Wednesday, February 12, 2014

மக்கள் மனம் கவர்ந்த திவாகர்

‘விஜய்' தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த ‘சுப்பர் சிங்கர்' இசை நிகழ்ச்சியில் எதிர்பார்த்தது போலவே திவாகர் வெற்றி பெற்றுவிட்டார். அதிலும் மலையாள  தொலைக்காட்சியில் ‘சுப்பர் சிங்கர்' போன்றதொரு நிகழ்ச்சியில் வென்ற சோனியா, ‘சுப்பர் சிங்கர்' ஜூனியர் போட்டியில் கலந்து கொண்ட பார்வதி போன்றோருடன் வறுமையோடு போராடி எந்த விதமான இசைப்பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த திவாகர் போட்டியிட்டு வென்றதில் பலரைப் போல் மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனாலும் கடந்த வருடங்களில் நடைபெற்ற ‘சுப்பர் சிங்கர்' இறுதிப் போட்டியைப் போன்று இம்முறை இறுதிப் போட்டி ஏனோ சோபிக்கவில்லை.

வழமையாக இறுதிப் போட்டியின் பொழுது பெரும்பாலும் முதன்மை விருந்தினராக இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோரே வருகை தந்துள்ளனர்.அவ்வாறு அவர்களை அழைப்பதன் மூலம் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கும் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களுக்கும் அவர்கள் இயக்கும் படங்களிலோ அல்லது அவர்கள் இசையமைக்கும் படங்களிலோ ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஒரு மூலோபாயமாகவே அதனைக் கைக்கொண்டு வந்துள்ளனர் என்பதில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. உதாரணமாக கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இயக்குனர் செல்வராகவன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜீ.வி.பிரகாஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டமை இதனை உறுதிப்படுத்தியது. 
  இம்முறையும் யாராவது இசையமைப்பாளரோ, இயக்குனரோதான் வருவார்கள்  என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி அவர்களின் வருகை பலத்த ஏமாற்றத்தையே கொடுத்திருந்தது. காரணம் எஸ்.ஜானகி அவர்கள் இம்முறை நடைபெற்ற ‘சுப்பர் சிங்கர்' போட்டியில் ஒரு சுற்றில் ஏற்கனவே கலந்து கொண்டிருந்தார். எனவே அவர் மீளவும் இறுதிப்போட்டிக்கு முதன்மை விருந்தினராக வருவார் என்பதை கனவிலும் ரசிகர்கள்  நினைத்திருக்க மாட்டார்கள். ‘விஜய்' தொலைக்காட்சி நிர்வாகத்தினர் சில பிரபலங்களை அணுகி அவர்களது வருகை சாத்தியப்படாத ஒரு கையறு நிலையிலேயே எஸ்.ஜானகி அவர்களை அணுகி உள்ளது போல் தோன்றுகின்றது. 

ஓருவகையில் முதன்மை விருந்தினராகக் குறிப்பிட்ட இசையமைப்பாளர் ஒருவர் வருகை  தராததும் நன்மை என்றே தோன்றுகின்றது. ஏனென்றால் அத்தகைய இசையமைப்பாளரின்  வருகை போட்டியாளர்களுக்கு சிலவேளைகளில் நெருக்கடியான நிலைமைகளைத் தோற்றுவிக்கவும் கூடும். உதாரணமாக 2012 நடைபெற்ற ‘சுப்பர் சிங்கர்' இறுதிப்போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டதனால் போட்டியாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களையே பாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு  ஆளானார்கள். 
முன்னைய சுற்றுக்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களைப் பாடுவதற்கும் இறுதிப்போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்களைப் பாடுவதற்கும் வித்தியாசம் உண்டு. இறுதிப்போட்டியில் வேறு இசையமைப்பாளரது பாடலை பாடுவதற்கு தயாராகும் ஒரு  போட்டியாளருக்கு குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பாடலைத் தான் பாட வேண்டும் எனக் கூறுவது அவரது பாடல் தெரிவின் சுதந்திரத்தை மறுப்பதாகவே தோன்றும்.அந்த வகையில்  தான் இது நன்மை என்கிறேன்.
ஆனாலும் இம்முறை நடைபெற்ற ‘சுப்பர் சிங்கர்' போட்டியின் சில சுற்றுக்களிலேயே எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா,எஸ்.ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி, ஆஷாபோஸ்லே, கவிஞர் வைரமுத்து எனச் சில பிரபலங்களை அவர்களது பல்வேறு நெருக்கடியான நிகழ்ச்சிநிரல்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர்களை ‘விஜய்' தொலைக்காட்சி நிர்வாகத்தினர் சரியாகப் பயன்படுத்தி இருந்ததையும் மறுக்க முடியாது.

பார்வதி பாடிய இசைஞானி இளையராஜாவின் ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்' பாடலேர்டு ஆரம்பித்து சையத் சுபஹானின் ‘விடைகொடு எங்கள் நாடே' சோனியாவின் ‘பாடறியேன் படிப்பறியேன்' சரத் சந்தோஸின் ‘மழையே மழையே' திவாகரின் ‘அரபிக் கடலோரம்' என்று முதற்சுற்றுப் பாடல்களில் சரத் பாடிய குட்டிக் குட்டிச் சங்கதிகள் நிறைந்த ஹரிகரன் பாடிய ‘மழையே மழையே' பாடலும் சையத் சுபஹானின் ‘விடைகொடு எங்கள் நாடே' பாடலும் என்னைக் கவர்ந்திருந்தது.

வழமையாக போட்டியாளர்களின் பாடல் தெரிவில் அனந் வைத்தியநாதன் அவர்கள்  தலையிடுவதில்லை. அதற்குக் காரணம் அவர் தெரிவு செய்து கொடுத்த பாடலைப் பாடி  ஒரு போட்டியாளர் நீக்கப்பட்டால் போட்டியாளரும் அவரது குடும்பத்தினரும் அனந் வைத்தியநாதனை குற்றவாளியாக்குவதனால் அவர் பாடல் தெரிவில் போட்டியாளரின் விருப்பத்திற்கே அதனை விட்டு விடுகின்றார்.ஆனால் இம்முறை இறுதிப் போட்டியில் சரத் சந்தோஸ் பாடிய ‘மழையே மழையே நீரின் திரையே' பாடலை அனந் வைத்தியநாதன் அவர்கள் தான் தெரிவு செய்து கொடுத்துள்ளார்.இதனை மேடையில் சரத் சந்தோஸே கூறியிருந்தார்.

இரண்டாம் சுற்றில் ஜானகியும் உன்னி கிருஸ்ணனும் சேர்ந்து பாடிய ‘மார்கழித் திங்கள் அல்லவா' பாடலை சோனியா பாடக் கேட்டதும் ‘அழகு மலர் ஆட' பாடலை பாடி ஜானகி அம்மா உச்சி முகர்ந்து பாராட்டிய சோனியாவா இதனைப் பாடியது என்ற சந்தேகம் எனக்கு வந்தது. அவர் பாடிய ‘பாடறியேன் படிப்பறியேன்' பாடல் கவர்ந்த அளவுக்கு இந்தப் பாடல் என்னைக் கவரவில்லை. ‘சுப்பர் சிங்கர்' போன்ற ஜனரஞ்சகமான நிகழ்ச்சி ஒன்றில் சோனியா இரண்டு பாடல்களையும் Semi Classical  பாணியில் தேர்வு செய்ததும் அவரது பின்னடைவுக்குக் காரணம் எனத் தோன்றுகின்றது.

எனக்கு இறுதிப்போட்டியில் ஆச்சரியம் அளித்த விடயம் என்றால் அது திவாகர் பாடிய “நீயே உனக்கு என்றும் நிகரானவன்' Semi Classical  பாடல் தான். அதிலும் சோனியா போலவோ அல்லது சரத் சந்தோஸ் போலவோ கர்நாடக சங்கீதப் பின்னணியில் வராத திவாகர் இறுதிப் போட்டியில் “நீயே உனக்கு என்றும் நிகரானவன்” பாடலைப் பாடுவதற்கு துணிந்தமை தான். 
‘சுப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில்  பாடப்படும் பாடல்களை அதானித்துப் பார்த்தால் பாடவேண்டிய இரண்டு பாடல்களில் ஒன்றினை ளுநஅi ஊடயளளiஉயட பாடல் தன்மையானதாகவும் மற்றைய பாடலை வேறு பாணியில் அமைந்த பாடலாகவும் போட்டியாளர்கள் தெரிவு செய்திருப்பதைக் காணலாம். ‘சிங்கார வேலனே தேவா’, ‘மன்னவன் வந்தானடி தோழி’, ‘இசையரசி எந்நாளும் நானே’, ‘பாட்டும் நானே பாவமும் நானே’, ‘ஒருநாள் போதுமா இன்றொருநாள் போதுமா’, ‘மின்சாரப்பூவே பெண் பூவே’ போன்ற பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதன்  மூலம்  போட்டியாளர்கள் ளுநஅi ஊடயளளiஉயட பாடல்களைப் பாடுவதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க இத்தகைய பாடல் தெரிவு அவர்களுக்கு அவசியமாகின்றது.


இறுதிப்போட்டியில் பங்கு பற்றிய திவாகர், பார்வதி, சையத் சுபஹான்  ஆகியோர் கர்நாடக சங்கீதத்தைக் கற்றவர்கள் அல்ல. இம்;முறை ‘சுப்பர் சிங்கரில் கர்நாடக சங்கீதச் சுற்று நடைபெறாததால் இவர்கள் மூவரது தலையும் தப்பியதாகவே நான் கருதி இருந்தேன். ஆனால் இறுதிப்போட்டியில் ஒரு Semi Classical  பாடலை பாடினால் தான் வெல்ல முடியும் என்றதொரு அபிப்பிராயம் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.அதனால் தான் ‘சுப்பர் சிங்கர்'நிகழ்ச்சியில் ஒரு போதும் Semi Classical  பாடல்களைப் பாடாத திவாகர் மற்றும் பார்வதி ஆகியோர் இந்த விஷப் பரீட்சையில் இறங்கி உள்ளனர்.அவர்கள் தெரிவு செய்த அத்தகைய பாடல்களைச் சிறப்பாகப் பாடியமை வேறு விடயம். 

பொதுவாக தாம் எத்தகைய பாணிப் பாடல்களில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில அத்தகைய பாடலையே தெரிவு செய்து பாட முயற்சி செய்வார்கள்.இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2012 நடைபெற்ற ‘சுப்பர் சிங்கர்'இறுதிப் போட்டியில் ஆஜித் பாடிய இரண்டு பாடல்கள். அன்றைய காலப்பகுதியில் கர்நாடக சங்கீதத்தை கற்காத ஆஜித் தான் பலமாகக் கருதும் ஏ.ஆர்.ரஹ்மானின் இரண்டு பாடல்களையே தெரிவு செய்து பாடி வெற்றி பெற்றிருந்தார். 

கடந்த 2011, 2012 ஆண்டுகளில் Wild Card சுற்றின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்த போட்டியாளர்களான சாய்சரண், ஆஜித் ஆகியோரே வெற்றி பெற்றிருந்தார்கள். ஆனால் இம்முறை நேரடியாகவே இறுதிப் போட்டிக்குத் தெரிவான திவாகர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் கீபோhட் ஸ் ரீபன், ட்றம்ஸ் சிவமணி ஆகியோர் உட்பட சில வாத்தியக் கலைஞர்கள் கலந்து கொண்ட இறுதிப் போட்டிக்கு முன்னதான சுற்றில் திவாகர் பாடிய ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு'பாடல் சையத் பாடிய ‘ராசாத்தி என் உசிரு என்னதில்ல'போன்ற பாடல்கள் பாடிய அந்த சுற்றுக்கூட இறுதிப்போட்டியின் சில பாடல்கள் அமையவில்லை என்றே தோன்றியது.

இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட ஐவரில் சையத் சுபஹான், கண்ணதாசன் .எஸ்.விஸ்வநாதன்,  இளையராஜா மற்றும் ஓரிரு சுற்றுத் தவிர்ந்த ஏனைய சுற்றுக்களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களையே பாடியிருக்கின்றார். போட்டியாளர் ஒருவர் குறிப்பிட்ட ஒருநாள் பாடும் திறமையை கருத்திற் கொள்ளாது அவரது தொடர்ச்சியான திறமைகளைக் அவதானத்திற் கொண்டே சில சந்தர்ப்பங்களில் அவர்கள் வெளியேற்றப்படுவதாக நடுவர்கள் கூறியிருந்தாலும் தொடர்ச்சியாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களையே பாடிய சையத் சுபஹானை இறுதிப்போட்டி வரை அனுமதித்தது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது. இம்முறை ‘சுப்பர் சிங்கர்' ஆரம்பக்கட்டத் தெரிவின் பொழுது ஒரு போட்டியாளர் எண்பதுகளில் எஸ்.பி.பாலசுப்ர மணியம் பாடிய பாடல்களைத் தொடர்ச்சியாகப் பாடி முன்னேறி வந்திருந்தார். ஆனாலும் வாழ்வா சாவா என்றதொரு இறுதிக்கட்டத் தெரிவில் அவரை நீக்கியதற்கு நடுவர்கள் கூறியது அவர் தொடர்ந்தும் எண்பதுகளில் எஸ்பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களையே பாடியிருந்தார் என்ற காரணமே. எனவே இது சையத் சுபஹான் விடயத்தில் நடுவர்களின் நடுநிலைமைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியது.
கடந்த 2012 நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலாமிடத்திற்கு வழங்கப்பட்ட காசோலையில்  பொறிக்கப்பட்டிருந்த பெயரினால் ஏற்பட்ட சர்ச்சையைப் போன்றே இம்முறையும் முதலாம், இரண்டாம் இடங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளில் பெயாகள்; ஏற்கனவே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் 2012 இறுதிப்போட்டியில் ஆஜித் வென்ற பொழுது அவர் பெற்றிருந்த வாக்குகளோ, நடுவர்கள் அளித்திருந்த புள்ளிகளோ பகிரங்கப்படுத்தப் படவில்லை. அத்தகைய செயற்பாடு ஆஜித்தை வெற்றி பெறச் செய்வதற்காக ‘விஜய்'தொலைக்காட்சி நிர்வாகத்தினர் முற்கற்பிதத்தோடு நடந்து  கொண்டதையே வெளிப்படுத்தியது.

ஆனால் இம்முறை திவாகர் வெற்றி பெற்ற பொழுது அவர் பெற்ற மொத்த வாக்குகளும் நடுவர்களின் தெரிவாக சையத் சுபஹான் தேர்வு செய்யப்பட்டது குறித்த தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இறுதிப் போட்டியில் திவாகர் 729,385வாக்குகளைப் பெற்றிருந்தார். இரண்டாவதாக வந்த சையத் சுபஹானை விட ஐந்து லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.எனவே இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் திவாகர் முன்னிலை பெற்று விளங்கியதனால் அவரே முதலிடம் பெறுவார் என்ற நம்பிக்கையில் ‘விஜய்;தொலைக்காட்சி நிர்வாகத்தினர் காசோலையில் அவரது பெயரைப் பொறித்திருக்கலாம். ஆனால் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு இடையே அதிக வாக்கு வித்தியாசங்கள் இல்லாத நிலையில் இரண்டாவதாக வந்தவரின் பெயரை காசோலையில் எவ்வாறு முதலே பொறித்தார்கள் என்பது தான் புதிராக இருக்கின்றது.

இறுதிப் போட்டியில் போட்டியாளர்களது பாடல்கள் தவிர்ந்த ஏனைய நிகழ்ச்சியில் பின்னணிப்பாடகர்கள் விஜய் பிரகாஸ் மற்றும் ஜாவிட் அலி சேர்ந்து வழங்கிய பாடல்கள் தான் எனக்கு குறிப்பிடும் படியாக இருந்தது. 

நடிகை அன்ட்ரியாவும் அழகேசனும் இணைந்து பாடிய பழைய பாடல்களை கேட்டதும் அன்ட்ரியா ‘கூகிள் கூகிள் பண்ணிப் பார்த்தேன்’இ ‘றூழ’ள வாந hநசழ’ போன்ற மாதிரியான பாடல்களைப் பாடுவதே நல்லது எனத் தோன்றியது.

அடுத்து நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்கிய மா.கா.பா.ஆனந் மற்றும் பாவனா ஆகியோர்  நிகழ்ச்சியினைச் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வார்கள் என்று பார்த்தால் எப்படா இவர்கள் மேடையை விட்டு செல்வார்கள் என்னும் படியாக அவர்களது செயற்பாடு அமைந்து விட்டது. இரண்டாவது சுற்றில் சற்று வித்தியாசமாக போட்டியாளர்களை அறிமுகம் செய்யப்போகிறார்கள் என்று அவர்கள் கூறியதும் மனம் கொஞ்சம் ஆசுவாசப்பட்டது. 

ஆனால் ‘சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக; பின்னணிப்பாடகர் வேல்முருகனின் போட்டியாளர்கள் பற்றிய அறிமுகப் பாடல்கள் அமைந்திருந்தன. அவை எந்த விதமான ஈர்;ப்பையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தவில்லை என்பதை சபையில் ஆங்காங்கு எழும்பிய கரவொலியின் சத்தத்தைக் கொண்டே அறியக்கூடியதாக இருந்தது. வழமையாக ‘சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவ்வாறான அறிமுகத்தையும் தனது கருத்தையும் பாடல் வாயிலாக புஸ்பவனம் குப்புசாமி அவர்களே மேற்கொண்டு வந்திருப்பதும் நினைவுக்கு வருகின்றது.

மேலும் ‘சுப்பர் சிங்கர் நடுவர்கள்; குறித்து பல்வேறு விமர்சனங்கள் மக்களிடையே இருக்கின்றன. இருப்பினும் இறுதிப் போட்டியிலும் அதற்கு முன்னதான பொது மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்கான சுற்று ஆரம்பித்ததும் நடுவர்கள் தமது கருத்துக்களை கூறாமல் விடுவதே சிறந்தது. ஏனென்றால் போட்டியாளர்கள் பாடும் பொழுது குறைகள் ஏதாவது இருப்பினும் நடுவர்கள் அதனைச்  சுட்டிக்காட்டப் போவதில்லை.காரணம் அவர்கள் அவ்வாறு எடுத்துக்காட்டினால் பொதுஜன விமர்சனத்திற்கு ஆளாகி போட்டியாளர்களுக்கு வாக்களிப்பதற்கான எதிர்மறைச் சிந்தனைகளை அது தோற்றுவிக்கக் கூடும் என்பதனால். ஆனால் ‘சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பல சுற்றுக்களில் நடுவர்களின் கருத்துக்கள் மொக்கைத் தனமாகவே இருக்கின்றன என்பது வேறு விடயம். ‘விஜய்’ தொலைக்காட்சி நிர்வாகத்தினதும் தலையீடு இதில் இருப்பதனால் இத்தகைய நிலைக்கு நடுவர்களை மாத்திரம் பொறுப்பாளிகளாக்க முடியாது என்றே தோன்றுகின்றது.  

இறுதிப் போட்டிக்கு முன்னதாக சில போட்டியாளர்கள் மக்களிடம் ஓட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக ஒரு முறை தான தர்மம் செய்துவிட்டு தங்களை வலது கை கொடுப்பதை இடது கை அறியாத கர்ண கொடை வள்ளலாக வெளிப்படுத்துவதை பார்க்கும் பொழுது விநோதமாகவும் தோன்றுகின்றது.

இம்முறை திவாகர் பெற்ற சாதனை வாக்குகள் ‘சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெற்றுள்ள செல்வாக்கின் ஆதிக்கத்தினை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

‘சுப்பர் சிங்கர்'நிகழ்ச்சி குழந்தைகள், இளைஞர்களது இலை மறை காயாக உள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான களமாக விளங்கி அதன் ஊடாக சினிமாவில் கால் பதிப்பதற்கான வாய்ப்புக்களை வெற்றி பெற்றவருக்கு மாத்திரம் அல்லாமல் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாத போட்டியாளர்கள் சிலருக்கும் வழங்கி இருப்பதனை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம். இது வரவேற்கத் தக்க விடயமே. ஆனாலும் பொதுமக்களிடம் ஓட்டுக்கு விடப்படுகின்ற பொழுது போட்டியாளரின் திறமை தவிர்ந்த தனிமனிதக் கவர்ச்சி, தனிப்பட்ட குணநலன்கள்,குடும்ப சூழ்நிலைகள் எனப் பல்வேறு காரணிகள் அவற்றைத் தீர்மானிக்கத் தொடங்குகின்றன.

எனவே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஒரு  திறமையுள்ள போட்டியாளரை மேற்கூறிய காரணங்களில் ஒன்றான குடும்பச் சூழலைக் கருத்திற் கொண்டு வெற்றி பெறச் செய்வதை வரப்பிரசாதமாகக் கருதினாலும் அவருக்கு இணையான திறமையுள்ள அவரை விட சற்றே பொருளாதார வளம் மிகுந்தவர் என்ற காரணத்திற்காக ஒரு போட்டியாளரை இறுதிப் போட்டியில் பெரும்பாலான பொதுமக்கள் கண்டு கொள்ளாது விடுவது ‘சுப்பர் சிங்கர்'நிகழ்வின் சாபமாகவே கருத வேண்டியுள்ளது. 
 சி.விமலன்
சுடர் ஒளி 09/02/14

2 comments:

Amudhavan said...

விரிவாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் அவதானித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

வர்மா said...

/Amudhavan
விரிவாகவும் தெளிவாகவும் ஆழமாகவும் அவதானித்து எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்./

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி
அன்புடன்
வர்மா