Sunday, December 15, 2024

2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட வீரர்கள்

 2024 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், கூகுள் தனது ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிஃப் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருடன், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா, ஸ்பெயின் கால்பந்து வீரர் லாமின் யமல் மற்றும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் அவர்களின் சாதனைகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த விளையாட்டு வீரர்கள் 2024 இல் தங்கள் முத்திரையைப் பதித்தனர், அவர்களின் செயல்திறன் மற்றும் தனிப்பட்ட சாதனைகளால்  ரசிகர்களைக் கவர்ந்தனர். 2023ல் கூகுளில் 199.4 மில்லியன் தேடல்களுடன் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 


2024ல் அதிகம் தேடப்பட்ட முதல் 10 விளையாட்டு வீரர்கள்:


இமானே கெலிஃப்


மைக் டைசன்


லாமைன் யமல்


சிமோன் பைல்ஸ்


 ஜேக் பால்


நிகோ வில்லியம்ஸ்


ஹர்திக் பாண்டியா


ஸ்காட்டி ஷெஃப்லர்


ஷஷாங்க் சிங்

பிரபல பொலிவுட் நட்சத்திரங்களை முந்திய டோனி


 கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி பொலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் , ஷாருக்கான் ஆகியோரை  பிராண்ட் அங்கீகாரத்திற்கான போட்டியில் தோற்கடித்துள்ளார்.

டோனியின் பிராண்ட் எண்டர்ஸ்மென்ட்கான ஒப்பந்தங்கள் 2024 முதல் பாதியில் கணிசமாக வளர்ந்துள்ளன என TAM Media Research இன் தரவு கூறுகிறது.

ஜனவரி மற்றும் ஜூன் 2024க்கு இடையில் அவர் 42 ஒப்பந்தங்களைப் பெற்றதாக தரவு காட்டுகிறது, 2023 இல் இதே காலகட்டத்தில் அவரிடம் 32 ஒப்பந்தங்கள் இருந்தன.

டோனி, கல்ஃப் ஆயில், யூரோகிரிப் டயர்ஸ், கிளியர்ட்ரிப், மாஸ்டர் கார்டு மற்றும் சிட்ரோயன் போன்ற பிராண்டுகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

டோனியின் 42 பிராண்ட் ஒப்புதலுடன் ஒப்பிடுகையில், அமிதாப் பச்சன் 41 , ஷாருக்கான் 34 ப்ராண்டுகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் 31 ஒப்பந்தங்களுடன் நான்காவது இடத்திலும், அக்‌ஷய் குமார் 28 ஒப்பந்தங்களுடன் ஐந்தாவது இடத்திலும், கியாரா அத்வானி 27 ஒப்பந்தங்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்

விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்களைத் தவிர்த்து, TAM மீடியா ஆராய்ச்சியின் புள்ளிவிவரங்கள், பிராண்டுகள் மற்றும் வணிக விளம்பரங்களுக்கு மட்டுமே கணக்கு. கோலி, கங்குலி ஆகியோர் டாப் 10 இடத்தை பிடித்துள்ளனர்.

Friday, December 13, 2024

கனவை நனவாக்கிய குகேஷ்


 ‘’நான் world chess champion ஆவேன்’’ என்ற வார்த்தைகள் வெறும் கனவு இல்லை ” அது வெற்றி கனவு’’ என நிரூபித்துவிட்டார் world champion குகேஷ். அன்று 7 வயது சிறுவன் கூறிய கனவு இன்று நிஜமாகியிருக்கிறது.

உலக செஸ் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  18 வயது இளம்வீரர் குகேஷ் தொம்மராஜு  18 ஆவது சம்பியனானார். உலகின் இளம் செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் தட்டிச்சென்றுள்ளார்.

  ராஜாவுடன் தனது 58 வது நகர்வை மேற்கொண்ட பிறகு, நம்பிக்கையற்ற நிலையில், 17 வது உலக சாம்பியனான  சீனாவின்  டிங் லிரன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு டை-பிரேக்கரில் இயன் நெபோம்னியாச்சியை வீழ்த்தி  டி லிரங் முடிசூட்டப்பட்டார், மேலும் அவர் வரலாறு மீண்டும் நிகழும் என்று நம்பியிருக்க வேண்டும். அவர் தனது இளைய எதிரியை விட அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பது மட்டுமல்லாமல், வேக சதுரங்கத்திலும் அவர் ஒரு சிறந்த சாதனை படைத்துள்ளார்.

குகேஷ்-க்கு இந்த ஆண்டு உலக சம்பியன்ஷிப் தொடரில்  நடப்பு சம்பியனான‌ டிங் லிரனுக்கு எதிராக குகேஷ் போட்டியிட்டார். இறுதிவரை கணிக்க முடியாத வகையில் இருவரும் காய்களை நகர்த்தினார்கள்.    14வது போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக செஸ் சம்பியன்ஷிப் பட்டம் வென்ற இரண்டாவது வீரர்  என்ற சாதனையை படைத்துள்ளார்.

டி குகேஷ் 12 ஆண்டுகள் 7 மாதங்கள் மற்றும் 17 நாட்களில் இந்த சாதனையை அடைந்ததன் மூலம் சதுரங்க வரலாற்றில் மூன்றாவது இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

பாபி பிஷ்ஷர் ,  மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்குப்  பின் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளையவர் என்ற பெருமையையும் பெற்றார்.

சம்பியன்ஷிப் பட்டத்திற்கான குகேஷின் பயணம் அசாதாரணமானது அல்ல. இறுதி ஆட்டத்தில் 58 தீவிர நகர்வுகளுக்குப் பிறகு அவர் வெற்றி பெற்றார். டிங் லிரனின் 6.5 க்கு எதிராக 7.5 புள்ளிகளை எடுத்தார். 

இந்த சாதனையானது ரஷ்ய ஜாம்பவான் கேரி காஸ்பரோவின் 22 வயதில் உலக சம்பியனான சுமார் நான்கு தசாப்த கால சாதனையை முறியடித்தது.

இந்த வெற்றியின் மூலம்,  உலக செஸ் சம்பியன்களின் வரிசையில்   இணைகிறார். அவரது சாதனை, அத்தகைய புகழ்பெற்ற மற்றும் போட்டி வரலாற்றைக் கொண்ட ஒரு விளையாட்டில் அவரது சாதனையின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

உலக செஸ் சம்பியன்  போட்டிக்கு  முன்னதாகவே குகேஷ்  வெற்றி பெறுவார் என அன்றைய சம்பியனான டி லிர‌ங் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதன்முதலாக தங்கம் வென்று சாதனை படைத்தது.அதிலும் குகேஷின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் தங்க மகன் குகேஷ்.

 

விளையாட்டு,செஸ்,இந்தியா,சிங்கப்பூர்,சாதனை

திருமாவைச் சீண்டிய விஜய் ஆதவ் அர்ஜுனாவை வெளியேற்றிய திருமா

 தமிழக அரசியல் தலைவர்களால்  பெரிதும் மதிக்கப்படும் அண்ணல் அம்பேத்காரின்  புத்தக வெளியீடு  தமிழகத்தில் நடைபெறும் என அறிவிக்கபட்ட தினத்தில் ஆரம்பமான தமிழக அரசியல் பொறி புத்தக வெளியீட்டிலன்று தீப்பிளம்பாக வெடித்துச் சிதறியது.

அம்பேத்காரின்  பிறந்தநாளன்று நடைபெற்ற  புத்தக வெளியீடு விஜயின் அரசியல் கட்சி மாநாடாக நடந்து முடிந்துள்ளது. " எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தக வெளியீட்டு விழாவை தனது அரசியல்  மேடையாக மாற்றிவிட்டார்  விஜய். திராவிட முன்னேற்றக் கழகத்தை தக்கிப் பேசும் அரங்கமாக அம்பேத்காரின் புத்தக வெளியீட்டு விழா  மாறியது. திருமாவளவனிக் கட்சியின்  துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா கைதட்டி மகிழ்ச்சியுடன்  விஜய்யை  உற்சாகப்படுத்தினார்.

ஆட்சியில் பங்கு  வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கொளுத்திப் போட்ட வெடியால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், திருமாவளவனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.  ஸ்டாலினை திருமாவளவன்   சந்தித்ததால் சுமுக நிலை ஏற்பட்டது.ஆனாலும், ஆதவ் அர்ஜுனா அடங்கவில்லை.விஜயை  உசுப்பேற்றி விட்டார்.

உசுப்பேத்துறவன் கிட்ட உமென்றும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்மெண்டும்  இருக்கணும் என பாடம் எடுத்த விஜய் சன்னதம் ஆடிவிட்டார். விஜயை பேசியது சரியா தவறா என்ற விவாதம்  இன்றுவரை தொடர்கிறது.


 விகடனும், ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனமும்  இணைந்து வெளியிட்ட அம்பெத்கரின் நூலை ஸ்டாலின் வெளியிட, திருமாவளவன்  பெற்றுக்கொள்வார் எனத் திட்டமிடப்பட்டது.ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் விஜயையும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என திட்டமிடப்பட்டது.  வெளியில் பகிரங்கப்படுத்தப்படாமல்  நடைபெற்ற இந்த  பேச்சு வார்த்தைகளை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பத்திரிகை  ஒன்று  பகிரங்கப்படுத்தியது. ஒரே மேடையில் திருமா விஜய் எனத் தலைப்பிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறும் திருமாவலவன்  விஜயையுடன்  கூட்டணி சேர்வார் எனச் சாரப்பட செய்தியை  வெளியிட்டது. அந்தச் செய்தி பரபரப்பானதால் திருமாவளவன் தன்னிலை விளக்கம் அளிக்க  வேண்டிய நிலை ஏற்பட்டது.

  அனைவருக்குமான அம்பேத்கர் என்ற நூல்  சென்னயைில் வெளியிடப்பட்டது. தமிழக  வெற்றிக் க‌ழக‌ தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டத்தில் விஜய்யும் படு அனல் பறக்க பேசினார்.

 அம்பேத்கரையும் அவரது கொள்கைகளையும் மதித்துப் போற்றும் திருமாவாளவன்  புத்தக வெளியீட்டு விழாவில்  கலந்துகொள்ளப் போவதில்லை என முடிவெடுத்தார். இது இன்னொரு  பட்டிமன்றத் தலைப்புக்கு வித்தானது.

  அனைவருக்குமான அம்பேத்கர் என்ற நூல்  சென்னயைில் வெளியிடப்பட்டது. தமிழக  வெற்றிக் க‌ழக‌ தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டத்தில் விஜய்  அனல் பறக்க பேசினார். 

ம‌க்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி,  இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளத்துடன் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக போட்டு வரும் உங்களது கூட்டணிக் கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் அவர்கள் அவங்களால இன்னிக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எத்தனை பிரஷர் இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தாலும் நான் இப்ப சொல்றேன்.. அவருடைய மனசு முழுக்க முழுக்க இங்க நம்மளோடதான் இருக்கும் என்று பேசினார் விஜய்.

அதுமட்டுமலாமல் மன்னராட்சி என திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் விஜய்க்கு பதிலடி கொடுக்கிறார்கள்.திருமாவளவனின்  கட்சித் தலைவர்களும் விஜய்க்கு எதிராக  முழக்கமிட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்ததும் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பாட்டது. அப்போது சலசலப்பு எழுந்தது.திருமா அதனை சமாளித்துவிட்டார். அந்தப் புகைச்சல் இப்போது பற்றி எரிந்ததால் ஆதவ் அர்ச்ஜுவை திருமா ஒதுக்கி வைத்துள்ளார்.

ஸ்டாலினை முதல்வராக்கியதில் ஆதவ் அர்ச்ஜுனாவின் பங்கு மிக அதிகம். ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக  இருந்த போது அவரை முன்னிருத்தி பல திட்டங்களை ஆதவ் தீட்டினார்.பணம் வாங்கிக்கொண்டு ஸ்டாலினை  முதல்வராக்கிய ஆதவ் அர்ச்ஜுனா அவரை வீழ்த்துவதற்கு விஜயைப் பயன்படுத்தத் துடிக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளரான ஆதவ் அர்ஜுனா தற்போது ஆறு மாதங்களுக்கு அந்த கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருமாவளவன்  அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகனான ஆதவ் அர்ஜுனா அரசியல் துறையில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து தேர்தல் வியூக நிறுவனங்களை நடத்தி வந்தார். வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்திற்கு முன்னதாகவே ஒன் மைண்ட் இந்தியா நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

 " 2014ஆம் ஆண்டிலிருந்து திமுகவுக்காக பணியாற்றி வந்திருக்கிறார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட போது அதில் ஆதவ் அர்ஜுனாவின் பங்கு முக்கியமானது என கூறப்படுகிறது. 2016 தேர்தல் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் உள்ளிட்ட திமுகவின் பல்வேறு நிகழ்வுகளில் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம், வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனமாக மாறியது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றிய அவர், பிரசாந்த் கிஷோரை வியூக பணிகளுக்காக அழைத்து வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரப் போவதாக பேச்சு அடிபட்டது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. மேலும் கட்சியின் மாநாடுகள், நிகழ்ச்சிகள், சமூக வலைதள பக்கங்களின் கட்டுப்பாடு என முழுவதும் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அது மட்டுமல்லாமல் மது ஒழிப்பு மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் அர்ஜுனா. 

தமிழகத்தில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும், ஒரு குடும்பம் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என நேரடியாக திமுகவை விமர்சித்து பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பினார். 

  திமுக கூட்டணியில் பத்தோடு பதினொன்றாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திடீரென இவ்வளவு ஊடக வெளிச்சம் கிடைக்க ஆதவ் அர்ஜுனா முக்கிய காரணம் என்பதை திருமாவளவன் உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது. ஆனால் சக கட்சி நிர்வாகிகளை எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி ஆதவ் அர்ஜுனாவை இடநீக்கம் செய்ததாக கூறுகின்றனர் விசிக நிர்வாகிகள்.

அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைய இருப்பதாகவும் தகவல் உலாவுகிறது. ஏற்கனவே விஜய் மீது ஊடக வெளிச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் ஆதவ் அர்ஜுனா சேர்வது கூடுதல் பலமாக இருக்கும் என அந்த கட்சி தலைமை நம்புகிறது. எனவே விரைவில் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனவும், இதற்காக திரை மறைவு பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் இல்லாமல் இருந்தாலும், தேர்தல் அரசியல், பகுப்பாய்வில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர் ஆதவ். எனவே எடுத்த எடுப்பிலேயே விஜய் கட்சியில் சேர மாட்டார். இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து அதற்குப் பிறகு தனது முடிவை அறிவிப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

 

 ரமணி

15/12/24

Thursday, December 12, 2024

உலக உதைபந்தாட அணியில் மெஸ்ஸி ரொனால்டோவுக்கு இடம் இல்லை


 FIFPRO ஆண்கள், பெண்கள் உலக 11  அனி வீரர்கலின்  பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்லது.

 70 நாடுகளைச் சேர்ந்த 28,000 தொழில்முறைஉதைபந்தாஅட்ட வீரர்கள்  வாக்கலித்து இந்த அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

  ஓய்வு பெற்ற டோனி குரூஸ் உட்பட ஆறு ரியல் மாட்ரிட் வீரர்கள்,நான்கு மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரங்கள் 2024 ஆண்கள் உலக 11 இல் சேர்க்கப்பட்டனர், டானி கார்வஜல், அன்டோனியோ ருடிகர், எடர்சன் , ரோட்ரி ஆகியோர் முதன் முதலாக உலக  11 அணியில் இடம் பிடித்துள்ளனர்.  

லூசி ப்ரோன்ஸ், மேரி ஏர்ப்ஸ், அலெக்ஸ் கிரீன்வுட், லாரன் ஜேம்ஸ், கெய்ரா வால்ஷ் ஆகியோருடன் பெண்கள் உலகம்  அணியில் உள்ளனர். 

பிரேறெஸில் வீராங்கனையான  மார்ட்டா 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு   இந்த ஆண்டின் அணிக்குத் திரும்புகிறார், அதே சமயம் பார்பரா பண்டாவைச் சேர்ப்பதன் மூலம் பெண்கள் உலக 11 வது இடத்தைப் பிடித்த முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற பெருமையை ஜம்பியா பெற்றுள்ளது.

லியோனல் மெஸ்ஸி அணியில் இடம் பெறாத 2006க்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு முதல் உலக 11 அணி இதுவாகும்.. அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், 17 முறை தனது சகாக்களால் ஆண்டின் சிறந்த அணியில் இடம்பிடித்த பிறகு, உலக 11 போட்டிகளில் பங்கேற்றதற்கான அனைத்து நேர சாதனையையும் படைத்துள்ளார்.

  பெண்கள்  அணி

கோல்கீப்பர்: மேரி ஏர்ப்ஸ் (மான்செஸ்டர் யுனைடெட்/பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், இங்கிலாந்து)

டிஃபெண்டர்கள்: லூசி வெண்கலம் (பார்சிலோனா/செல்சி, இங்கிலாந்து), ஓல்கா கார்மோனா (ரியல் மாட்ரிட், ஸ்பெயின்), அலெக்ஸ் கிரீன்வுட் (மான்செஸ்டர் சிட்டி, இங்கிலாந்து)

மிட்பீல்டர்கள்: ஐடானா பொன்மதி (பார்சிலோனா, ஸ்பெயின்), அலெ11 ஏ புட்டெல்லாஸ் (பார்சிலோனா, ஸ்பெயின்), கெய்ரா வால்ஷ் (பார்சிலோனா, இங்கிலாந்து)

ஃபார்வர்ட்ஸ்: பார்ப்ரா பண்டா (ஷாங்காய் ஷெங்லி/ஆர்லாண்டோ பிரைட், ஜாம்பியா), லிண்டா கைசெடோ (ரியல் மாட்ரிட், கொலம்பியா), லாரன் ஜேம்ஸ் (செல்சி, இங்கிலாந்து), மார்டா (ஆர்லாண்டோ பிரைட், பிரேசில்)

  ஆண்கள் உலக அணி

கோல்கீப்பர்: எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி, பிரேசில்)

டிஃபெண்டர்கள்: டானி கார்வஜல் (ரியல் மாட்ரிட், ஸ்பெயின்), விர்ஜில் வான் டிஜ்க் (லிவர்பூல், நெதர்லாந்து), அன்டோனியோ ரூடிகர் (ரியல் மாட்ரிட், ஜெர்மனி)

மிட்ஃபீல்டர்கள்: ஜூட் பெல்லிங்ஹாம் (ரியல் மாட்ரிட், இங்கிலாந்து), கெவின் டி புரூய்ன் (மான்செஸ்டர் சிட்டி, பெல்ஜியம்), டோனி குரூஸ் (ரியல் மாட்ரிட், ஜெர்மனி), ரோட்ரி (மான்செஸ்டர் சிட்டி, ஸ்பெயின்)

முன்கள வீரர்கள்: எர்லிங் ஹாலண்ட் (மான்செஸ்டர் சிட்டி, நார்வே), கைலியன் எம்பாப்பே (பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்/ரியல் மாட்ரிட், பிரான்ஸ்), வினிசியஸ் ஜூனியர் (ரியல் மாட்ரிட், பிரேசில்)

சவூதியில் உல‌கக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி


 2034  ஆம் ஆண்டு உலகக்  கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை சவூதி அரேபியா நடத்தும் என்று  பீபா  நிர்வாகக் குழு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

2034  ஆண்டு போட்டியை நடத்தும் ஒரே ஒரு நாடாக சவூதி மட்டும் விண்ணப்பித்திருந்தது.   உலகக்கிண்ணப் போட்டியை கண்டங்களுக்கு இடையே சுழற்றுவதற்கான கொள்கையை பீபா  செயல்படுத்தியது. இது ஆசியா அல்லது ஓசியானியாவிலிருந்து ஏலங்களை மட்டுமே வரவேற்றது.

கடந்த ஆண்டு வேட்புமனுவைச் சமர்பிக்க ஏலதாரர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே  அனுமதி வழங்கியது. போட்டியில் இருந்த அவுஸ்ரேலியாவும் இந்தோனேசியாவும்  பின்வாங்கின.

சவூதி அரேபியா   ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் - ஜெட்டா, ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டிகள் ,மற்றும் WTA இறுதிப் போட்டிகள் உட்பட பல உயர்மட்ட  விளையாட்டுப் போட்டிகளை நடத்த சவூதி தயாராக  உள்ளது.


 உலகக்கிண்ண நூற்றாண்டு விழா 

  மொராக்கோ, ஸ்பெய்ன்,  போத்துகல் ஆகியன 2030 ஆம் ஆண்டு உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியை கூட்டாக நடத்தும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. நூறு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்    ஆர்ஜென்ரீனா ,  உருகுவே, பரகுவே   ஆகிய நாடுகளில் முதல் மூன்று போட்டிகள் நடைபெறும் எனவும்  தீர்மானிக்கப்பட்டது.

  உருகுவேயில் முதலாவது உலகக்கிண்ணப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்ரீனாவும், உருகுவேயும் விளையாடின.  உலகக்கிண்ணப் போட்டியின்   நூற்றாண்டைக் குறிக்கும்  இந்த மூன்று நாடுகளும்   போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டின.  

Tuesday, December 10, 2024

கையெழுத்து போட முடியாது ஐசிசியை எதிர்க்கும் பென் ஸ்டோக்ஸ்


 நியூசிலாந்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. ஆனால் அந்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா 3 ஓவர்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசின. அதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் அபோட்டியின் சம்பளத்திலிருந்து தலா 15% அபராதத்தை ஐசிசி அறிவித்துள்ளது.   2025 உலக டெஸ்ட் சம்பியன்ஸ் புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே அந்த அணிகள் பெற்றிருந்த புள்ளிகளில் இருந்து தலா 3 புள்ளிகளையும் ஐசிசி அதிரடியாக கழித்துள்ளது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை   நியூசிலாந்து இழந்துள்ளது.

இந்நிலையில் ஐசிசியின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து கப்டன் பென் ஸ்டோக்ஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகமாக சுழல் பந்துகள் வீசப்படுவதால் நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடித்து விடுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசுவதால் தாமதம் ஏற்படுவதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

 2022 ஆஷஸ் தொடரின் லார்ட்ஸ் போட்டியில் இது போன்ற தண்டனை கொடுக்கப்பட்ட போது ஐசிசியிடம் கேள்வி எழுப்பியதாக அவர் கூறியுள்ளார். அதற்கு இன்னும் பதில் வராததால் தற்போதைய அபராதத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட முடியாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஆஷஸ் தொடரின் போது முதல் முறையாக இது பற்றிய கேள்வியை நான் போட்டி நடுவர்களிடம் எடுத்துச் சென்றேன். கடந்த வருடம் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஓவர் ரேட் சம்பந்தமான தாளில் நான் கையெழுத்திடவில்லை. அதற்காக ஐசிசியிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரை நான் கையெழுத்திட போவதில்லை என்று சொல்லிவிட்டேன்  என்றார்.