உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனாகும் எனக் கருதப்படும் ஜேர்மனி,சுவீடன்,மெக்ஸிக்கோ ஆகியவறுடன் எஃவ் பிரிவில் தென்.கொரியா இடம் பிடித்துள்ளது
ஆசியக்கண்ட தகுதிச்சுற்றில் 4
போட்டிகளில் வெற்றிபெற்று 3 போட்டிகலைச் சமப்படுத்தியது. 3 போட்டிகளில் தோல்வியடைந்த
தென்.கொரியா 11 கோல்கள் அடித்தது. எதிராக 10 கோல்கள் அடிக்கப்பட்டன. 15 புள்ளிளுடன்
இர்ரண்டாவது இடத்தைப் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
தரவரிசையில் 57 ஆவது இடத்தில்
இருக்கும் தென்.கொரியா 1954 ஆம் ஆண்டு முதல்
2014 ஆம் ஆண்டுவரை 9 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது. 2002 ஆம் ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்தது.
, தென்.கொரியாவின்
வயது குறைந்த அணியில் பயிற்சியாளராக இருந்த ஷின் டேயங் ஜூலை
2017 இல் தேசிய அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 1985 ஆம் ஆண்டு முதல்
தொடர்ந்து உலகக்
கிண்ணப் போட்டிகளில் தென் கொரியா
விளையாடுகிறது. இந்த சாதனையை இதுவரை
எந்த ஆசிய
அணியும் செய்ததில்லை.
சான் ஹூங்க்மின்,குவான் குயிங்க் வான்,ஜா சியோல் கூ.
ஆகியோர் பிரபலமான வீரர்களாவர். லீ சுங்க் யங்க்,
கிம் ஜின்
சூ ஆகியோர்
அணியில் இடம்பெறவில்லை.
அதனால் ஷின்
ஹூங்க்மினை நம்பியே இருக்க வேண்டிய நிலையில்
அணி உள்ளது.
ஆசியாவில் நடைபெற்ற தகுதிகாண்
ஆட்டங்களில் தடுப்பாட்டத்தில் தென்.கொரியா திணறியது. ஆதலால் முதல் சுற்றைத் தாண்டுமா
என்ற சந்தேகம் உள்ளது.
No comments:
Post a Comment