சிலியில் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்ற பிரேஸில் தனது சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. பிரேஸிலின் இளம் படைக்கு ஈடுகொடுக்க முடியாத எதிரணிகள் தடுமாறின. வாவா, கரிஞ்சா ஆகிய பிரேஸில் வீரர்களின் அற்புதமான விளையாட்டுக்கு ஈடுகொடுக்க முடியாத எதிரணிகள் வீழ்ந்தன. 1958ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் கலக்கிய பீலே முதல் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடினார். தசைப்பிடிப்பு காரணமாக அடுத்த போட்டிகளில் விளையாட வில்லை.
ஹங்கேரியின் இளம் வீரரான ரியன் அல்பேட் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார். மூன்று போட்டிகளில் மாத்திரம் விளையாடி நான்கு கோல்கள் அடித்த இவர், கோல்டன் ஷீ விருதையும் சிறந்த இளம் வீரருக்கான விருதையும் பெற்றார்.
சிலியில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட 56 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. கடந்த ஆண்டு விளையாடிய சுவீடன் தகுதிபெறவில்லை. கொலம்பயா தகுதி பெற்றது. 32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. ஜுன் 30ஆம் திகதி முதல் ஜுலை 1%ஆம் திகதிவரை நடைபெற்ற இப் போட்டியை 8,93,1%2 பேர் கண்டு இரசித்தனர்.
பல்கேரியா, இங்கிலாந்து, ஹங்கேரி, சோவியத் ரஷ்யா, சுவிட்ஸர்லாந்து, செக்கஸ் லோவாக்கியா, யூக்கஸ்லோவாக்கியா, ஜேர்மனி, ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகள் ஐரோப்பாவிலிருந்தும், ஆர்ஜென்ரீனா, சிலி, பிரேஸில், உருகுவே, கொலம்பியா ஆகிய நாடுகள் தென் அமெரிக்காவிலிருந்தும் மெக்ஸிகோ வட அமெரிக்காவிலிருந்தும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.
தகுதிபெற்ற 16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. முதல் இரண்டு இடங்களைப் பெற்ற நாடுகள் கால் இறுதிக்குத் தெரிவாகின.
குழு 1இல் சோவியத் ரஷ்யா, ஹங்கேரி, கொலம்பியா. குழு 2இல் மே.ஜேர்மனி, சிலி, இத்தாலி, சுவிட்சர்லாந்து. குழு 3 இல் பிரேஸில் செக்கஸ்லோவாக்கியா, மெக்ஸிகோ, ஸ்பெய்ன். குழு 4இல் ஹங்கேரி, இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா, பல்கேரியா ஆகியன விளையாடின. பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் ஹங்கேரி 6d1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் சுற்றில் வெற்றிபெற்ற சிலி ,சோவியத் ரஷ்யா, யூக்கஸ்லோவாக்கியா, மே.ஜேர்மனி, பிரேஸில், செக்கஸ்லோவாக்கியா, ஹங்கேரி, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான கால் இறுதிப்போட்டி நடைபெற்றது. பரேஸில், சிலி, செக்கஸ்லோவாக்கியா, யூக்கஸ்லோவாக்கியா ஆகியன வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறின. சிலிக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரேஸிலும், யூக்கஸ்லோவாக்கியாவுக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் செக்கஸ்லோவாக்கியாவும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவாகின.
பிரேஸில், செக்கஸ்லோவாக்கியா ஆகிய வற்றுக்கிடையேயான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பிரேஸில் சம்பயனானது. யூக்கஸ்லோவாக்கியாவுக்கு எதிரான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற சிலி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இவானோ (சோவியத் ரஷ்யா), ஜேகோவிச் (யூக்கஸ்லோவாக்கியா), சன்செக்ஸ் (சிலி), வாவா (பிரேஸில் ) கார்னிசா (பிரேஸில்) ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்தனர். பிரேஸில் அதிகபட்சமாக 14 கோல்கள் அடித்தது. யூக்கஸ்லோவாக்கியா, சிலி ஆகியன தலா பத்து கோல்களும் சோவியத் ரஷ்யா ஒன்பது கோல்களும் அடித்தன. பல்கேரியா ஆசைக்கு ஒரே ஒரு கோல் அடித்தது.
உலக உதைபந்தாட்டப் போட்டியில் ஆரம்பவேலைகள் சிலியில் நடைபெற்றபோது 1960ஆம் ஆண்டு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அப்போது உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக ஆர்ஜென்ரீனா அறிவித்தது. இழப்பலிருந்து மீண்ட சிலி, உலகக் கிண்ணப் போட்டியை சிறந்த முறையில் நடத்தி முடித்தது.
சிலிக்கு எதிரான அரை இறுதிப்போட்டியில் அமரிடோ, வாவா, ஸிரோ ஆகியோர் சிறப்பாக விளையாடி கோல் அடித்தனர். பீலே, கார்னிச்சா ஆகியோர் இல்லாத நிலையிலும் பிரேஸில் சம்பயனானது. 1958ஆம் ஆண்டு சம்பியனான பிரேஸில் அணியின் பயிற்சியாளரான ஸேஸே சுகவீனமடைந்ததனால் அவருடைய சகோதரன் பயிற்சியாளராகி சம்பியன் பட்டத்தைப் பெற்றுக்கொடுத்தார். மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் 4-3-3 என்ற வரிசையில் வீரர்களை நிறுத்தி வெற்றிபெற்றார்.
இத்தாலி அணிக்கு எதிராக மூன்று தடவைகள் சிவப்பு அட்டைகளைக் காட்டிய மத்தியஸ்தரான கென் அஸ்ரன், தான் ஓர் இராணுவ வீரன் என்றார். சிலியில் நடைபெற்ற இப்போட்டிகள் ஐரோப்பாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
சிலி, பிரேஸில் ஆகியவற்றுக்கிடையேயான அரை இறுதிப்போட்டியை 80 ஆயிரம் பேர் பார்வையிடடனர். அதிகூடிய பார்வையாளர்கள் இரசித்த போட்டியாக இது சாதனைப் புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டது.
சுடர் ஒளி
ரமணி 09/02/14
No comments:
Post a Comment