Thursday, December 1, 2022

தமிழக காங்கிரஸ் தலைமைக்கு கடும் போட்டி


 காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதலுக்குப் பஞ்சம் இருக்காது. தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நடந்த கோஷ்டி மோதல் டெல்லிவரை சென்றுள்ளது.தமிழகத் தலைவர்களின் முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்த உடைமைகள் அடித்து நொருக்கப்பட்டன.  கைகலப்பில் மண்டை உடைக்கப்பட்டது.

பாரதிய ஜனதாவை கடுமையாக எதிர்க்கும் தமிழகத்தில்  இருந்து அதிகளவான எம்பிக்களைப் பெற வேண்டும். 2024  பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ்  காய் நகர்த்தும்  வேளையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கோஷ்டி மோதல் பெரும் தலையிடியாக  உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதற்குத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, எம்.பி-க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்திவரும் ஒற்றுமை யாத்திரையை முன்னிட்டு ஒவ்வொரு எம்.எல்.ஏ தொகுதியிலும் 100 கொடிகள் ஏற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக தலைவர்கள் வந்திறங்கியதும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் 6-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வாகனங்களில் அங்கு வந்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டனர்.

அவர்கள் அனைவரும் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் என்று கூறினர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட மூன்று வட்டாரத் தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

அவர்கள் அனைவரும் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் என்று கூறினர். பின்னர் அவர்கள் அனைவரும் திடீரென கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்டு, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமாரையும், அவரால் நியமிக்கப்பட்ட மூன்று வட்டாரத் தலைவர்களையும் உடனடியாக மாற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். அழகிரிக்கு ஆதரவானவர்களும், ரூபி மனோகரனுக்கு எதிரானவர்களும்  அவர்களுடன் வாக்குவாதப்பட்டனர். வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

அழகிரியின் பதவிக்காலம் காலாவதியாகிவிட்டது. அடுத்த தலைவராவதற்கு பலர் வரிசையில் காத்திருக்கின்றனர்.   கடந்த  2019-ம் ஆண்டு தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி   நியமனம் செய்யப்பட்டார். கட்சி விதிமுறைகளின்படி அவரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. பதவியை விட்டு வெளியேற அழகிரி விரும்பவில்லை.  கடந்த ஆண்டின் இறுதியிலிருந்தே, அந்தப் பதவிக்கான காய்நகர்த்தல்களை, தலைவர்கள் பலர் தொடங்கிவிட்டார்கள். அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியையும் கட்சியின் தலைமை தீவிரமாக முன்னெடுத்தது.    ஜோதிமணி, செல்லகுமார், கார்த்தி சிதம்பரம், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் ஆகியோர் தலைமைப் பதவியை விரும்புகின்றனர்.. ஜோதிமணி, செல்லகுமார் ஆகியோருக்குத்தான் அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்றவர்களும்   பின்வாங்குவதாகத் தெரியவில்லை.

ஆனால் மறுபுறம் தனது பதவியை விட்டுத்தர அழகிரி தரப்பு தயாராக இல்லை. அதன் விளைவாகத்தான் கடந்த நவம்பர் 15-ம் திகதி மோதல் ஏற்பட்டது. பிறகு கே.எஸ்.அழகிரிக்கு நெருக்கடி கொடுப்பதற்காக செல்வப்பெருந்தகை தலைமையில் புதிய அணி உருவானது. கடந்த நவம்பர் 19-ம் திகதி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாள் விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டனர். பதவியைக் காப்பாற்றுவதற்காக அழகிரியும், அவரை வெளியேற்ருவதற்காக ஏனையவர்களும் கச்சை கட்டிக்கொண்டு களம்  இறங்கியுள்ளனர்.செல்வப்பெருந்தகை குழுவினர், அழகிரிக்கு எதிராக பல்வேறு தகவல்களைத் திரட்டினர். பிறகு அதை கட்சியின் தலைமைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதனால் சத்தியமூர்த்தி பவன் கலவர பூமியாக மாறியிருக்கிறது. இந்த பிரச்னை அடங்குவதற்குள் கார்த்தி சிதம்பரம் தலைவர் பதவிக்காக நடக்கும் யுத்தத்தில் முழுமையாகக் களம்  இறங்கியுள்ளார்.   தலைமைப் பதவி  கிடைத்தால் சிறப்பாகச் செயர்படுவேன் என அறிவித்துள்லார். தகப்பன் சிதம்பரத்தின் ஆசீர்வாதம் அவருகு இருக்கலாம். ஏற்கனவே 2010, 2020-ம் ஆண்டில் சொல்லியிருக்கிறார். தற்போதும் சொல்கிறார்.

No comments: