உதைபந்தாட்ட வீரர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக, ஈரான் விளையாடும் உலகக் கிண்ணப் போட்டிகளை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவிற்கு மாற்றுவதற்காக் ஈரான் உதைபந்தாட்ட கூட்டமைப்பு ,பீபாபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரான் உதைபந்தாட்ட தலைவர் மெஹ்தி தாஜ் கூறினார்.
ஈரான் பங்கேற்பதை வரவேற்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் கூறினார், ஆனால் "அவர்களின் சொந்த உயிர் மற்றும் பாதுகாப்பிற்காக" அவர்கள் அமெரிக்காவில் விளையாடுவது பொருத்தமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
"ஈரான் தேசிய அணியின் பாதுகாப்பை தன்னால் உறுதி செய்ய முடியாது என்று டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில், நாங்கள் நிச்சயமாக அமெரிக்காவுக்குப் பயணிக்க மாட்டோம்," என்று மெக்சிகோவில் உள்ள ஈரான் தூதரகத்தின் X கணக்கில் தாஜ் பதிவிட்டுள்ளார். நாங்கள் அமஎரிக்காவைப் பகிஷ்கரிக்கொறோம் உலகக்கிண்ணத்தைப் பகிஷ்கரிக்கவில்லை என்று ஈரானின் உதைபந்தாட்டத் தலைவர் மெஹ்தி தாஜ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து தெஹ்ரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து, அந்நாட்டின் உச்சத் தலைவரைப் படுகொலை செய்ததால், ஈரானிய வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பது சாத்தியமில்லை என்று ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் கடந்த வாரம் கூறினார்.
"இறுதியில்,
அவர்கள் விளையாடுகிறார்களா இல்லையா என்பதை கூட்டமைப்புதான் முடிவு செய்ய வேண்டும். இன்றுவரை, அவர்கள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கப் போவதாக கூட்டமைப்பு எங்களிடம் தெரிவித்துள்ளது," என்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் ஆப்பிரிக்க உதைபந்தாட்ட கூட்டமைப்பின் (AFC) பொதுச் செயலாளர் வின்ட்சர் ஜான் கூறினார்

No comments:
Post a Comment