந்து போரட்டம் நடத்தியதால்தான்   ரணில் ஜனாதிபதியானார்.

ஜனாதிபதி தவறிழைத்தால்  அவருக்கு எதிராகவும்  போராட்டம் நடத்தப்படும்  அன்பதையும் அவர் நன்கு அறிவார். தனது பதவியைக் காப்பாற்றுவதற்காகவே   ஜனாதிபதி ரணில் சில  முக்கிய  முடிவுகளை    வகுத்துள்ளார். தற்போது அனுபவிக்கும் ஜனாதிபதி வாழ்க்கையை மேலும்  ஐந்து வருடங்களுக்கு  நிரந்தரமாக அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறார்.

அறகலய"  எனும் போராட்ட  பற்றி ஜனாதிபதி ரணில் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.  குறிப்பாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கையாளப்பட்ட விதம் மூலம். எவ்வாறாயினும், அவர்கள் வீதியில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய அவர்களது அவலநிலையை முற்றிலும் மறுத்து, "அரகலய" இயக்கத்தை உணர்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தாத முற்றிலும் அரசியல் இயக்கமாக சித்தரிக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் மேற்கொண்ட முயற்சியால் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். சாதாரண குடிமக்கள். அடக்குமுறை மற்றும் தன்னிச்சையான சட்ட நடவடிக்கை மூலம் மக்களை அச்சுறுத்துவது, ஜனாதிபதியை ஈர்க்க முயற்சிக்கும் சில தரப்பினரை மகிழ்விக்கலாம்.  ஆனா, அரசியலில் அது நிரந்தரமாக  இருக்காது.

அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துகு முன்னர் தமிழ் மக்களின்  பிரச்சினையைத் தீர்க்கப்போவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்துள்ளார். இது  ஒரு சாதாரண விடயம் அல்லை. எல்லாரும் ஏறிய குதிரையில் ஏறியது போல  ரணிலும் ஆசைப்படுகிறார்.  பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்டார். பலர் ஒப்புதலளித்தனர். சிலர் சமாளித்தனர். ஒப்புதலளித்தவர்களின்  பின்னால் அவர்களின்  அங்கத்தவர்கள் பலர் கைகட்டி நிற்க மாட்டார்கள்.

மிக  முகியமாக சிங்களப் பேரினவாதிகளும்,  தேரர்களும் ரணிலுக்கு எதிராக  நிற்கப் போகிறார்கள்.  இந்த  இரண்டு முக்கியமான  பிரச்சினைகளையும் ஜனாதிபதி ரணில் எப்படிக் கடக்கப் போகிறார்  என்பதே அரசியல் ஆய்வளர்களின் கேள்வி.

No comments: