Tuesday, December 27, 2022

அமைச்சரானார் உதயநிதி

முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துள்ளார். தமிழக சட்ட மன்றத் தேர்தலில் உதயநிதி போட்டியிட்ட போது அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. முதலாவது அமைச்சரவையில் அவர் சேர்க்கப்படவில்லை.  என்றாலும் உதயநிதி அமைச்சராகிறார்  என்ற செய்தி பரபரப்பனது. அந்தச் செய்தி இன்று உண்மையாகி உள்ளது.

உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்களைக்கொண்ட அமைச்சரவை கடந்த மே மாதம் பொறுப்பேற்றது. அதன் பிறகு ஒன்றரை ஆண்டு கழித்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது

ஆளுநர் மாளிகையிலுள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், பேரவைக் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அனைவரும் பங்கேற்றனர். மேலும், உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி.

கடந்த 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56-வது வயதில் அமைச்சரவையில் இடமளித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தன் 46-வது வயதில் அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," நான் சட்டமன்ற உறுப்பினர் ஆனபோதும், இப்போது அமைச்சரானபோதும் என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும், தலைவர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்களின் ஆலோசனையின்படி சிறப்பாக நிறைவேற்றுவேன். அப்போதும் இப்போதும் என்மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அது அனைத்துக்கும் என் உழைப்பின் மூலம் பதிலளிப்பேன். என் முன்னேற்றத்தில் பத்திரிகையாளர்களின் விமர்சனத்துக்கும் பெரும் அக்கறை இருக்கிறது. அதற்கும் நன்றி. `மாமன்னன்’தான் எனது கடைசி படம். இனி நடிக்க மாட்டேன். கமல் தயாரிக்கும் படத்திலிருந்து விலகிவிட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சட்டமன்ரத் தேர்தலின் போது  உதயநிதியின் பிரசாரம் மக்களைக் கவர்ந்தது. ஒரு செங்கல்லை வைத்து மக்களின் மனதில் மிக இலகுவாக இடம்  பிடித்தார்.

உதயநிதி அமைச்சரானதை எதிர்க் கட்சிகள்   மிக வன்மையாகக் கண்டித்துள்ளன. வாரிசு அரசியல் என்று குற்றம் சுமத்துகின்றன. இந்தியாவில் வாரிசு அரசியல் இல்லாத மாநிலம் எதுவும்  இல்லை.கருணாநிதி,ஸ்டாலின், உதயநிதி என்பது  மட்டுமே  முன்னில்லைபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு 56-வது வயதில் அமைச்சரவையில் இடமளித்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் தன் 46-வது வயதில் அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார். ஊராட்சி சபை: 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார். தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள்மொழியில் அவர்களுடன் கலந்துரையாடும் வகையிலான இயல்பான பேச்சு, வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் மனமாறுதலை ஏற்படுத்தியது என்றால், அது மிகையல்ல. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெல்ல இவரின் பிரசாரத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்குண்டு.


 நீட் தேர்வுக்கு எதிராக, திமுக மாணவர் அணியுடன் இணைந்து தொடர் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். நீட் தேர்வால் தன் இன்னுயிரை இழந்த தங்கை அனிதாவின் சொந்த ஊரில் அவர் நினைவாக அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்று தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களையும் நூலக மேம்பாட்டுக்கான வளர்ச்சி நிதியையும் வழங்கினார். கொரோனா காலத்தில் ஊரடங்கை மட்டும் அறிவித்துவிட்டுச் செயல்படத் திறனின்றி நின்றன ஒன்றிய, மாநில அரசுகள். பேரிடரில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு, உதவிக்கரம் நீட்ட இளைஞர் அணி சார்பாக அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் அலைபேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டு, ‘உதவித் தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட அமைப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்’ என அறிவித்து அந்த நலத்திட்டப் பணிகளை ஒருங்கிணைத்தார்.

நாடாளுமன்றத்தில் நாட்டின் ஒற்றுமைக்கே குந்தகம் விளைவிக்கக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு அதற்குத் துணை நின்றது அன்றைய அதிமுக மதச்சார்பின்மைக்கு எதிரான பாஜக-அதிமுகவின் போக்கைக் கண்டித்து, தமிழகத்தில் முதல் நபராக இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கிப் போராடிக் கைதானர்.இந்தித் திணிப்பு, ஒரே தேர்வு என மொழி, கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பாசிச போக்கைக் கண்டித்து, இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.

சட்டப்பேரவை உறுப்பினராகி ஒன்றரை ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில், அமைச்சராகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

திமுகவின் முதல் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தும், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின். அவரைப் பொறுத்தவரை, இந்த வளர்ச்சி அபாரமானதுதான்.

2018ஆம் ஆண்டு அறிவிப்புக்குப் பிறகு, 2019ல் வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில மாதங்களிலேயே திமுகவின் மிக முக்கிய அணியான இளைஞரணியின் செயலாளராக்கப்பட்டார் உதயநிதி.

இதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற உதயநிதி, அப்போதே அமைச்சராவார் என பேசப்பட்டது. ஆனால், அப்போது அமைச்சராக்கப்படாத நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கழித்து இப்போது அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

உதயநிதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் துறை, இதற்கு முன்பு தமிழக அரசியலில் பெரிய முக்கியத்துவம் பெற்ற துறையாக கருதப்பட்டதில்லை. தன் மீது விமர்சனங்களை முன்வைப்பவர்களுக்கு செயல் மூலம் பதிலளிக்கப்போவதாக உதயநிதி பதிலளித்துள்ளார்.

No comments: