பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியும், 2016-ம் ஆண்டு சம்பியனான சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு
201 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 15.4 ஓவர்களில்
4 விக்கெற்களை இழந்து 203 ஓட்டங்கள் எடுத்து
6 விக்கெற்களால் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட் 11, அபிஷேக்
சர்மா 7, நித்திஷ்குமார் ரெட்டி 1, ஹெயின்ரிச் கிளாசன் 31, சலில் அரோரா 9, ஹர்ஷ்
துபே 3, அனிக்கெட் வர்மா 43 ஓட்டங்கள் எடுத்தனர்.
டேவிட் பெய்ன் 6 ஓட்டங்களும், ஜெய்தேவ் உனத்கட் 4 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல்
இருந்தனர்.பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே ஜேக்கப் டஃபி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி
அதிர்ச்சியளித்தார். இருப்பினும், ஹைதராபாத் அணியின் தற்காலிக கப்டன் இஷான் கிஷன்
38 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணியை மீட்டார்.
202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
பெங்களூரு அணி விளையாடத் தொடங்கியது.விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின்
அதிரடி ஆட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
பில் சால்ட் (8) ஏமாற்றம் அளித்தாலும், தேவ்தத் படிக்கல்
, விராட் கோலி இணை ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக இம்பாக்ட்
பிளேயராக களம் கண்ட படிக்கல், 26 பந்துகளில்
61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மறுபுறம் தனது கிளாசிக் ஆட்டத்தை
வெளிப்படுத்திய விராட் கோலி, 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன்
69 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல்
களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
பெங்களூரு அணி 15.4 ஓவர்களிலேயே
4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அறிமுக வீரர் ஜேக்கப் டஃபி மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட்
தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் கப்டன் இஷான் கிஷன் அதிரடியாக
விளையாடி 38 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 80 ஒட்டங்கள் அடித்தார். அவர் ஐபிஎல் போட்டிகளில்
3 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்தார். இதன்மூலம் குறைந்த பந்துகளில் 3 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில்
6-வது இடத்தைப் பிடித்தார் கிஷன். அவர் 2,180 பந்துகளில் 3 ஆயிரம் ஓட்டங்களை எடுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ரிஷப் பந்த்தும் (2,028 பந்துகள்), 2-வது இடத்தில் யூசுப் பதானும் (2,082 பந்துகள்), 3-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் (2,130 பந்துகள்), 4-வது இடத்தில் சுரேஷ் ரெய்னாவும் (2,135 பந்துகள்), 5-வது இடத்தில் எம்.எஸ்.டோனியும் (2,152 பந்துகள்) உள்ளனர்.

No comments:
Post a Comment