Monday, December 26, 2022

சால்ட் பே க்கு எதிரான விசாரணை ஆரம்பம்


 உலகக் கிண்ண  இறுதிப் போட்டியின்  பின்னர் ஆர்ஜென்ரீன வீரர்களின் வெற்ரி கொண்டாட்டத்தின் போது  துருக்கியின் சமையல்காரர் சால்ட் பே ஆடுகளத்தில்  சம்பியன் கிண்ணத்தை எப்படி கையாள முடிந்தது என்பது  தொட்ர்பாக பீபா விசாரணையைத் தொடங்கியுள்ளது.சால்ட் பேயின் உண்மையான பெயர் நஸ்ரெட் கோகே.

டோஹாவில் உள்ள லுசைல் மைதானத்தில் ஆர்ஜென்ரீனாவின் வியத்தகு வெற்றிக்குப் பிறகு, அவரது நடத்தைக்காக அவர் பரவலாக விமர்சிக்கப்பட்டார், அங்கு அவர் வீரர்களின் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவித்தார், சம்பியன்  கிண்ணத்தைத் தூக்கிப் பிடித்தார்.   லியோனல் மெஸ்ஸி உட்பட சில வீரர்கள் சால்ட் பே முன்னிலையில் எரிச்சலடைந்தனர், இருப்பினும் போட்டியின் கோல்டன் பால் வெற்றியாளர் அவரது இன்ஸ்டாகிராம்  கணக்கில் சமையல்காரருடன் புகைப்படம் எடுத்தவர்களில் ஒருவராவார்.

பீபாவிதிகளின் கீழ், உலகக் கிண்ண வெற்றியாளர்கள், பீபா அதிகாரிகள் மற்றும் அரச தலைவர்கள் ஆகியோர் கிண்ணத்தை வைத்திருக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட நபர்களில் அடங்குவ‌ர், இதன் மதிப்பு சுமார் $20 மில்லியன் (£16.6 மில்லியன்/€18.7 மில்லியன்).

அவரும் மற்ற விருந்தினர்களும் எவ்வாறு ஆடுகளத்தை அணுக முடிந்தது என்பதை ஆராய்வதாக கால்பந்தின் உலகளாவிய நிர்வாகக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

கட்டார் 2022 உலகக் கிண்ணப் போட்டியின் போது போது சால்ட் பே விஐபி அணுகலைப் பெற்றார், பீபாதலைவர் கியானி இன்ஃபான்டினோ உட்பட அவரது சமூக ஊடகங்களில் ஏராளமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டார்.

2018 இல் UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதி வெற்றிக்குப் பிறகு ரியல் மாட்ரிட் வீரர்களுடன் சமையல்காரர்  புகைப்படம் எடுத்தார்.

லிவர்பூலின் 3-1 தோல்வியின் முதல் பாதியின் போது காயம் அடைந்து கண்ணீருடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறிய எகிப்திய விங்கர் மொஹமட் சாலாவுடன் போஸ் கொடுத்ததற்காக அந்த போட்டிக்குப் பிறகும் அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார்.  2023 ஆம் ஆண்டு அமெரிக்க  ஓப்பனில்  பெப்பே கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments: