Monday, February 3, 2014

கூட்டணிக் குழப்பம் முடிவுக்கு வருகிறது

தமிழக அரசியலில் நிலவிய கூட்டணிக் குழப்பங்களுக்கு ஓரளவு விடை கிடைத்துள்ளது. விஜயகாந்த் தனது முடிவை இன்று அறிவிக்கிறார்.மேலவைத் தேர்தலில் மூலம் விஜயகாந்தை அசைத்துப் பார்த்தார். கருணாநிதி.விடாக் கொண்டனான விஜயகாந்த் மசிந்து கொடுக்கவில்லை.
தமிழக மேலவைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நான்கு உறுப்பினர்களையும், கூட்டணிக் கட்சி ஒரு உறுப்பினரையும் பெறுவது உறுதியானது இந்நிலையில் வெற்றிபெறுவதற்குரிய வாக்குபலம் இன்றி தனது வேட்பாளரை களம் இறக்கி வெற்றிபெற்று விட்டார் கருணாநிதி. ஆறுவேட்பார்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், இருவரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆகையினால் ஆறு பேரும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டு விட்டனர்.
விஜயகாந்த் வந்தால் சந்தோசம், விஜயகாந்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் போட்டியிட்டால் தனது வேட்பாளர் திருச்சி சிவா வாபஸ்  பெறுவார் என்று கருணாநிதி ஆசை வார்த்தை கூறினார். இவையயல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் கேட்காமல் போய் விட்டன. விஜயகாந்தின் வேட்பாளர். களம் இறங்காததனால் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரமாட்டார் என்பது உறுதியானது.

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைக்க பாரதீய ஜனதாக்கட்சி முனைந்துள்ளது. வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவரும் பேச்சை முடித்து விட்டனர். புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கட்சி ஆகியனவும் பாரதீய ஜனதாக் கட்சியுடன் பேச்சு நடத்துகின்றன. இவர்களுடன் விஜயகாந்தும் சேர்ந்தால் அசைக்க முடியாத கூட்டணியாக மாறிவிடும் என பாரதீய ஜனதாக்கட்சி இருக்கிறது.வைகோவும்,டாக்டர் ராமதாஸும் போட்டிடவிரும்பும் தொகுதிகளில் பட்டியலை கையளித்துள்ளார். விஜயகாந்திடமும் பெரியதொரு பட்டியல் உள்ளது. வைகோ 15தொகுதிகளை எதிர்பார்க்கிறார். அதில் ஐந்து தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும் என்கிறார்.தான் விரும்பய தொகுதியை வழங்காமையினால் தான் கடந்த தேர்தல்களின் போது கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் விட்டு வெளியேறினர்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது தனது கட்சி போட்டியிடும் 11 தொகுதிகளையும் வேட்பாளர்களையும் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இவர் 15 தொகுதிகளை எதிர்பார்க்கிறார். கடைசி நேரத்தில் வைகோவை விட ஒரு தொகுதி அதிகமாக வேண்டும் என்று அடம்படிப்பார். புதுவையின் மீது டாக்டர் ராமதாஸுக்கு ஒரு கண் உள்ளது. ஆகையால் புதுவை உட்பட சில  தொகுதிகளை விட்டுக் கொடுக்க  அவர் தயாராகயில்லை.புதுவை என் ஆர் காங்கிரஸ் பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி சேர விரும்புகிறது. அந்தக்கட்சிக்கு புதுவை ஒதுக்கப்பட்டால் ராமதாஸின் நிலை சிக்கலாகிவிடும். புதுவையை விட்டுக்கொடுத்து கூட்டணியில்  நீடிப்பாரா ரோசத்துடன் வெளியேறுவாரா என்பதை தொகுதிப் பங்கீட்டின்போது தான் தெரிந்து கொள்ள முடியும்.

விஜயகாந்தின் பதிலை தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்று முடிவை அறிவிப்பதற்காக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இரகசியப் பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவடைந் திருக்கும்.விஜயகாந்துக்கு எத்தனை கட்சிகள் ஒதுக்கப்பட்டன என்ற விபரம் தெரிவாவதற்கு சில நாட்கள் காத்திருக்க வேண்டும். பேச்சு தொகுதிப் பங்கீடு என்ற நாடகம் அரங்கேற்ப்படும் போதே  உண்மையான முடிவு அறிவிக்கப்பட்டடும்.விஜயகாந்தின் வருகைக்காக சில அரசியல் கட்சிகள் கதவைத்திறந்து வைத்துள்ளன. ஆனால், அவரது செல்வாக்கு சரிந்துள்ளதாக  சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. அண்மையில் வெளிவரும் கருத்துக் கணிப்புகள் பாரதீய ஜனதாக்கட்சியையும், அண்ணா   திராவிட முன்னேற்றக் கழகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.  திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும்  கருத்துக்கணிப்பனால் கதிகலங்கிப் போயுள்ளன. 

தமிழகத்தின் சிறிய கட்சிகளுடன்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த தயாராகி விட்டது. வைகோ ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோரை  நம்பிகளம் இறங்க தயாராகி விட்டது. பாரதீய ஜனதாக்கட்சி, திருமாவாளவன்  டாக்டர் கிருஷ்ணசாமி, முஸ்லிம் தலைவர்களுடன் சூரிய உதயத்தைக் காண லாம் என கருணாநிதி நினைக்கிறார். கை பிடிக்க ஆள் இல்லாமல் காங்கிரஸ் தடுமாறுகிறது.
கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் தலைமையிலான இரு முனைப்போட்டியே கடந்த கால தேர்தல்களில் நடைபெற்றன. இம்முறை நான்கு  முனைபோட்டி நடை பெறும் சாத்தியம் உள்ளது. அடுத்த ஆட்சி யைத் தீர்மானிக்கும் சக்தி   நடுநிலையாளர்களின் கையிலே உள்ளது.

வானதி 
சுடர் ஒளி   02/02/14  


2 comments:

Anonymous said...

விஜயகாந்துக்கு உதவுவதாகக் கூறப்படும் 6 - 8 சதவீத வாக்குகள் பாராளுமன்றத் தேர்தலில் அவருக்கு உதவுமா என்கிற சந்தேகம் எனக்கு எப்போதும் உள்ளது. தங்களது கருத்து என்ன கூற முடியுமா.

முதல்வரின் ஆணவத்தை அழிக்க இந்தத் தேர்தல் உதவினால் பெரிதும் மகிழ்வேன்.

நன்றி,

கோபாலன்

வர்மா said...

அன்புக்குரிய கோபாலன். விஜயகாந்துக்கு உள்ள வாக்கு வங்கியின் மூலம் தமிழக சட்டமன்றத்தேர்தலில் கூட வெற்றி பெ
ற முடியாது விஜயகாந்த் நினைத்தால் தமிழக முதல்வரின் ஆணவத்தை அடக்கலாம்.தி.மு.க அல்லது பி.ஜே.பியுடன் கூட்டணி சேரவேண்டும். விஜயகாந்த அதிகமாக ஆசைப்படுகிறார். இது தமிழக முதல்வரின் வெற்றிக்கு அச்சாரமாகிவிடும்.அது தெரிந்துதான் கருணாநிதி வருந்தி அழைக்கிறார்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா