Wednesday, February 5, 2014

உலகக்கிண்ணம் 2014

உருகுவே
பிரேஸிலில்நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டியில்உருகுவே, கொஸ்ரரிகா, இங்கிலாந்து, இத்தாலி ஆகியன டி பிரிவில் உள்ளன. உலகக்கிண்ணத்தை வெல்லும் நோக்குடன் களமிறங்க உள்ள இந்த நாடுகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

               உருகுவே

உலகக்கிண்ண சம்பியன் பட்டத்தை முதல்முதலில் பெற்ற நாடு. 1938ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியனான உருகுவே பிறேஸிலில் 1950ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில்   சம்பயனானது.  64 வருடங்களின் பின்னர் மீண்டும் பிறேஸிலில் சம்பியனாகும் எண்ணத்தில் உள்ளது.
தென் அமெரிக்காவிலிருந்து கடைசியாக பிளேஓவ் மூலம் தகுதிபெற்ற நாடு  உருகுவே. பொலிவியா, சிலி, வெனிசுவெலா, பெரு, கொலம்பியா, ஈக்கு வடோர், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகள் உலகக்கிண்ண  தகுதிகாண் சுற்றில் விளையாடின. 16 போட்டிகளில்  விளை யாடிய உருகுவே ஏழு போட்டிகளில் வெற்றிபெற்று, நான்கு போட்டிகளைச் சமப்படுத்தி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்தது. உருகுவே 25 கோல்கள் அடித்தது. உருகுவேக்கு எதிராகவும் 25  கோல்கள் அடிக்கப்பட்டன. உருகுவே 25 புள்ளிகள் பெற்றது.

உருகுவேக்கு  வில்லனாக ஈக்குவடோர் இருந்தது. உருகுவேயைப் போன்றே வெற்றி தோல்வி, புள்ளி அனைத்தையும் பெற்றது. முதலாவது தகுதிகாண் போட்டியில் இரண்டு நாடுகளும் தலா ஒரு கோல் அடித்தன. இரண்டாவது போட்டியில் ஈக்குவடோர் ஒரு கோல் அடித்து வெற்றிபெற்றது. உருகுவே கோல் அடிக்கவில்லை. இந்தப் போட்டியே உருகுவேக்கு பாதகமானது. உருகுவேக்கு எதிராக 25  கோல்கள் அடிக்கப்பட்டன. ஈக்குவடோருக்கு எதிராக 20 கோல்கள் அடிக்கப்பட்டன. இதனால் ஈக்குவடோர் உள்ளேபோனது. உருகுவே வெளியேறியது. 

பிளேஓவ் போட்டியில் ஜோர்தானைச் சந்தித்த உருகுவே முதல் போட்டியிலேயே 5-0 கோல்களால் வென்று தனது இருப்பை உறுதிசெய்தது. இரண்டாவது போட்டி கோல் அடிக்காது சமநிலையில்  முடிந்தது. தகுதிகாண் போட்டியில் உருகுவே 30  கோல்கள் அடித்தது. எதிராக 25  கோல்கள் அடிக்கப்பட்டன. உருகுவேக்கு எதிராக 42 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. லூயிஸ் ஸுரெஸ் 11 கோல்களும், ஒடிநொஸ் கவானி ஆறு கோல்களும் அடித்தனர். 

தென்னாபிரிக்காவில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் அரைஇறுதிவரை முன்னேறிய உருகுவே, ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் 3-2 கோல் கணக்கில் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தது. தென்னாபரிக்காவில்  குழு ஏ யில் உருகுவே, மெக்ஸிகோ, தென்னாபிரிக்கா, பிரான்ஸ் ஆகியன போட்டியிட்டன. 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து. இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது உருகுவே. இரண்டாவது சுற்றில் 2-1 கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்து கால் இறுதிக்குத் தெரிவானது. கால் இறுதியில் 4-2 கோல் கணக்கில் கானாவை தோற்கடித்தது.அரை இறுதியில் 3-2 கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்தது.
ஒஸ்கார் தப்ரேஸ் உருகுவேயின் பயிற்சியாளராக உள்ளார். 66 வயதான இவர் 1988, 90களில் சிறந்த பயிற்சியாளராக பெருமை பெற்றவர். ஏ.சி.மிலான் அணியின் முன்னாள் பயிற்சியாளர். 2006ஆம் ஆண்டு உருகுவேயின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். இவரது பயிற்சியில் 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில்  அரை இறுதிவரை முன்னேறிய உருகுவே. 2011ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா சம்பயனானது.

டீகோ லுகானோ அணித்தலைவர் 33 வயதான இவர், 91 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர். லூயிஸ் ஸுரெஸ்,  எடிநொஸ்கவானி ஆகியோர் உருகுவேயின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர்.
1930ஆம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய உருகுவே 11ஆவது முறையாக களம்காண உள்ளது. இரண்டு முறை சம்பியனான உருகுவே கடந்த உலகக்கிண்ணப் போட்டியில் அரை இறுதி வரை முன்னேறியதனால் நம்பிக்கையுடன் உள்ளது.
பாரிஸ் 1924, ஆம்ஸ்ரர்டாம் 1928   ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஒலிம்பபி உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாது.  1997ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்ட போட்டியிலும் 2006ஆம் ஆண்டு  பீச் சொக்கரிலும் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட  போட்டிகளிலும் இரண்டாம் இடத்தைப்  பெற்றது.
அல்வாரோ, எரகோபா, ருபன்  சோசா, அஞ்சல் ரொமானோ, கெக்டர் ஸ்கரோனி ஆகியோர் உருகுவே தேசிய அணியின் முன்னாள் வீரர்கள்.

                               கொஸ்ரரிகா
வட  அமெரிக்கா, மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற கொஸ்ரரிகா   உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
மூன்றாவது தகுதிகாண் போட்டியில் கொஸ்ரரிகா, ஈக்குவடோர்,கயானா, மெக்ஸிகோ ஆகிய நாடுகள் போட்டியிட்டன. மூன்று போட்டி களில் வெற்றிபெற்று ஒரு      போட்டியை  சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. கொஸ்ரரிகா 14 கோல்கள் அடித்தது. எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 10 புள்ளி கள்பெற்று இரண்டாவது இடம்பிடித்ததால் இன்னொரு தகுதிகாண் போட்டியில் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
கானா,  அமெரிக்கா, ஜமேக்கா, ஹொண்டூராஸ், மெக்ஸிகோ ஆகியவற்றுடன் மோதியது. கொஸ்ரரிகா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்திய  இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. கொஸ்ரரிகா 13 கோல்கள் அடித்தது. எதிராக ஏழு கோல்கள் அடிக்கப்பட்டன. 18 புள்ளிகளு டன் இரண்டாம்  இடம்பெற்று பிரேஸிலுக்குச் செல்லும்  வாய்ப்பை உறுதி செய்தது.
தகுதிகாண் போட்டியில் 27 கோல்கள் அடித்தது. எதிராக 12 கோல்கள்  அடிக்கப்பட்டன. 33 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன. அல்பரோ, சபோரியோ 8 கோல்கள் அடித்தனர்.  தரவரிசையில் ஒரு இடம் கீழிறங்கி 32ஆவது இடத்தில் உள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்த 60 வயதான ஜோர்ஜி லுயிஸ் பின்ரோ கொஸ்ரரிகாவின்  பயிற்சியாளராக உள்ளார். கொலம்பியாவில் உள்ள 15 கழகங்களுக்கு 30 வருடங்களாக பயிற்சியாளராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். பல்ஹம் கழகத்தின் மத்தியகள வீரரான  பிரையன் ருயிஸ் கொஸ்ரரிகாவின் அணித் தலைவராக உள்ளார். 28 வயதான இவருக்கு அதிகளவான ரசிகர்கள் உள்ளனர்.
இளம் கோல் கீப்பரான  18  வயது நிரம்பய கெய்லொர் நம்பிக்கை நட்சத்திரமாவார். பிரான்ஸ் கழகம் இவரை ஒப்பந்தம் செய்துள்ளது. பரையன் ஓவைடோ (எவரொன்) அல்வ ரோச போரியா, கிறிஸ்ரியன் பொலனோஸ் நம்பிக்கை தரும் வீரர்களாக உள்ளனர்.
1990ஆம் ஆண்டு முதல் முதல் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளை யாடிய  கொஸ்ரரிகா, நான்காவது முறையும் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.
2009ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் நான்காம் இடம்படித்தது. ஹேமன் மட்போட், போல் வன்ஷோப், வல்டர் சென் ரெனோ ஆகி யோர் கொஸ்ரரிகாவின் முன்னாள் வீரர்களாவர்.

வர்மா 
சுடர் ஒளி 02/02/14

No comments: