இத்தாலி, உருகுவே, இங்கிலாந்து, கொஸ்ரரிகா ஆகியன டி பிரிவில் உள்ளன. நான்கு முறை சம்பியனான இத்தாலி இரண்டு முறை சம்பியனான உருகுவே ஒரு தடவை சம்பியனான இங்கிலாந்து ஆகியவற்றுடன் கொஸ்ரரிகாவும் உள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, உருகுவே ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் கொஸ்ரரிகா பலம் குறைந்த நாடாக உள்ளது.
வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் இந்தப் பிரிவின் நாடுகள் உள்ளன. போட்டியை சமப்படுத்தினாலும் புள்ளிகளின் அடிப்படையில் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இந்தப் பிரிவில் உள்ள நாடுகளின் வீரர்களை உள்ளடக்கிய அணியில் ஆறு இத்தாலி வீரர்களும், மூன்று உருகுவே வீரர்களும், இரண்டு இங்கிலாந்து வீரர்களும் உள்ளனர். இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து தலா இரண்டு வீரர்களும் உருகுவேயிலிருந்து ஒரு வீரரும் மேலதிக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
கோல் கீப்பர் பவ்ரன் (இத்தாலி), பின்கள வீரர் கள் கிறிஸ்ரியன் மகியோ (இத்தாலி), டீகோ குடின் (உருகுவே), அன்ரியா பர்ஸல்கி (இத்தாலி), ஜோர்ஜியோ சிலினி (இத்தாலி), லிதொன் பைனிஸ் ( இங்கிலாந்து).
மத்திய கள வீரர்கள் டானியல் டி ரோஸி (இத்தாலி), அன்ரியா பலோ (இத்தாலி), ரூனி (இங்கிலாந்து), முன்களவீரர்கள் எடின்சன் கவானி (உருகுவே), லூயிஸ் சுயாரெஸ் (உருகுவே),
மேலதிக வீரர்கள் பெனாண்டோ முஸ்லேரா (உருகுவே), கிலென் ஜோன்சன் (இங்கிலாந்து), கிரேசலி (இங்கிலாந்து), கலுடியோ மாஸிசோ (இத்தாலி), மரியோ பலோரெலி (இத்தாலி).
கோல் கீப்பர் மூன்று பின்களவீரர்கள் இரண்டு மத்திய கள வீரர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்களாதலால் எதிரணி கோல் அடிப்பது சிரமமானது. முன்கள வீரர்கள் இருவரும் உருகுவே வீரர்களாகையால் கோல் அடிக்கும் வாய்ப்பு உருகுவேக்கு அதிகம் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும் இங்கிலாந்தும் 24 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளன. உலகக்கிண்ணப் போட்டியில் 90ஆம் ஆண்டு இத்தாலியும், இங்கிலாந்தும் சந்தித்தபோது இத்தாலி வெற்றிபெற்றது. உருகுவேயும், இங்கிலாந்தும் இரண்டு முறை சந்தித் துள்ளன. ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. உருகுவேயும் கொஸ்ரரிகாவும் எட்டு போட்டிகளில் விளையாடின. அனைத்துப் போட்டிகளிலும் உருகுவே வெற்றிபெற்றது. இத்தாலியையும் இங்கிலாந்தையும் முதல் முதலாக கொஸ்ரரிகா சந்திக்கப்போகிறது.
இத்தாலி, உருகுவே ஆகிய இரண்டும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது. அந்த இரண்டு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்து பலவீன மாக உள்ளது. உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றிபெறக்கூடிய பலம் கொஸ்ரரிக்காவுக்கு இல்லை. ஒரு போட்டியை சமப்படுத்தினாலே இரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள்.
வர்மா
சுடர் ஒளி 02/02/14
No comments:
Post a Comment