சுவிட்ஸர்லாந்து
ஐரோப்பாக்கண்டத்தில் இருந்து உலகக்கிண்னத்தில்
விளையாடத் தகுதி பெற்ற சுவிட்ஸர்லாந்து, பிறேஸில்,கொஸ்ரரிகா,சேர்பியா ஆகியவற்றுடன்
ஈ பிரிவில் இடம் பிடித்துள்ளது.இந்தப் பிரிவில் உள்ள பிறேஸில், உலகக்கிண்ணத்தைப் பெறும்
அணியாகக் கருதப்படுகிறது. இரண்டாவது சுற்றுக்குச்
செல்லும் எதிர்பார்ப்பில் சுவிட்ஸர்லாந்து இருக்கிறது.
ஐரோப்பாக் கண்ட தகுதிப் போட்டியில் பீ பிரிவில் விளையாடிய சுவிட்ஸர்லாந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. சுவிட்ஸர்லாந்து
32 கோல்கள் அடித்தது. எதிராக 4 கோல்கள் மட்டும்
அடிக்கப்பட்டன. 27 புள்ளிகளைப் பெற்றது சுவிட்ஸர்லாந்து,
முதல் போட்டியில் பலமான போலந்தை
2-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய சுவிட்ஸர்லாந்து,
கடைசிப் போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் போலந்திடம் தோல்வியடைந்தது. இதனால் பிளேஓஃவ்
போட்டியில் விளையாடியது.நெதர்லாந்துக்கு எதிரான பிளேஒஃஃவ் போட்டிகளின் போது மழையால்
பாதிப்பு பெனால்ரி அடித்ததில் சர்ச்சை என பல
தடைகலைத் தாண்டி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட சுவிட்ஸர்லாந்து தகுதி பெற்றது
.தரவரிசையில் 6 ஆவது இடத்தில்
இருக்கும் சுவிட்ஸர்லாந்து 1934 ஆம ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை 10 முறை உலகக்கிண்ணப்
போட்டியில் விளையாடியது. 1934,1938,1954 ஆம் ஆண்டுகளில் கால் இறுதி வரை சுவிட்ஸர்லாந்து
முன்னேறியது.
பொஸ்னியாவைச் சேர்ந்த விளாடிமிர்
பொஸ்கொவிக் 2014 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். முன்னதாக
இத்தாலி நாட்டின் லசியோ கிளப்புக்கு பயிற்சியாளராகக் கடமையாற்றிய போது 2013 ஆம் ஆண்டு
அந்த அணி கோபா இத்தாலி சம்பியனாகியது. 2017 ஆம் ஆண்டு பிளேயர் ஒஃவ் த இயர் விருது பெற்ற
கிரானிட் ஜாகா சுவிட்ஸர்லாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார். ஜர்தான் ஷாக்ரி,
ரிகார்டோ ரோட்ரிகுஸ் ஆகியோர் முக்கிய வீரர்களாவர். அனுபவமும் இளமையும் கலந்த அணியாக
சுவிட்ஸர்லாந்து இருக்கிறது.இரண்டாவது சுற்றுக்குச் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
கொஸ்ரரிகா
வட மத்திய அமெரிக்காவில் இருந்தூலகக்கிண்ணப்
போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற கொஸ்ரரிகாவை பலமான அணி என்பதைவிட பயங்கரமான அணி என்பதே சாலப் பொருந்தும். பிறேஸில்,
சுவிட்ஸார்லாந்து, சேபியா ஆகியவற்றுடன் ஈ பிரிவில் கொஸ்ரரிகா விளையாடுகிறது. பலம் வாய்ந்த பிறேஸில், இளமையான சுவிட்ஸார்லாந்து
ஆகியவற்றுடன் போராடி இரண்டாவது சுற்றுக்குச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது கொஸ்ரரிகா.
வட மத்திய அமெரிக்காவில் பீ பிரிவில்
இடம் பிடித்த கொஸ்ரரிகா 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியது.
11 கோல்கள் அடித்த கொஸ்ரரிக்காவுக்கு எதிராக
மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 16 புள்ளிகளுடன்
இரண்டாவது இடத்தைப் பெற்று உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
தரவரிசையில் 23 ஆவது இடத்தில்
இருக்கும் கொஸ்ரரிகா 1990 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நான்கு உலகக்கிண்ணப்
போட்டியில் விளையாடியது. 2010 ஆம் ஆண்டு பயிற்சியாளராகப்
பொறுப்பேற்ற ஒஸ்கார் ரெமிரஸ், 2014 ஆம் ஆண்டு
பிறேஸிலில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் கால் இறுதிப் போட்டி வரை கொஸ்ரரிகாவை
அழைத்துச் சென்றார்.
மத்தியகள வீரரான பிரைன் ரூயிஸ்
கொஸ்ரரிகாவின் நம்பிக்கைக்குரிய வீரராவார். ஜோயல் கம்பொல், மார்கோ உரேன், செல்ஸோ போட்ஜெஸ்,
கெண்டல் வட்சன்,ஜியான் கார்லோ,கோன்சலஸ்,ஜொனி அகோஸ்டா, ஆகியோர் அணியின் தூண்களாக்க இருக்கிறார்கள்.
கொஸ்ரரிகாவின் கோல்கீப்பரான கீலோர் நவாஸ் பாதுகாப்பு அரணாக நிற்கிறார்.
கடந்த ஆண்டு பிறேஸிலில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் கொஸ்ரரிகா கால் இறுதிப்
போட்டிவரை சென்றதற்கு கோலோர் நவாஸின் பங்களிப்பு முக்கியமானது. சம்பியன்லீக் தொடரில்
ரியல் மட்ரிட் சம்பியனாவதற்கு கீலோர் நவாஸின் பங்களிப்பு அளப்பரியது.
பிறேஸிலில் கடந்த முறை நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் இத்தாலி,உருகுவே
ஆகியவற்றுடனான போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துகு
எதிரான் போட்டியை கோல்கள் இன்றி சமப்படுத்தி அந்தப் பிரிவில் முதல் அணியாக இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றது.நெதர்லாந்துக்கு எதிராக
கால் இறுதிப் போட்டியில் விளையாடிய கொஸ்ரரிகா பெனால்ரியில் தோல்வியடைந்தது.
பிறேஸிலில் கலக்கிய 12 வீரர்கள்
இம்முறையும் அணியில் இடம் பிடித்துள்ளனர். கடந்த 8 வருடங்களாக ஒருங்கிணைந்து விளையாடிவருவதால்
கொஸ்ரரிக்கா அதிர்ச்சியளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சேர்பியா
பிறேஸில்,சுவிட்ஸார்லாந்து,கொஸ்ரரிகா
ஆகியவறுடன் டீ பிரிவில் விளையாடுகிறது சேர்பியா இடம் பெற்றுள்ளது.
தகுதிகாண் சுற்றில் 6 போட்டிகளில்
வெற்றி பெற்று 3 போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. 20 கோல்கள்
அடித்த சேர்பியாவுக்கு எதிராக 10 கோல்கள் அடிக்கப்பட்டன. 21 புள்ளிகளுடன் உலகக்கிண்ணப்
போட்டியில் விளையாட சேர்பியா தகுதி பெற்றது. ஒஸ்ரியாவுக்கு எதிரான முதல் போட்டியில்
3-2 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்த சேர்பியா, இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல்கணக்கில்
தோல்வியடைந்தது.
தர வரிசையில் 34 ஆவது இடத்தில்
இருக்கும் சேர்பியா 1930 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 11 உலகக்கிண்ணப் போட்டிகளில்
விளையாடியது. 1930, 1962 ஆம் ஆண்டுகளில் நான்காவதி இடத்தைப் பிடித்தது. ஏனையவற்றில் முதல் சுற்றைத் தாண்டவில்லை.
மிலடென்
கிரஸ்டாஜிக், 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்.
தற்காப்பு ஆட்டத்தில் சிறந்த வீரராக விளங்கிய மிலடென் கிரஸ்டாஜிக் தனது யுக்தியை சேர்பியாவுக்கு வழங்கியுள்ளார். செல்சி அணிக்கு விளையாடும் பிரானிஸ்லாவ்
இவானோவிக் மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
செர்ஜெஜ் மிலின்கோவிக் சாவிக், அலெக்சாண்டர் கோலரோவ் நெஜமா மேடிக் ஆகியோர் அவருக்குப்
பக்க பலமாக உள்ளனர்.
பிறேஸில்,சுவிட்ஸார்லாந்து,கொஸ்ரரிகா
ஆகியவறுடன் ஒப்பிடும் போது பலம் குறைந்த நாடாக
இருக்கும் சேர்பியா, வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டிய நிலையில் உள்ளது.
No comments:
Post a Comment