ரஷ்யாவில் நடைபெறும்வது
உலகக்கிண்ணப் போட்டியில் லீக் சுற்று முடிவடைந்து
லீக்கில் விளையாடும் 16 நாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. . அதில்
விளையாடும் 16 நாடுகளில் 10 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை.
ஆசியாவில் இருந்து ஜப்பான் முன்னேறியுள்ளது
இதுவரை 20 உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. பிறேஸில்,ஆர்ஜென்ரீனா,உருகுவே,ஜேர்மனி,இத்தாலி,ஸ்பெய்ன்,இங்கிலாந்து,பிரான்ஸ்
ஆகிய எட்டு நாடுகள் உலகக்கிண்ன சம்பியனாகின. முன்னாள் சம்பியனான இத்தாலி, உலகக்கிண்ணப்
போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை. நடப்புச்
சம்பியனான ஜேர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. மற்றைய நாடுகள் இரண்டாம் சுற்றுக்குத்
தெரிவாகியுள்ளன.
ஃபிபாவின் சார்பில் உலகெங்கும் உள்ள 5 உதைபந்தாட்ட கூட்டமைப்புகள்
உலகெங்கும் நடத்திய தகுதிச் சுற்றுப்
போட்டிகளில் வென்ற நாடுகளே உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி
பெற்றன. அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பு
நடத்திய போட்டிகளில் வென்று, 14 நாடுகளும், . ஆசியாவில்
இருந்து 5 நாடுகளும், ஆப்பிரிக்காவில் இருந்து 5 நாடுகளும், தென் அமெரிக்காவில் இருந்து 5 நாடுகளும், வட
அமெரிக்காவில் இருந்து 3 நாடுகளும், உலகக்கிண்ணப்
போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
தற்போது
முதல் சுற்று லீக் ஆட்டங்கள்
முடிந்துஇ நாக் அவுட் சுற்று
ஆட்டங்கள் துவங்க உள்ளன. இதில்
ஐரோப்பாவில் இருந்து முன்னாள் சாம்பியன்களான
ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆகியவற்றுடன் ரஷ்யா, பெல்ஜியம்,குரேஷியா,டென்மார்க், போத்துகல், சுவீடன், சுவிட்சர்லாந்து என 10 ஐரோப்பிய நாடுகள்
நொக் அவுட் சுற்றுக்கு
முன்னேறியுள்ளன. அறிமுக
அணியான ஐஸ்லாந்து, செர்பியா, போலந்து,நடப்பு சம்பியன் ஜேர்மனி ஆகியவை வெளியேறின.
ஆசியா பிரிவில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில்
வென்று அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி
அரேபியா,தென் கொரியா ஆகியவை உலகக்
கிண்ணப் போட்டியில் விளையாடத்
தகுதி பெற்றன. இதில் ஜப்பான்
மட்டுமே நொக் அவுட் சுற்றுக்கு
முன்னேறியது.முன்னேறியுள்ளது. அவுஸ்திரேலியா,
ஈரான், சவுதி அரேபியா, தென்கொரியா
ஆகியன முதல் சுற்றுடன் வெளியேறின.
ஆப்பிரிக்காவில்
இருந்து எகிப்து, மொராக்கோ,நைஜீரியா, செனகல்,துனீஷியா ஆகியவை உலகக் கிண்ணப்
போட்டியில் விளையாட
தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் அனைத்தும்
முதல் சுற்றுடன் வெளியேறின. நட்சத்திர வீரர் மொகம்மது சலாவின்
எகிப்து மீது தனி எதிர்பார்ப்பு
இருந்தது. ஆனால்இ அது ஏமாற்றியது.
அதே நேரத்தில் நைஜீரியா, துனீஷியா,செனகல் ஆகியவை சிறப்பாக செயல்பட்டன.
வட அமெரிக்கா பிரிவு தகுதிச் சுற்று
ஆட்டங்களில் வென்ற கோஸ்டாரிகா, மெக்சிகோ,
அறிமுக அணியான பனாமா ஆகியவை
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடின.
இதில் மெக்சிகோ மட்டும் நொக் அவுட்
சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா,பிரேசில், கொலம்பியா, பெரு,உருகுவே
ஆகியவை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி
பெற்றன. இதில் எதிர்பார்த்ததை
போலவே முன்னாள் சாம்பியன்களான ஆர்ஜென்ரீனா,பிறேஸில், பிரேசில், உருகுவே ஆகியவற்றுடன் கொலம்பியாவும்
நொஅவுட் பிரிவுக்கு முன்னேறியது. பெரு வெளியேறியது.
No comments:
Post a Comment