உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கடமையாற்ற 25 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக தலா இரண்டு மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பரபரப்பாக்கிய இங்கிலாந்து மத்தியஸ்தர் ஹாவாட் வெப் பின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபரிக்காவில் 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்னும், நெதர்லாந்தும் மோதின. விறுவிறுப்பான அந்தப் போட்டியில் 14 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டிய ஹாவாட் வெப் பரபரப்பாக்கினார். போட்டி முடிவடைந்ததும் நெதர்லாந்து பயிற்சியாளர் பெட்வன் மாவி ஜிக் மத்தியஸ்தரான ஹாவாட் வெப்புடன் தர்க்கம் செய்தார். நெதர்லாந்து ரசிகர்களுக்கு வில்லனாக மாறினார். ஹாவாட் வெப்புக்கு உதவியாக மைக்கல் முல்கரே, டெரன்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாக் கண்டத்திலிருந்து அதி கூடிய ஒன்பது மத்தியஸ்தர்களும், ஓசியானி தீவுகளில் இருந்து ஒரே ஒரு மத்தியஸ்தரும் தெரிவு செய்யப்பட்டுள் ளனர்.
ஆசியா/அவுஸ்திரேலியாவிலிருந்து நான்கு மத்தியஸ்தர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வட அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து தலா மூன்று மத்தியஸ்தர்கள் தேர்வாகியுள்ளனர்.
ஐரோப்பா, பீலிக்ஸ்புரூக் (ஜேர்மனி) கொனெக்ககிர் (துருக்கி), ஜொனாஸ் எரிக்ஸன் (சுவிடன்), பஜோர்ன் குபீஸ் (நெதர்லாந்து), மிலாரட் மயிட் (சேர்பியா), ரெட்ரோ புரொன்கா (போர்த்துகல்), நிககோலா ரிஸ்ஸோலி (இத்தாலி), கார் லோஸ் வலாஸ்கோ காபெல்லோ (ஸ்பெய்ன்), ஹாவாட் வெப் (இங்கிலாந்து)
ஆசியா/ அவுஸ்திரேலியா ! ரவ்ஷான் இர்மாரோவ் (உஸ்பெகிஸ்தான்) யூஸிதிஸ் தி முரா (ஜப்பான்) நவாவ் சுக்ரல்லா (பஹ்ரேன்), பென் வில்லியம்ஸ் (அவுஸ்திரேலியா)
தென் ஆபிரிக்கா என்ரிகியூ ஓஸிஸ் (சிலி),நெஸ்ரோர் பிராரை (ஆர்ஜென்ரீனா) வில்லியம் ரல்டன் (கொலம்பயா) ரன்ட்ரோ ரச்சி (பிரேஸில்) கார்லொஸ் வெரா ரொட்ரி கிஸ் (ஈக்குவடோர்)
ஆபரிக்கா தொமன்டிஸ் டியூ ( ஐவரி கோஸ்ட்) பக்ரி கஸ்ஸமா (காம்பயா), டிஸ் மெல் ஹய் முடி ( அல்ஜிரியா)
வட அமெரிக்காd ஜோல் அக்கியூல் (எல்சல்வடோர்) மாக் ஜிசெர்(அமெரிக்கா) மார்கோ ரொட்ரி கியூஸ் மொரேனோ (மெக்ஸிகோ)
ரமணி
சுடர் ஒளி 29/01/14
No comments:
Post a Comment