Thursday, December 15, 2022

விரைவாகக் கோல் அடித்த மூன்றாவது மாற்று வீரர்

மொராக்கோவிற்கு எதிரான பிரான்ஸின் அரையிறுதியின் 79வது நிமிடத்தில்  கோல் அடித்த  ராண்டால் கோலோ முவானி மாற்று வீரராகக் களம்  இறங்கி விரைவாகக்கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டி உள்ளார். பிரான்ஸுக்காக  மூன்ராஅவ்து போட்டியில் விளையாடிய முவானி அடித்த முதல் கோல் இதுவாகும்.

Ousmane Dembele க்கு பதிலாக களம்  இற‌ங்கிய  முவானி   44 வினாடிகளில் கோல் அடித்தார். 2002ல் ரிச்சர்ட் மோரல்ஸ் (16 வினாடிகள்),1998ல் எபே சாண்ட் (26 வினாடிகள்) ஆகியோர்  இருவரும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 

நான்டெஸ் யூத் அகாடமியில் பட்டம் பெற்ற 24 வயதான கோலோ முவானி தற்போது ஜேர்மனியின் பன்டெஸ்லிகாவில் உள்ள ஐன்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட்டுக்காக விளையாடி வருகிறார். அவர் கிளப்பிற்காக 14 போட்டிகளில் விளையாடி ஐந்து கோல்களை அடித்துள்ளார். அவரது குறிப்பிடத்தக்க கோல்களில் ஒன்று நவம்பரில் ஸ்போர்ட்டிங் லிஸ்பனுக்கு எதிராக இருந்தது,

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் 20க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை உருவாக்கிய முதல் வீரர் என்ற பெருமையை கிரீஸ்மேன் பெற்றுள்ளார்.

No comments: