Sunday, March 22, 2026

கூட்டணிக்குள் குழப்பம் முடிவு செய்ய தயங்கும் தலைமைகள்

அமித்ஷாவைச் சந்திக்க டெல்லியில் தவம் கிடக்கும் தமிழகத் தலைவர்கள்

ரஜினியை வம்புக்கிழுத்த ஆதவ் அர்ஜுனா. கொந்தளிக்கும் ரஜினியின் ரசிகர்கள்

நடிகைகளை அவமானப்படுத்துக் கருத்துகளால் நாறிப்போன அரசியல்

இரட்டை இலையைவிழுங்கி  ஏப்பம் விடத்துடிக்கும் தாமரை

தமிழக சட்டமனறத் தேர்தல் அறிவிக்கப்பட்டி விட்டது. ஆனால், திமுகவும், அதிமுகவும் இன்னமும் கூட்டணிப் பேச்சு வார்த்தையை முற்றாக முடிக்கவில்லை. ஏழு கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை திமுக முடித்து விட்டது. அதனால் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடியும்,  அவருடைய கூட்டணித்தலைவர்களும், அமித்ஷாவைச் சந்திப்பதற்கு டெல்லிக்கு  காவடி எடுத்துள்ளனர்.

லேடியா?, மோடியா? என நெத்தையடியாகக் கேஎட்ட இரும்புப் பெண்மணி ஜெயலலிதா  கட்டி ஆண்ட கட்சித்தலைவை இன்று அமித்ஷாவின் வீட்டு வாசலில்  மண்டியிட்டு உட்கார்ந்து இருக்கிறார். கூட்டணிக்குத் தலைமை  தாங்கும் கட்சியின்  குழுவும்,  கூட்டணிக் கட்சியின் குழுவும் சந்தித்து பல சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு எட்டிய பின்னர், கூட்டணித்தலைவரும், கூட்டணிக் கட்சியில் தலைவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தொகுதி உடன்பாடு பற்றி  அறிவிப்பார்கள். இது தாம் இதுவரகாலமும் கடைப்பிடிக்கப்படும் நெறிமுறை.

முன்னைய தேர்தல் காலத்தில்  பாரதீய ஜனதாத் தலைவர்கள் த‌மிழகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்த வழமை இன்றைய தேர்தலில் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசியல் தலைவர்கள் அமித்ஷாவை சந்திக்க அதவம் இருக்கின்றன்ர. இரண்டு மணிநேரம் காத்திருந்த எடப்பாடி 15 நிமிடங்கள் மட்டிம்தான் பேசினார். தன்னைச் சந்திக்க போயஸ்காடனுக்குச் சென்ற  பாரதீய ஜனதாத் தூதுவரை வாசலில் வைத்துத்  திருப்பி அனுப்பியவர் ஜெயலலிதார்.

"தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, நாங்கள்தான் கூட்டணிக்குத் தலைமை தாங்குவோம்" என்று எடப்பாடி கத்திக் கத்திச் சொன்னார். அது அமித்ஷாவின் கதில் விழவில்லை.  அமித்ஷாவின்கப் பாவையாக எடப்பாடி மாறிவிட்டாரோ எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  டெல்லித் தலைவர்கள் சென்னையில்  அதிமுக தலைமையுடன் பேசுவார்கள். ஆனால் இப்போது, ஒரு மாநிலக் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தும், கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடி டெல்லிக்குச் சென்று காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.

கூட்டணிக்குள் யார் இருக்க வேண்டும், யாருக்கு எத்தனை தொகுதி என்பதை எடப்பாடி தீர்மானிப்பார் என்று எதிர்பார்த்த ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து   அன்புமணி ராமதாஸ், டி.டி.வி.தினகரன் என வரிசையாக தமிழகத் தலைவர்கள் டெல்லியில் தவம் கிடக்கிறார்கள். இந்த 'டெல்லிப் பயணம்' தமிழக அரசியலில் ஒரு முக்கியமான மாற்றத்தை உரக்கச் சொல்லியிருக்கிறது.  தமிழக அரசியல் கூட்டணிக்கு  அதிமுக தலமை அல்ல என்பதை உரத்துச் சொலியுள்ளது. எடப்பாடையைத்தவிர மற்றைய அனைவருக்கும் அது புரிந்துள்ளது.

புதிய நீதிக்கட்சி  , ஐஜேகே  , பார்பர்டு பிளாக்  , பெருந்தலைவர் மக்கள் கட்சி  , தமமுக  , புதிய தமிழகம்  ஆகிய கட்சிகளை  இரட்டை இஅலைச் சென்னத்தில் போட்டியிட வைக்க எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். அமித்ஷாவின் கணக்கு வேறு மாதிரி உள்ளது. தாமரைக்கு தமிழகத்தில் போதியளவு வாக்கு வங்கி இல்லை. தமிழகத்தில் தாமரை மலரும் என தமிழிசை உரக்கச்சொன்னார். அதுத்து வந்த அனைவரும் தனையே  சொன்னார்கள். அண்ணாமலை ஒரு படி மேலே போய் அடித்துச் சொனார். அப்பவும் தாமரை  நோட்டோவுக்குக் கீழாதான் இருக்கிறது. அந்தக் கணக்கை மாற்றி அமைக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.   புதிய நீதிக்கட்சி  , ஐஜேகே  , பார்பர்டு பிளாக்  , பெருந்தலைவர் மக்கள் கட்சி  , தமமுக  , புதிய தமிழகம்  ஆகிய கட்சிகளை தமரைச் சின்னத்தில் போட்டியிட வைப்பதே அமித்சஷாவின் திட்டமாகும்.  அந்தக் கட்சித்தலிவர்களுக்கு கட்சி முகியமல்ல. தமது வெற்றியும் பதவியும் தான் முக்கியம். அவை பெயரளவிலேதான் அரசியல் கட்சிகள். மற்றும் படி அவை சாதிக் கட்டமைப்புத்தான்.

அமித்ஷாவின் திட்டத்தை உடைத்துக் கொண்டு எடப்பாடி வெளியேறுவாரா அல்லது அமித்ஷாவுக்கு அடிபணிந்து அதிமுகவை அடகு வைப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

  திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமலின் மக்கள் நீதி மய்யம்   கட்சியுடனான தொகுதிப் பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முடிவு கிடைக்காததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.  

பேச்சுவார்த்தையின் போது, மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான "உதயசூரியன்" சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் அடையாளமான 'டார்ச் லைட்' சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாக கமலில் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள் இருந்தாலும், இறுதி முடிவை கட்சித் தலைவர் கமல்ஹாசன் எடுப்பார் என ம.நீ.ம தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் . கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்ட கமல்ஹாசன், இந்த முறை தனது கட்சி வேட்பாளர்களைச் சட்டமன்றத்திற்கு அனுப்பும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவது கட்சியின் தனித்துவத்தைப் பேண உதவும் என்பது ம.நீ.ம-வின் நிலைப்பாடாக உள்ளது. மறுபுறம், கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது திமுகவின் கணக்காக இருக்கிறது. அதே போல் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்தச் சின்னம் தொடர்பான இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில சிறிய கட்சிகள் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்திலேயே தொடர்ந்து போட்டியிட்டதால், அந்த கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்வதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. கட்சியின் அங்கீகாரம் பறிபோய் விடக் கூடாது என்பதால் தங்கள் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவது என இந்த முறை அனைத்து கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதே போல் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதால், கடந்த முறை போட்டியிட்ட 173 தொகுதிகளை விட குறைவான தொகுதிகளிலேயே திமுக போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் 28,மதிமுக 4, சிபிஐ2,ஐஇமுலீ 2,கொமதேக2, மமக2, விசிக 6 ஒன்று புதுசேரி என ஒப்பந்தம் கைத்தாத்திடப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கூடுதலாகக் கேட்டனர். ஸ்டாலின், திருமாவளவன் ஆகிய இருவரும் நேரடியாகப் பேசி முடிவு செய்தனர்.

திரிஷா பிரச்சனையே  இன்னமும் தீரவில்லை. அதற்குள் நயந்தாராவின்  பிரச்சனை தலைதூக்கி உள்ளது.  தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷாவின் பெயரை குறிப்பிட்ட தனிப்பட்ட விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு நடிகை திரிஷா மட்டுமின்றி பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இது போன்று செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என பலரும் கூறினார்கள். கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்ததால், தனது கருத்திற்காக நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதை சுட்டிக்காட்டி, அது திரிஷா தான் என பலரும் அவரின் பெயரை குறிப்பிட்டே சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டார்கள். இந்த கருத்துக்கள் பரவி வந்த அதே வேளையில் விஜய், திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஒன்றாக வந்து இறங்கியது தொடர்பாகவும் சர்ச்சை பேச்சுக்கள் எழுந்தது.  நடிகர் பார்த்திபனும் குந்தவையை வீட்டில் குந்தவை எனக் கூறியதால் திரிஷா கொதித்தெழுந்தார். பிரச்சனைஅயை முடிவுக்குக் கொண்டு வருவதர்காக பார்த்திபன் மன்னிப்புக் கேட்டார். திரிஷாவின் அம்மாவும் தனதுபங்குக்கு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் திரிஷா பற்றி விமர்சனங்கள் இன்னும் முடியாமல் போய் கொண்டிருக்கிறது.

திரிஷா  பற்றிய சர்ச்சை முடிவுக்கு வராத நிலையில், திமுக அரசுக்கு எதிராக என்டிஏ கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது அதிமுக எம்.பி.,யான சி.வி.சண்முகம், நயன்தாரா பற்றி பேசி புதிய சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், " உங்கள் கனவுகளை சொல்லுங்கள், நிறைவேற்றி வைக்கிறேன் என்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். நயன்தாரா வேணும். இது தான் என் கனவு. இதை நிறைவேற்றி வைப்பாரா?" என பேசி உள்ளார்.

அரசியல் காரணங்களுக்காக நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருவதும், பிறகு அது கண்டனத்திற்கு உள்ளாவது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் களத்தில் ஏன் நடிகர், நடிகைகள் குறிவைத்து விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது. பெண்ணியம் பேசுபவர்களும் இவற்றுக்கு எதிராகக் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளனர்.

  சமீப காலமாக நடிகள், நடிகைகள் குறித்து அரசியல் பிரமுகர்கள் பலரும் தொடர்ந்து தனிப்பட்ட முறையிலான விமர்சனங்களை முன்வைப்பது தொடர்ந்து அதிகரித்து வருவது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜூனா, திமுக மிரட்டியதால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற ஒரு கருத்தை சமீபத்தில் தெரிவித்தார். திமுக அரசுக்கு எதிரான கண்ட ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தமே இல்லாமல் எதற்காக ரஜினி பற்றி அவர் பேசினார் என தெரியவில்லை. இதற்கு நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிச்சாமி, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆதவ் அர்ஜூனா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார் நயினார் நாகேந்திரன். ரஜினி ரசிகர்களும் இதில் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில்,   ரஜினியே ஆதவ் அர்ஜூனா கூறியது உண்மைக்கு புறம்பானது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனவின் பேச்சுக்கு காலம்பதில் சொல்லும் என ரஜினி தெரிவித்துள்ளார். ரஜினி தெரிவித்த காலம் தேர்தல் தினம் என பலரும் வெளிப்படையாகக் கருத்துத்  தெரிவித்துளனர்.  விஜய் வழ்மைபோல  மெளன விரதம் கடைப்பிடிக்கிறார்.

 

 

ரமணி

22/3/26 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments: