உள்நாட்டுப் பிரச்சினையால் சிக்கிச் சிரழிந்த அதிலிருந்து மீண்டு பொருளாதார பூதத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரச் சிக்கலில் இருந்து இலங்கியை மீட்ப்தர்கு இந்தியாவும், சீனாவும் போட்டி போட்டுகொண்டு உதவுகின்றன. வடக்குக்கு உதவி செய்து தனது இருப்பைத் தக்கவைக்க இந்தியா முயற்சிக்கிறது. தெற்கில் வலுவாகக் கால் பதித்த சீனா வடக்குப் பக்கத்திலும் தனது பார்வையை விரித்துள்ளது. பாகிஸ்தானும் தன் பங்குக்கு இலங்கைமீது கரிசனை காட்டத் தொடங்கியுள்ளது.
இந்தியா, சீனா ஆகியவற்றுக்கிடையிலான பனிபோரில் தெரிந்தோ தெரியாமலோஇலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. இதில் மற்ற குவாட் நாடுகளான அமெரிக்கா, ஜப்பான் , அவுஸ்திரேலியா ஆகியவையும் அடங்கும்.சீனாவும் ,பாகிஸ்தானும் இந்தியாவின் நேரடி எதிரிகள். இந்திய உளவு அமைப்பான, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரோ) தலைவர் சமந்த் குமார் கோயல், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து ஆலோசனை செய்தார். இரகசியமாக நடைபெற்றதாகக் கருதப்படும் சந்திப்பு சந்திக்கு வந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசுத் தலைவர்கள் உறுதியளித்த சிறுபான்மை இனத் தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வு உட்பட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுமாறு அவர் ஜனாதிபதியுடம் கோரியதாக ச் செய்திகள் வெளிவந்துள்ளன.
றோ
தலைவரின் இலங்கை விஜயத்திற்கு தாங்கள் உதவவில்லை என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கூறினர்.
செவ்வாய்கிழமை வாராந்த அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல
குணவர்தன, “அத்தகைய புலனாய்வுத் தலைவர் ஜனாதிபதியையோ அல்லது வேறு எந்த அரசாங்க அதிகாரியையோ
சந்தித்ததாக எனக்குத் தெரியாது. அவ்வாறான ஒரு சந்திப்பு நடந்திருந்தால், அது குறித்து
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு அறிவிப்பார். அவர் எதையும் மறைக்காமல் அனைத்து தகவல்களையும்
நாட்டுக்கு வெளிப்படுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார். றோஒ தலைவர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்ததாக அரசியல் வட்டாரங்கள்
தெரிவித்தன.ஜனாதிபதியைச் சந்தித்த அவர் பஷிலை ஏன் சந்தித்தார் என்பதர்காக கெள்விக்கு
சரியான பதிலை எவரும் கூறவில்லை. றோ தலவரில்
இலங்கை விஜயம் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் கருத்தெதனையும் தெரிவிக்கவில்லை. மூடு மந்திரமாக உள்ள இந்த விஜயம் நோக்கம் புலப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம்
செய்த ஏப்ரல்-ஜூலை ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட
அரசியல் கட்சிகள் மற்றும் மக்களால் உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களுக்கான
கோரிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு முன்னதாகவே இந்திய புலனாய்வுத் தலைவரின் விஜயம் அமைந்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு உதவ நிலையான நீண்ட கால அரசாங்கத்தை
காண இந்தியா எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியேறோ தலைவரின் வருகைக்கான காரணம் என்று அரசாங்க வட்டாரங்கள்
தெரிவித்தன.
இந்து
சமுத்திரத்தில் இலங்கையின் தனித்துவமான மற்றும் மூலோபாய இருப்பிடம் முக்கிய உலக வல்லரசுகளை
ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், சில பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, உலக வல்லரசுகளை
அணிசேராத முறையில் நிர்வகிப்பதில் இலங்கை இதுவரை முழுமையாக வெற்றிபெறவில்லை.
ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான எம்.பி.க்கள் மத்தியில் ஜூலை 19 தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக இந்தியா எவ்வாறு செயல்பட்டது என்பது பொது களத்தில் உள்ளது" என்று ராஜபக்சேவை விமர்சிக்கும் ஒரு அரசியல் ஆய்வாளர் தெரிவித்தார்.“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே 2015 ஆம் ஆண்டு தன்னைத் தோற்கடித்தது இந்தியாவும் றோவும்தான் என்று கூறினார். அந்த இந்தியாவின் றோதலைவர் எதற்காக ஜனாதிபதியைச் சந்தித்தார் எனத் தெரியாமல் எதிரணிகள் குழ்ம்பியுள்ளனர்.
இலங்கையில்
யுத்தம் நடைபெற்றபோது இந்தியா அதிக உதவிகளைச்
செய்தது.இலங்கையில் கால் பதிப்பதற்காக சீனாவும் அந்த நேரத்தில் இலங்கையில் குதித்தது.
அப்போது அதை யாரும் பெரிது படுத்தவில்லை.
2009
ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், சீனா பல பில்லியன் அமெரிக்க டொலர்களை முக்கியமாக
இலங்கையின் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்துள்ளது.இலங்கை
தனது மொத்த $35 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை சீனாவுக்குக்
கொடுக்க வேண்டியுள்ளது.
மீனவர்கள் , ஏழைகளை குறிவைத்து எரிபொருள் மற்றும்
அரிசி வடிவில் சீனா தனது உதவிகளை இலங்கைக்கு விரிவுபடுத்தி வருகிறது.யாழ்ப்பாணம் ,
கிழக்குப் பல்கலைக்கழகங்களில் உள்ள பல்கலைக்கழக
மாணவர்களுக்கு சீனாவும் நிதியுதவி செய்யத் தொடங்கியுள்ளது. இதனை இந்தியா உற்று நோக்குகிறது. சீன விவசாயப் பல்கலைக்கழகத்துடன்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை எதிர்ப்பதாக
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
தெரிவித்தது.
தற்போதைய
பொருளாதார நெருக்கடியில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தை
நடத்துவதற்கான பேரம் பேசும் சக்தியை இலங்கை இழந்துள்ளது மற்றும் ஆசிய பூதங்கள் முக்கிய
வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தீவின் தேசம்
மீள்வது இரு நாடுகளின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் தங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
“உளவு பார்க்கும் கப்பல் என்று கூறப்படும் கப்பலை அனுப்பி இலங்கையில் சீனா தனது செல்வாக்கை நிரூபிக்க விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. இப்போது இலங்கையின் ஜனாதிபதியுடன் நேரடியாக விவாதிக்க தனதுறோ தலைவரை அனுப்பியதன் மூலம் இந்தியா அதற்கு பதிலடி கொடுத்துள்ளது,” என்று விக்கிரமசிங்க சார்பு அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தனித்துவமான மற்றும் மூலோபாய இருப்பிடம் முக்கிய உலக வல்லரசுகளை ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், சில பகுப்பாய்வாளர்களின் கூற்றுப்படி, உலக வல்லரசுகளை அணிசேராத முறையில் நிர்வகிப்பதில் இலங்கை இதுவரை முழுமையாக வெற்றிபெறவில்லை.ஆனாலு, வல்லரசுகளின் உதவி இலங்கைக்கு மிகவும் அத்தியாவசியமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
No comments:
Post a Comment