இத்தாலி |
இத்தாலி
தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள இத்தாலி, ஐரோப்பாவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் பீ பிரிவில் டென்மார்க், செக்கஸ்லோவாக்கியா, பல்கேரியா, ஆர்மேனியா, மால்டி ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டது. ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று நான்கு போட்டிகளைச் சமப்படுத்தியது. இத்தாலி 19 கோல்கள் அடித்தது. எதிராக ஒன்பது கோல்கள் அடிக்கப்பட்டன. 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இத்தாலிக்கு எதிராக 12 மஞ்சள் அட்டைகளும், ஒரு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டன.
1934ஆம் ஆண்டு முதன்முதலாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய இத்தாலி, சம்பியன் கிண்ணத்துடன் நாடு திரும்பயது. 1938ஆம் ஆண்டு மீண்டும் சம்பபினாகி தனது திறமையை நிரூபித்தது. 18ஆவது முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. 1962ஆம் ஆண்டி லிருந்து 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 14 தடவைகள் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
இத்தாலி 1934, 1938, 1982ஆம் ஆண்டுகளில் சம்பியனானது. 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் உதை பந்தாட்ட சம்பியனானது.
செசாரி பன்டெலி இத்தாலியின் பயிற்சியாளராக உள்ளார். ஆட்டநிர்ணய ஊழலில் இருந்து கடந்த உலகக் கிண்ணத் தோல்வியிலிருந்தும் இத்தாலியை மீட்டெடுத்தார். கியன்லுசி பபின் அணித் தலைவராக உள்ளார். கியன் ஜுவலன் அணியின் கோல் கீப்பரான இவர், 2006ஆம் ஆண்டு இத்தாலி சம்பயனான போது விளையாடியவர். மரியோ பலோடெலி (மான்சிஸ்ரர் சிற்றி), அன்ரியா ரனோசியா, மார்கோ வெரரி (பரிஸ், சென் ஜேர்மனி) 21 வயதான இவர்கள் மீது இரசிகர்கள் மிகுந்த எதிர் பார்ப்பில் உள்ளனர். மரியோ பலோடெலி ஐந்து கோல்களும், பப்லோ ஒஸ்பல் டோ நான்கு கோல்களும் அடித்துள்ளனர்.
டினோ யஸாபி, பலோ மல்டினி சில்வியோ பயோலா, டியாதோபகியோ ஆகியோர் இத்தாலியின் புகழ்பெற்ற முன்னாள் வீரர்களாவர்.
2010ஆம் ஆண்டு பரகுவே, செக்கஸ் லோவாக்கியா, நியூசிலாந்து ஆகியவற்றுடன் குழு எப் இல் இத்தாலி விளையாடியது. இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்து முதல் சுற்றுடன் வெளியேறி நாடு திரும்பயது. இத்தாலி நான்கு கோல்கள் அடித்தது. எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. உலகக்கிண்ண வரலாற்றில் இத்தாலி மிக மோசமாகத் தோல்வியடைந்தது
இங்கிலாந்து |
1960ஆம் ஆண்டு சம்பியனான இங்கிலாந்து, அடுத்து வந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியதே தவிர, இதுவரை சம்பியன் பட்டத்தைப் பெறவில்லை. உலக இரசிகர்களின் ஆதரவைப் பெற்ற சிறந்த வீரர்களான பெக்கம், ரூனி போன்ற வீரர்கள் இருந்தும் மீண்டும் ஒருமுறை சம்பியனாகவில்லை. தர வரிசையில் 13ஆவது இடத்தில் உள்ளது இங்கிலாந்து.
குழு எச் இல் இங்கிலாந்து, உக்ரைன் மொண்டகோரியா, போலாந்து, மல்டோவா, சன்மரினோ ஆகிய நாடுகள் தகுதிச்சுற்றில் விளையாடின. ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளைச் சமப்படுத்தி 22 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பரேஸில் பயணத்தை உறுதிசெய்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து 31 கோல்கள் அடித்தது. எதிரணிகள் நான்கு கோல்கள் மட்டுமே அடித்தன. இங்கிலாந்துக்கு எதிரான 13 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. இங்கிலாந்துக்கு எதிரான ஆறு போட்டிகளில் எதிரணிகள் கோல் அடிக்கவில்லை. உக்ரைனுக்கு எதிரான ஒரு போட்டி கோல் அடிக்காது சமநிலையில் முடிந்தது. இப் போட்டியில்தான் இங்கிலாந்து கோல் அடிக்கவில்லை. சன்மரினோவுக்கு எதிரான முதல் போட்டியில் 5-0 கோல் கணக்கி லும், இரண்டாவது போட்டியில் 8-0 என்ற கோல் கணக்கிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
போத்துகல்லு எதிரான முதல் போட்டி யை 1 - 1 என்ற கோல் கணக்கில சம நிலையில் முடித்த இங்கிலாந்து, இரண்டாவது போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.இதன் காரணமாக போத்துகடன் பிளேஓவ் போட்டியில் விளையாடத் தள்ளப்பட்டது.
ரூனி ஏழு கோல்களும், பராங்லவட், டனிவெல்பெக் ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்தனர். ஆறு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய ரூனி ஏழு கோல்கள் அடித்தார்.
ரோய் ஹட்சன் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உள்ளார். 66 வயதான இவர், அண்மையில்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். லிவர் பூல் அணி வீரரான ஸ் ரீபன் ஸ்கொட்லாந்து அணியின் தலைவராக உள்ளார். இளம் வீரரான ரோஸ் பெகெலி, ஜக்வில் சர், அலெக்ஸ் பராங், அன்ரூஸ் ரவ் சென்ட் ஆகியோர் நம்பக்கையுடன் உள்ளனர்.
சேர் பொப சார்ஸ்டன், பீற்றர் சில்ரன் கிறேலிங்கர் டேவிட் பெக்கம் ஆகியோர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீரர்களாவர்.
2010ஆம் ஆண்டு 10 போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து, ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்றது. 2010ஆம் ஆண்டு சி பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, அல்பேனியா, அல்ஜீரியா ஆகியன குழு சி யில் போட்டியிட்டன. ஒரு போட்டியில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி முதலிடம் பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. இங்கிலாந்து நான்கு கோல்கள் அடித்தது. எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் ஜேர்மனியுடன் விளையாடி 4-1 கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளி யேறியது.
இங்கிலாந்து, இத்தாலி ஆகியவற்றுக் கிடையேயான போட்டி இரசிகர்களிடம் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியின் முடிவுதான் இரண்டா வது சுற்றுக்குச் செல்லும் நாட்டைத் தீர்மானிக்கும்.
சுடர் ஒளி
ரமணி 09/02/14
No comments:
Post a Comment