Tuesday, May 13, 2025

சிஎஸ்கேயின் எல்லைச்சாமி டிவால்ட் பிரெவிஸ்


 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 மறக்க கூடிய சீசனாக மாறியுள்ளது, சீசனை வெற்றியுடன் சிஎஸ்கே அணி தொடங்கினாலும் அதன் பின்னர் ஏற்ப்பட்ட தொடர் தோல்விகள் காரணமாக சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆஃப் கூட செல்ல முடியாமல் வெளியேறியது. சிஎஸ்கே அணியின் நீண்ட நாள் ஃபார்மூலாவாக இருந்த அனுபவம் இந்த சீசனில் பலிக்காமல் போனது.

கப்டன் ருதுராஜும் காயத்தால் விலக சென்னை அணிக்கு மீண்டும் கப்டனானார் எம்.எஸ் டோனி, ஆனால் அவரின் மந்திரமும் இந்த உடைந்த சிஎஸ்கே கப்பலை கரை சேர்க்க முடியவில்லை.

சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக  இரண்டு மூன்று வீரர்கள் வெளியேற மாற்றுவீரர்களாக ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் பட்டேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வந்ததிலிருந்து சென்னை அணி வேறு அணியாக மாறியுள்ளது.

முக்கியமாக சென்னை அணி புதிய எல்லைச்சாமியாக மாறியுள்ளார் டிவால்ட் பிரெவிஸ், சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில்  மொசமானது  என்று சொன்னதற்கு  இது போதுமா  பொதுமா என்று கேட்கிற அளவுக்கு மிரட்டுகிறார் டிவால்ட் பிரெவிஸ். சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இறங்கிய முதல் போட்டியிலேயே தனது முத்திரையை பதித்தார் பிரெவிஸ் 25 பந்துகளில் 42  ஓட்டங்கள் என்று விளாசினார். அடுத்த நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இக்கட்டான நிலையில்  கைகொடுத்தார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் டக் அவுட்டானர்.   கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை அணி  5 விக்கெற்களை இழந்து 61  ஓட்டங்கள் எடுத்து  தத்தளித்து கொண்டு இருந்த போது சென்னை அணியை சரிவிலிருந்து மீட்டதும் மட்டுமில்லாமல் சிஎஸ்கே அணியை வெற்றிப்பக்கம் திருப்பினார். 25 பந்துகளில் 52  ஓட்டங்கள் விளாசினார். இதில் வைபவ் அரோராவின் ஒரே ஓவரில் 30  ஓட்டங்களை விளாசினார். 

சென்னை அணிக்கு துடுப்பாட்டத்தில் மட்டுமில்லாமல் ஃபில்டிங்கிலும் அசத்தி வருகிறார் பிரெவிஸ் சென்னை அணிக்கு ஃபாப் டூ பிளெசிஸ் முன்னர் என்ன செய்தரோ அதையை மீண்டும் பிரதிப்பலிக்கிறார் பிரெவில் இவரை பேபி ஏபிடி என்று ரசிகர்கள் கூறினாலும், உண்மையில் இவர் பேபி ஃபாப் டூ பிளெசிஸ்  என்றே சொல்லலாம்.

  

Monday, May 12, 2025

அவமானப்படுத்தப்பட்ட ரோஹித் அன்றே கணித்த கில்கிறிஸ்ட்

இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனான ரோகித் சர்மா மே ஏழாம் திகதி  சர்வதேச டெஸ்ட்டில்   இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாக ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்திய அணியின்  வெற்றிகரமான க‌ப்டனாக ரி20 உலகக் கிண்ணம்,  ஐசிசி சம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா இன்னும் சில ஐசிசி கோப்பைகளை வெல்ல காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதிலிருந்து அவரது டெஸ்ட் எதிர்காலம் குறித்த பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் கப்டன்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும் சில செய்திகள் பரவி வந்தது. இவ்வேளையில் அவர்   திடீரென டெஸ்ட் கிறிக்கெற்றில்  இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இப்படி திடீரென ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் ரோகித் சர்மாவிற்கு அணியில் இடம் கிடைப்பது மிகக் கடினம். அதன் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் போகும் அவலநிலை தனக்கு ஏற்படக்கூடாது என்று ரோகித் சர்மா நினைத்திருக்கலாம்.

  தற்போது 38 வயதாகும் அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதியாக தெரியாது. அதோடு அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சுழற்சிக்கான முழு போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. இதன் காரணமாக 2027 ஒருநாள் உலகக்  கிண்ணத்திக்  கருத்தில் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடலாம் என்பதற்காக ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ரி20 , டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது முழு கவனமும், செயல்பாடும் அந்த ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி மட்டுமே இருக்கும் என்பதனால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

 . 2024-25 இல் நடைபெற்ற இந்தியா ,அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவிலேயே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போது கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து தாமாக விலகியதாகக் கூறிய ரோஹித் சர்மா, அதன் பின்னர் கடும் கேலி கிண்டலைச் சந்தித்தார். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். பிசிசிஐ வாய்ப்பை மறுக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த மோசமான நிலையை அவரே தான் தேடிக் கொண்டிருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024-25ல் இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் கப்டன் ரோஹித் சர்மா படுமோசமாக விளையாடியிருந்தார்.

 இந்திய மண்ணிலேயே ஓட்டம் குவிக்க முடியாத அவர் அவுஸ்திரேலியாவில் எப்படி  ஓட்டங்களைக்  குவிப்பார் என்று கேள்வி அப்போதே இருந்தது. அப்போது அவரை இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து ரோஹித் சர்மா பங்கேற்றார். முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி அடுத்து ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்தது. இதை அடுத்து, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தனது மோசமான ஃபார்ம் காரணமாக, ஐந்தாவது போட்டியிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். ஒரு கப்டன் எப்படி தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொள்ள முடியும் என முன்னாள் அவுஸ்திரேலிய வீரர்கள் அதைக் கேலி செய்தனர். ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இது பற்றி நெத்தியடியாகப் பேசியிருந்தார். "'ரோஹித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மற்றொரு சுற்று துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அவர் இந்திய அணியின் கப்டனாக மீண்டும் செயல்படுவது சந்தேகமே. எனவே அவர் விரைவாக தனது ஓய்வை அறிவிக்க வேண்டும். இனி அவர் இந்திய அணிக்காக விளையாட ,மாட்டார்" என்று கூறியிருந்தார். அவர் சொன்னது போலவேதான் இப்போது நடந்துள்ளது. ரோகித் சர்மா சிட்னியில் ஓய்வு அறிவித்திருந்தால், அது அவருக்கும் கௌரவமாக அமைந்திருக்கும்.

67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4302 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 40.57 ஓட்டங்கள் ஆகும். 12 செஞ்சரி, 18 அரை செஞ்சரி,88 சிக்ஸஸ், 473 பவுண்டரி. அதிக பட்சமாக 212 ஓட்டங்கள் அடித்துள்ளார்.இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 31.01 ஓட்டங்கள் ஆகும். அவுஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் அவரது சராசரி 44.66 ஓட்டங்கள் ஆகும். 

ரமணி

11/5/25  


டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கிங் கோலி

 டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் விராட் கோலி.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் தடுமாறினாலும் அப்போதைய கப்டன் டோனியின் அபிமான வீரராக ஆதரவு பெற்றார். அந்த ஆதரவை சரியாகப் பயன்படுத்திய விராட் கோலி நாளடைவில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடத்தை நிரப்பும் அளவுக்கு துடுப்பாட்டத்தில்  முதுகெலும்பாக உருவெடுத்தார். குறிப்பாக 2013க்குப்பின் உலகின் அனைத்து வகையான மைதானங்களிலும் சூழ்நிலைகளிலும் அசத்திய விராட் கோலி தொடர்ச்சியாக பெரிய  ஓட்டங் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.  டோனி 2014இல் கப்டன்ஷிப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி இந்திய அணியை முழுமையாக மாற்றினார்.

அவரது தலைமையில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய இந்தியா 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ஐசிசி டெஸ்ட் அணியாக முன்னேறி வெற்றிகளைக் குவித்தது. குறிப்பாக அவுஸ்திரேலிய மண்ணில் 2018 19 ஆம் ஆண்டு பார்டர்கவாஸ்கர்  கிண்ணத்தை  வென்ற இந்தியா சரித்திர சாதனை படைத்தது.

68 போட்டிகளில் கப்டனாக செயல்பட்ட விராட் கோலி தலைமையில் இந்தியா 40 வெற்றிகளை குவித்தது. அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைக் குவித்த இந்திய, ஆசிய கப்டன் என்ற இரட்டை சாதனையை விராட் கோலி படைத்தார். இருப்பினும் அவரது தலைமையில் இந்தியா ஐசிசி உலகக்  கிண்ணத்தை  வெல்லத் தவறியதால் விமர்சனங்கள் எழுந்தன. அதனால் 2022இல் கப்டன்ஷிப் பொறுப்பை இராஜினாமா செய்த விராட் கோலி சாதாரண  வீரனாக  விளையாடி வந்தார்.

சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மாவின் நண்பனாக விராட் கோலியும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விடை பெற்றுள்ளார். 2024 ஆம் ஆண்டு ரி 0 உலகக்  கிண்ண   வெற்றியுடன் சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதைப் போல அவர்கள் மீண்டும் ஜோடியாக டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றுள்ளனர்..

 இதுவரை 123 போட்டிகளில் விராட் கோலி 31 அரை சதம் 20 சதம் உட்பட 9230 ஓட்டங்களை 46.85 சராசரியில் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000  ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றை விராட் கோலி தவற விட்டுள்ளார்.

அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணி உடனான டெஸ்ட் தொடரின் மூலம், அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான சுற்றுகள் தொடர்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்த போட்டிகள் நீடிக்கும். இதனைக் கருத்தில் கொண்டே எதிர்கால தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக கப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றார். அதே காரணத்தால் தான், விராட் கோலியும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது

 

 

Thursday, May 8, 2025

நடப்பு சம்பியனை வெளியேற்றிய சென்னை

ஈடன் கார்டன் மைதானத்தில் டோனி சிக்சர் விளாச, சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்கட்டா அணி 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்கலில் 6 விக்கெற்களை இழந்து 179 ஓட்டங்கள் எடுத்தது. 180 என்ற வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய சென்னை 19.4 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 183 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன், சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல, அங்கிரிஷ் ரகுவன்ஷி ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

க‌ப்டன் ரகானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளுக்கு 48  ஓட்டங்களை எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மனீஷ் பாண்டே, ஆண்ட்ரூ ரசல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38  ஓட்டங்கள் எடுத்திருந்தபோது, ரசல் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா அணி 179  ஓட்டங்கள்  எடுத்தது. இதனால், 180  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

ஆயுஷ் மாத்ரே, டேவன் கான்வே ஆகிய இரண்டு தொடக்க வீரர்களும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்கள். ஐபிஎல்-இல் தனது முதல் போட்டியில் விளையாடிய உர்வில் படேல், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அது நீண்ட நேரத்திற்கு நிலைக்கவில்லை. 11 பந்துகளில் 31  ஓட்டங்கள் எடுத்திருந்த அவர் அவுட்டாகி வெளியேறிய நிலையில், மறுமுனையில் விக்கெட்டும் சரிந்து கொண்டிருந்தது.

அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். ஆனால், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டேவால்ட் பிரேவிஸ், கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறடித்தார். 25 பந்துகளில் 52  ஓட்டங் களை எடுத்திருந்த அவரும் அவுட்டாகி வெளியேறிய நிலையில், சென்னை அணி பரிதாபமான சூழலில் சிக்கியது.

பின்னர், டோனியுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடிய துபே 45 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், டோனி அடித்த சிக்ஸ் போட்டியை சென்னை அணி பக்கம் திருப்பியது.

19.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது சென்னை அணி. இதன் மூலம், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது மட்டும் இல்லாமல் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா அணியின் பிளே ஆப் கனவை கிட்டத்தட்ட இழக்க செய்திருக்கிறது.

ஐபிஎல் தொடரில் டோனி 153 கேட்ச்சுகள் பிடித்துள்ளார். அத்துடன் 47 ஸ்டம்பிங் செய்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை (153+47) எடுக்க உதவியை முதல் விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையை தோனி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் 174 விக்கெட்டுகளுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.

 கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி 14* ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்து போட்டியை ஃபினிஷிங் செய்தார். இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 100* முறை ஆட்டம் இழக்காது  களத்தில் இருந்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனையையும் டோனி படைத்துள்ளார்.

1. எம்எஸ் தோனி: 100*

 2. ரவீந்திர ஜடேஜா: 80

3. கைரன் பொல்லார்ட்: 52

4. தினேஷ் கார்த்திக்: 50

5. டேவிட் மில்லர்: 49

20 ஆவது ஓவரில் 71 சிக்ஸர்கள் அடித்து சரித்திரம் படைத்துள்ளார் டோனி 

அபாரமாக விளையாடிய தேவால்ட் ப்ரேவிஸ்  25 பந்துகளில் 52  ஓட்டங்கள்  விளாசி திருப்பு முனையை உண்டாக்கினார். குறிப்பாக வைபவ் ஆராரோ வீசிய 11வது ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என 30  ஓட்டங்கள் தெறிக்க விட்ட அவர் போட்டியை தலைகீழாக மாற்றினார்.  

ரகானேவை அவுட்டாக்கிய ரவிந்திர ஜடேஜா, பிரிமியர் லீக் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த சென்னை வீரர்கள்  பட்டியலில் டுவைன் பிராவோவை (140 விக்கெட், 116 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார். ஜடேஜா, 184 போட்டியில், 141 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

பிரிமியர் லீக் அரங்கில் 5000  ஓட்டங்கள்   எடுத்த வீரர்கள் வரிசையில் இணைந்தார் ரகானே. இதுவரை 197 போட்டியில், 5017  ஓட்டங்கள்  (2 சதம், 33 அரைசதம்) குவித்துள்ளார். இம்மைல்கல்லை எட்டிய 9வது வீரரானார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதனை பாராட்டும் விதமாக, போட்டிக்கு முன் மைதானத்தின் 'மெகா' ஸ்கிரீனில், 'இந்திய ராணுவத்தை நினைத்து பெருமை கொள்கிறோம்' என்று காண்பிக்கப்பட்டது. அப்போது கோல்கட்டா, சென்னை அணி வீரர்கள் அணிவகுத்து நிற்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.


 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்று இருந்த, நடப்பு சாம்பியனான கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமிருந்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டி இருந்தது. ஆனால், சென்னை அணிக்கு எதிராக நேற்று தோற்றதன் மூலம் கொல்கத்தாவின் பிளே-ஆஃப் கனவு தகர்ந்துள்ளது. ஏற்கனவே இரண்டு அணிகள் 16 புள்ளிகளும், ஒரு அணி 15 புள்ளிகளும், ஒரு அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கொல்கத்தா கிட்டத்தட்ட நடப்புத் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. எற்கனவே சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராத் அணிகள்,பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tuesday, May 6, 2025

கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த போப் யார்?

கத்தோலிக்க திருச்சபையில் போப் தேர்வு 2,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து பின்பற்றப்படும் ஒரு மரபு வழிமுறையாகும்.

கத்தோலிக்க திருச்சபையின் 266-வது போப்பாகவும், வத்திகன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவருக்குப் பிறகு அடுத்த போப் யார்? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அடுத்த போப் (Pope) யார் என்பதை முன்கூட்டியே கணிப்பது சாத்தியமில்லை. கத்தோலிக்க திருச்சபையில் போப் தேர்வு மிகவும் ரகசியமான, ஆன்மிக அடிப்படையிலான செயல்முறை என்பதால் யாராலும் எளிதாக கணிக்க முடியாது

பதவியில் இருக்கும் போப் இறந்துவிட்டாலோ, பதவியை ராஜினாமா செய்துவிட்டாலோ அடுத்த போப்புக்கான தேர்வு நடைபெறும். போப்பை தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றுபவர்கள் கார்டினல்கள் (Cardinals).

  முதல் ஆசிய போப் அல்லது நூற்றாண்டுகளில் முதல் கறுப்பின போப்பாண்டவர் ஆகியோர் போட்டியிடும் வாய்ப்புள்ளவர்களில் அடங்குவர்.  சில முக்கியமானவர்களின் பெயரை பல உடகங்கள் பட்டியலிட்டுள்ளன.

                     பியட்ரோ பரோலின், 70, இத்தாலி

மிதமான "தொடர்ச்சி வேட்பாளராக" பார்க்கப்படும் பரோலின், பிரான்சிஸுக்கு நெருக்கமாக இருந்தார். அவர் 2013 முதல் வத்திக்கானின் வெளியுறவுச் செயலாளராக இருந்து வருகிறார், சீனாவுடனும் மத்திய கிழக்கில் உள்ள அரசாங்கங்களுடனும் நுட்பமான பேச்சுவார்த்தைகள் உட்பட இராஜதந்திர விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறார். மதச்சார்பற்ற இராஜதந்திரிகளால் அவர் நம்பகமான மற்றும் நம்பகமான போப்பாண்டவர் பிரதிநிதியாகக் கருதப்படுகிறார். 2018 ஆம் ஆண்டில், பிஷப்களை நியமிப்பது தொடர்பாக சீன அரசாங்கத்துடன் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தின் பின்னணியில் அவர் உந்து சக்தியாக இருந்தார் , இது கம்யூனிச ஆட்சிக்கு விற்றுத் தீர்வாக சிலர் விமர்சித்தனர். பரோலின் விமர்சகர்கள் அவரை ஒரு நவீனவாதி , நம்பிக்கையின் கடினமான உண்மைகளுக்கு மேலாக சித்தாந்தத்தையும் இராஜதந்திர தீர்வுகளையும் வைக்கும் ஒரு நடைமுறைவாதியாகக் கருதுகின்றனர். அவரது ஆதரவாளர்களுக்கு, அவர் ஒரு துணிச்சலான இலட்சியவாதி மற்றும் அமைதியின் தீவிர ஆதரவாளர்.

               லூயிஸ் அன்டோனியோ டேக்லே, 67, பிலிப்பைன்ஸ்

மணிலாவின் முன்னாள் பேராயரான டேகிள், வேகமாக வளர்ந்து வரும் கத்தோலிக்க மக்கள்தொகை கொண்ட முதல் ஆசிய போப்பாக இருப்பார். ஒரு காலத்தில் அவர் பிரான்சிஸின் விருப்பமான வாரிசாகக் கருதப்பட்டார் மற்றும் மறைந்த போப்பின் முற்போக்கான நிகழ்ச்சி நிரலைத் தொடர ஒரு வலுவான போட்டியாளராகக் கருதப்பட்டார், ஆனால் சமீபத்தில் ஆதரவை இழந்ததாகத் தெரிகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் விவாகரத்து பெற்ற தம்பதிகள் குறித்த கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு மிகவும் கடுமையானது என்று அவர் கூறியுள்ளார், ஆனால் பிலிப்பைன்ஸில் கருக்கலைப்பு உரிமைகளை எதிர்த்துள்ளார்.

                     பீட்டர் டர்க்சன், 76, கானா

பல நூற்றாண்டுகளில் முதல் கறுப்பு போப் ஆவார் டர்க்சன். பருவநிலை நெருக்கடி, வறுமை மற்றும் பொருளாதார நீதி போன்ற பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்து வருகிறார், அதே நேரத்தில் மதகுருத்துவம், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம் மற்றும் ஓரினச்சேர்க்கை குறித்த திருச்சபையின் பாரம்பரிய நிலைப்பாடுகளை உறுதிப்படுத்துகிறார். இருப்பினும், பிந்தையது குறித்த அவரது கருத்துக்கள் தளர்த்தப்பட்டுள்ளன, மேலும் பல ஆப்பிரிக்க நாடுகளில் சட்டங்கள் மிகவும் கடுமையானவை என்று அவர் வாதிட்டார். ஊழல் மற்றும் மனித உரிமைகள் குறித்து அவர் குரல் கொடுத்துள்ளார்..

                பீட்டர் எர்டோ, 72, ஹங்கேரி

முன்னணி பழமைவாத வேட்பாளரான எர்டோ, பாரம்பரிய கத்தோலிக்க போதனைகள் மற்றும் கோட்பாட்டிற்கான வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார். அவர் பிரான்சிஸின் அணுகுமுறையிலிருந்து ஒரு பெரிய மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார். அவர் ஒரு சிறந்த அறிவாற்றல் மிக்கவராகவும், கலாச்சாரத்தில் சிறந்த மனிதராகவும் பரவலாகக் கருதப்படுகிறார். பிரான்சிஸுக்குப் பிந்தைய வத்திக்கானில் சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பார் என்று நம்பிய மறைந்த கார்டினல் ஜார்ஜ் பெல்லின் விருப்பமானவர் எர்டோ . 2015 ஆம் ஆண்டில், ஹங்கேரியின் தேசியவாத பிரதமர் விக்டர் ஓர்பானுடன் எர்டோ தன்னை இணைத்துக் கொண்டதாகத் தோன்றியது, அவர் தேவாலயங்கள் குடியேறிக கருத்தைஅழைப்பை எதிர்த்தார்.

                    மேட்டியோ ஜூப்பி, 69, இத்தாலி

2019 ஆம் ஆண்டு பிரான்சிஸால் கார்டினலாக நியமிக்கப்பட்ட ஜூப்பி, திருச்சபையின் முற்போக்கான பிரிவில் இருப்பதாகக் கருதப்படுகிறார், மேலும் ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்கள் மீதான மறைந்த போப்பின் அக்கறையைப் பகிர்ந்து கொண்டு, பிரான்சிஸின் மரபைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் (ஒப்பீட்டளவில்) ஓரினச்சேர்க்கை உறவுகளில் தாராளவாதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்சிஸ் அவரை உக்ரைனுக்கான வத்திக்கான் அமைதித் தூதராக நியமித்தார், அந்தத் தகுதியில் அவர் "மனிதகுலத்தின் சைகைகளை ஊக்குவிக்க" மாஸ்கோவிற்கு விஜயம் செய்தார். அங்கு அவர் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவரும் விளாடிமிர் புடினின் கூட்டாளியுமான தேசபக்தர் கிரில்லை சந்தித்தார். அவர் உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியையும் சந்தித்துள்ளார்.

ஜோஸ் டோலண்டினோ கலாசா டி மென்டோன்சா, 59, போத்துகல்

பிரான்சிஸின் இளைய வாரிசுகளில் டோலென்டினோவும் ஒருவர், இது அவருக்கு எதிராக இருக்கலாம் - லட்சிய கார்டினல்கள் மற்றொரு உயர் பதவிக்கு வருவதற்கு இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் காத்திருக்க விரும்பாமல் இருக்கலாம். ஒரே பாலின உறவுகள் குறித்த சகிப்புத்தன்மையுள்ள கருத்துக்களுக்கு அனுதாபம் தெரிவித்ததற்காகவும், பெண்களின் நியமனத்தை ஆதரிக்கும் மற்றும் விருப்பத்திற்கு ஆதரவான ஒரு பெண்ணிய பெனடிக்டைன் சகோதரியுடன் தன்னை இணைத்துக் கொண்டதற்காகவும் அவர் சர்ச்சையை ஈர்த்துள்ளார். பெரும்பாலான பிரச்சினைகளில் அவர் பிரான்சிஸுடன் நெருக்கமாக இருந்தார், மேலும் திருச்சபை நவீன கலாச்சாரத்துடன் ஈடுபட வேண்டும் என்று வாதிடுகிறார்.

               மரியோ கிரெச், 68, மால்டா

கிரெச் ஒரு பாரம்பரியவாதியாகக் காணப்பட்டார், ஆனால் 2013 இல் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மேலும் முற்போக்கான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினார். அவரது மாறிவரும் கருத்துக்கள் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான அவரது திறனைக் காட்டுகின்றன என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். அரசு சாரா நிறுவனங்களின் செயல்பாடுகளை மட்டுப்படுத்த முயன்ற ஐரோப்பிய அரசியல் தலைவர்களை அவர் விமர்சித்துள்ளார் மற்றும் பெண் டீக்கன்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

 பிஸ்ஸாபல்லா  60, இத்தாலி

2020 முதல் பிஸ்ஸாபல்லா ஜெருசலேமின் லத்தீன் தேசபக்தராக இருந்து வருகிறார், புனித பூமியில் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்காக வாதிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். 7 அக்டோபர் 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காசாவில் ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்கு ஈடாக பிஸ்ஸாபல்லா தன்னை பணயக்கைதியாகக் கொடுத்தார் . பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மே 2024 இல் அவர் காசாவுக்கு விஜயம் செய்தார். பிரான்சிஸின் திருச்சபைத் தலைமையின் சில அம்சங்களை அவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சில பொது அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளார்.

                 ராபர்ட் சாரா, 79, கினியா

சாரா ஒரு பாரம்பரிய, ஆர்த்தடாக்ஸ் கார்டினல் ஆவார், ஒரு காலத்தில் பிரான்சிஸுக்கு இணையான ஒரு அதிகாரியாக தன்னைக் காட்ட முயன்றார் என்று வத்திக்கான் பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டில், அப்போதைய ஓய்வுபெற்ற போப் பெனடிக்டுடன் இணைந்து பிரான்சிஸின் அதிகாரத்திற்கு சவாலாகக் கருதப்பட்ட மதகுருமார் பிரம்மச்சரியத்தைப் பாதுகாத்து ஒரு புத்தகத்தை எழுதினார். அவர் "பாலின சித்தாந்தத்தை" சமூகத்திற்கு அச்சுறுத்தலாகக் கண்டித்துள்ளார், மேலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகப் பேசியுள்ளார். டர்க்சனைப் போலவே, பல நூற்றாண்டுகளில் முதல் கறுப்பு போப்பாக அவர் வரலாற்றை உருவாக்க முடியும்.

வர்மா

4/5/25

  

Saturday, May 3, 2025

தமிழக அரசியல் களத்தில் கப்டனின் வாரிசு


 தமிழக தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம்  இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.களம் கண்ட அரசியல் ஜாம்பவான்களுடன்  போட்டி போட அடுத்த தலைமுறையினர் தயாராகி விட்டனர்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  கையில் இருந்த ஆட்சியை  ஜெயலலிதாவின்  மறைவுக்குப் பின்னர்  ஸ்டாலின் கைப்பற்றினார். ஆட்சியைத் தக்க வைக்க ஸ்டாலின் காய் நகர்த்துகிறார்.இழந்த ஆட்சியைக் கைப்பற்ற எடப்பாடி வியூகம் வகுக்கிறார். இத்தனை களேபரங்களுக்கிடையில் அரசியல் களத்தில் விஜய் ஆலோசனை செய்கிறார்.

மறுபுறம் பிறேமலதாவும் தனது இருப்பை உறுதிப்படுத்துகிறார். அரசியல் சாணக்கியரான கருணாநிதியையே ஓரம் கட்டியவர் விஜயகாந்த். ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையால் தமிழக எதிர்க்கட்சி ஆசனத்தைக் கைப்பற்றியவர். ஜெயலலிதாவின்  கோபப்பார்வை விஜயகாந்தை அரசியல் அரங்கில் இருந்து வெளியேற்றியது.

விஜயகாந்த் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க அவரது மனைவி பிரேமலதா மகனை  முன்னிலைப் படுத்துகிறார்.

2026 ஆம் ஆண்டு நடைபெறும்  தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக என பல்வேறு கட்சிகளுடன்   சீமான், விஜய் ஆகியோரும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்களுடன்  பிரேமலதாவும் அரசியல் களத்தில் குதித்துள்ளார்.

   தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்  கடந்த 30ம் திக‌தி நடைபெற்றது. விஜயகாந்த் மறைவுக்குப் பின்னர் நடைற்ற  முதல் பொதுக்குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதால் பல முக்கிய முடிவுகளும் இதில் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் (ஒரு நபர் மட்டும்), மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில்  கலந்துகொண்டனர்.

தேமுதிக பொதுக்குழு கூட்டம்  நடைபெற்ற நிலையில் தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக  விஜய பிரபாகரனும்,  பொருளாளராக எல்.கே சுதீஷும் நியமனம் செய்து அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 இதனையடுத்து விஜய பிரபாகரன் மேடையில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் படத்தின் முன் நின்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்

அதன்பிறகு விஜய பிரபாகரன் மேடையில் இருந்து கீழே இறங்க முற்பட்டார். அப்போது பிரேமலதா பிரபா.. பிரபா என்று அழைத்து கொஞ்சம் நிற்க வேண்டும் என்று கூறினார். பின்னர் மைக்கில் பேசிய பிரேமலதா  கையில் இருப்பது கப்டன் விஜயகாந்த் மோதிரம். இந்த நாளில் அவருடைய தந்தை மோதிரத்தை அணிய வேண்டும் என்று விஜய பிரபாகரன் விருப்பப்பட்டார். அதனால் கப்டனின் மூத்த புதல்வர் கப்டனின் வாரிசான விஜய பிரபாகரன் அவர்களுக்கு கப்டன் மோதிரத்தை அட்சய திருதி நாளில் உங்களின் அனைவரின் சார்பாக நான் ஒரு அணிவிக்கிறேன் என்று கூறினார்.

அப்போது எல்.கே.சுதீஷ் பிரேமலதா விஜயகாந்த் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து கழகத்தின் வளர்ச்சிக்காக 50,000 ரூபாயை கழகப் பொருளாளர் இடம் வழங்குகிறேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்திற்கு மணிமண்டபம், பாரத ரத்னா விருது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் திக‌தி தேமுதிக நடைபெறும் என்று அறிவித்தார்.

பொதுக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும் விஜயகாந்த் சிலைகளை நிறுவுவது, சென்னையில் உள்ள 100 அடி சாலைக்கு விஜயகாந்த் பெயர் சூட்டப்பட வேண்டும், விஜயகாந்த்துக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்பது சில முக்கிய முடிவுகள் ஆகும்.

தானும் விஜய பிரபாகரனும் அனைத்து சட்டசபைத் தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கப் போவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்

தேமுதிக தற்போது எந்தக் கூட்டணியில் இருக்கிறது என்பதில் தெளிவு இல்லை. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. தற்போது பிரிந்து கிடந்த அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இதனால் தேமுதிகவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணியில்தான் தேமுதிகவும் இடம்பெறும் என்று தெரிகிறது. ஒரு வேளை அங்கு தேமுதிகவுக்கு உரிய மரியாதை கிடைக்காத பட்சத்தில் திமுக பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது. அல்லது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இணைந்து போட்டியிடவும்சந்தர்ப்பம் இருக்கிறது. 

  அரசியல் கள‌த்தில் குதித்த விஜய்  கட்சியினரை மட்டும் சந்தித்து வருகிறார்.  பத்திரிகையாளர் சந்திப்பு எதனையும் நடத்தவில்லை.  தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு சாவடி முகவர்களின் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்.இதில் இலட்சக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.அப்போது  விஜய் திறந்த வெளி வாகனத்தில் வரும் போது ரசிகர்கள் திடீரென குதிப்பது, வாகனத்தை வேகமாக பின் தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இது தொடர்பான  வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

விஜயின்  பின்னால் தொண்டர்கள்  இல்லை.  வெறி பிடித்த ரசிகர்கள் மட்டுமே இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

விஜயைப் பார்ப்பதற்காக கூடிய கூட்டம் கட்டுக்கடங்காததால் பல அசம்பாவிதங்கள் நடைபெற்றன.  இதனால் நொந்துபோன விஜய் அறிக்கைமூலம் கோரிகை விடுத்துள்ளார்.

என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.

மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.

நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்

உங்க அன்ப நான் மதிக்கறேன் இனி எப்பவும் மதிப்பேன் அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 விஜயைக் காணக் கூடும் கூட்டம் வாக்காகுமாஎன்பது  தேர்தலின் போது தெரிந்து விடும்.

ரமணி

11/5/25 

ஐபிஎல் 25சாதனைகளும் வேதனைகளும்

 இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள்  புதிய சாதனைகளிப் படைத்து வரலாற்றை எழுதுகிறார்கள். கோடிகளை அள்ளிக் கொடுத்து வாங்கப்பட்ட நட்சத்திர வீரர்கள் எதிர் பார்ப்பைப் பூர்த்தி செய்ய வில்லை.  ஐபிஎல்  இல் அதிக‌ ரசிகர்களை  கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்  மிக  மோசமாகத் தோல்வியடைந்துள்ளது. 

  சேவாக்கின் 17 வருட சாதனை உடைக்கப்பட்டது 

 சென்னைக்கு எதிராக விளையாடிய ப‌ஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதிலும் 5 பௌண்டரி 4 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சிஎஸ்கே அணியின் ஆறுதல் வெற்றியைப் பறித்தார். அத்துடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கப்டன் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார்.

கடைசியாக 2008ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கப்டன் வீரேந்திர சேவாக் சேப்பாக்கத்தில்  71 ஓட்டங்கள் அடித்தார்.  தற்போது அந்த 17 வருட சாதனையை ஸ்ரேயாஸ் 72  ஓட்டங்கள் அடித்து உடைத்துள்ளார். அத்துடன் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது வென்ற கப்டன் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் வீரேந்திர சேவாக், அடம் கில்கிரிஸ்ட், கௌதம் கம்பீர், ரோஹித் சர்மா, ரஜத் படிதார் ஆகியோரும் அந்த சாதனையை படைத்துள்ளனர்.

சஹால் 'ஹட்ரிக்'

பிரிமியர் லீக் அரங்கில் யுவேந்திர சஹால், 2வது முறையாக 'ஹட்ரிக்' விக்கெட் கைப்பற்றினார். இதற்கு முன் 2022ல் ராஜஸ்தானுக்காக விளையாடிய இவர், மும்பையில் நடந்த கோல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனை படைத்திருந்தார்.

 இது, பிரிமியர் லீக் வரலாற்றில் பதிவான 23வது 'ஹாட்ரிக்' ஆனது. அமித் மிஸ்ரா (2008, 2011, 2013) அதிகபட்சமாக மூன்று முறை இச்சாதனை படைத்தார். யுவராஜ் சிங் (2009ல் 2), சஹால் (2022, 2025) தலா 2, பாலாஜி (2008), நிடினி (2008), ரோஹித் சர்மா (2009), பிரவீண் குமார் (2010), அஜித் சண்டிலா (2012), சுனில் நரைன் (2013), பிரவீன் தாம்பே (2014), ஷேன் வாட்சன் (2014), அக்சர் படேல் (2016), சாமுவேல் பத்ரீ (2017), ஆன்ட்ரூ டை (2017), ஜெயதேவ் உனத்கட் (2017), ஷ்ரேயஸ் கோபால் (2019), சாம் கரான் (2019), ஹர்ஷல் படேல் (2021), ரஷித் கான் (2023) ஆகியோர்  தலா ஒரு முறை இச்சாதனை நிகழ்த்தினர்.

  வரலாறு காணாத   மோசமான  தோல்வி

 

  ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் திக‌தி சேப்பாக்கத்தில்பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வியடைந்தது.   

 10 போட்டிகளில் வெறும் 2 வெற்றி 8 படுதோல்விகளை சந்தித்த சென்னை அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் 2020, 2022, 2024க்குப்பின் 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் சென்னை தோல்வியை சந்தித்துள்ளது.   ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி   மோசமான சாதனைப் படைத்துள்ளது.

 இந்த வருடம் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளிலும் சென்னை தோற்றுள்ளது. இதன் வாயிலாக சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்றில் முதல் முறையாக சிஎஸ்கே 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துள்ளது. இது போக ஒரு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் அதிக தோல்விகளையும் பதிவு செய்து சென்னை வரலாறு காணாத மோசமான சாதனை படைத்துள்ளது.  208 ஆம் ஆண்டும், 2012 ஆம் ஆண்டும் தலா 4 போட்டிகளில் சென்னை தோல்வியடைந்தது.

ரமணி

11/4/25