Saturday, December 24, 2022

பாயும் பன்னீர்ச்செல்வம் : எகிறும் எடப்பாடி பழனிச்சாமி

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக்கைப்பற்ற நடக்கும்  போராட்டத்தில் பன்னீர்ச்செல்வமும், எடப்பாடியும்  ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுகிறர்கள். பன்னீர்  ஒரு படி முன்னே  போய்   போட்டிப் பொதுக் குழுவைக் கூட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் எடப்பாடியின் கணக்கு அறிக்கையை ஏற்றுக்கொண்டிருக்கிறது.  

பன்னீர்,எடப்பாடி,தினகரன்,சசிகலா, ஆகிய நால்வரையுமிணைது தேர்தலைச் சந்திக்க  பாரதீய ஜனதா விரும்புகிறது. பன்னீர்,சசிகலா,தினகரன் ஆகிய மூவரையும் சேர்ப்பதற்கு  எடப்பாடி விரும்பவில்லை. அவர்கலைச் சேர்த்தால் தனது பதவி பறிபோய்விடும் என்ற  உண்மையை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார்.

 இது வரை காலமும் சட்டப்படி செயற்பட்டு அமைதியாக இருந்த  பன்னீர் இப்போது அதிரடியாகச் செயற்படத்தொடங்கி விட்டார். பன்னீர்ச்செல்வம் , திடீரென பொதுவெளியில் அரசியல் செய்ய தீர்மானித்துள்ளார். அதன் ஒரு கட்டம்தான் அதிமுகவின் மா.செ.க்களாக, நிர்வாகிகளாக தன்னால் நியமிக்கப்பட்டவர்களை வைத்து ஆலோசனைக் கூட்டத்தை 21‍ந் திகதி ஓபிஎஸ் நடத்தியது. இதன் மூலம் எடப்பாடிக்கு செக் வைக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்சின் நோக்கம்.

உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனக்குப் பின்னால் இருப்பதாக நீதிமன்றத்தில்   பன்னீர் தரப்பு  மனு தாக்கல் செய்ய  உள்ளது. 88 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகளும் .பன்னீர் செல்வம் அணியில் செயலாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.. திருமண மண்டபத்தில் .பன்னீர் செல்வம் ஆலோசனை கூட்டத்தை  நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய . பன்னீர்செல்வம், ’’எடப்பாடி பழனிசாமி குறித்து சரமாரியாக விமர்சனம் செய்தார். எனக்கு சோதனை வந்த போது என்னை தாங்கி பிடித்த தொண்டர்கள். பல சோதனைகள் கண்ட கட்சி அதிமுக.எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இந்த கட்சியை சிற்பாக வழி நடத்தி சென்றார்கள் என்றார்.தைரியம்  இருந்தா தனிக் கட்சி தொடங்குமாறு பன்னீர் சவால் விட்டார்.

 பன்னீரின் கூட்டம் எடப்பாடிக்கு உவப்பனதாக இருக்கவில்லை. தனது ஆதரவாலர்களுடன்  பன்னீர் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போது அவருக்கு எதிராக எடப்பாடி காய் நகர்த்தினார். தேர்தல் ஆணையம் அவருக்கு உறுதுணையாக  இருந்தது. எடப்பாடி தரப்பு கொடுத்த கணக்கு அறிக்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் பதிவிட்டது. இதனால்  எடப்பாடியை தேர்தல் ஆனையம் ஏற்ருக்கொண்டதாகத் தகவல் பரவியது.

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின், கட்சியின் கொடி, கடித்த் தலைப்பு ஆகியவற்றைப்  பயன்படுத்துவது குறித்து விளக்கம் கேட்டு, .பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தங்களை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும்,ஆனால், அதன் பிறகும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் தாங்கள் போலி அறிக்கைகளை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், விதிமுறை மீறி கட்சிக் கொடி, லெட்டர் பேடை பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லை எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள் நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும்,இனியும் அதிமுகவின் பெயரை பயன்படுத்தினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதே  போன்ற் வக்கீல் நோட்டீஸ் சசிகலாவுக்கும்  கொடுக்கப்பட்டது. அவரும் இன்றுவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் தான்  இருப்பதாக தெரிவிக்கிறார்இதற்கான  வழக்கும் நிலுவையில் உள்ளது.

அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடமே உள்ளது. மேலும், முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் ஏற்கனவே எடப்பாடி அணிக்குச் சென்றவர்கள் கூட மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு வந்தனர். இதனால் குழப்பமான ஒரு சூழலே அதிமுகவில் இருந்தது. மேலும், எடப்பாடி தரப்பில் திமுக அரசுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் எதிலும் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை.

எடப்பாடி தரப்பில் ஏற்கனவே எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை நியமிக்கச் சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். அதை இன்னும் சபாநாயகர் ஏற்கவில்லை. இந்த விவகாரம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அதேபோல மறுபுறம் அதிமுக பொருளாளர் பதவியில் இருந்த ஓபிஎஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாகத் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக அறிவித்துள்ளது எடப்பாடி தரப்பு.இதற்குப் பதிலடி தரும் வகையில் ஓபிஎஸும் மாநிலம் முழுக்க நிர்வாகிகளை நியமித்து வந்தார். அவர்களுடன் தொடர்ச்சியாக அவ்வப்போது ஆலோசனையும் கூட நடத்தி வந்தார். இந்தச் சூழலில் தான் ஓபிஎஸ், விரைவில் போட்டி பொதுக்குழு கூட்டப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதில் எடப்பாடி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாகச் சொல்லப்பட்டது.

2021-22ஆம் ஆண்டுக்கான அதிமுக வரவு செலவு கணக்கை இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்தார். இந்த கணக்கைத் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. இது எடப்பாடி தரப்பிற்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ், "நான் பொருளாளராக இருந்தபோது போன மார்ச் 21&22 கொடுத்த கணக்கைத் தான் தாக்கல் செய்துள்ளனர். அதைத்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் ஒன்றுதான்  இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வை கொடுக்கும்.

No comments: