பெல்ஜியம்,இங்கிலாந்து,துனீஷியா,
பனாமா ஆகியன உலகக்கிண்ணப் போட்டியில் ஜி பிரிவில் விளையாடுகின்றன. இந்தப் பிரிவில் இருந்து முதல் நாடாக பெல்ஜியம்
இரண்டாவது சுற்றுக்கு எளிதாகச்சென்றுவிடும். இரண்டாவது நாடாக இங்கிலாந்து தகுதி பெறுவதற்கு
அதிக சந்தர்ப்பமுள்ளது. துனிஷியாவும் பனாமாவும் அதிர்ச்சியளித்தால் இங்கிலாந்தின் நிலை
சிக்கலாகிவிடும்.
ஐரோப்ப்பியக்கண்டத்தில்
எச் பிரிவில் விளையாடிய பெல்ஜியம் 9 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியது.
தகுதிகாண் போட்டிகளில் தோல்வியடையாத பெல்ஜியம்,43 கோல்கள் அடித்தது. எதிராக 6 கோல்கள் அடிக்கப்பட்டன. ஆறு போட்டிகளில் எதிரணி கோல் அடிக்கவில்லை. கிரீஸுக்கு எதிரான போட்டி 1
- 1 என்ற கோல்கனக்கில் சமனிலையில் முடிந்தது. எஸ்தோனியாவுகு எதிரான போட்டியில் 9-0
,ஜிப்ரல்டல்க்கு எதிரான முதல் போட்டியில்
9 -0 இரண்டாவது போட்டியில் 6-0 என்ற கோல்கணக்கில் சுவீடன் வெற்றி பெற்றது.
சுவீடன் 12 முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது.
கடந்த முறை கால் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்தது. 1968 ஆம் ஆண்டு
நான்காவது இடத்தைப் பெற்றது.
கிளப்
மட்டத்தில் சிறப்பாகச் செயற்பட்ட ரோபேட்டோ மார்ட்டின்ஸ் பெல்ஜியத்தின் பயிற்சியாளராகக்
கடமையாற்றுகிறார். அவருடைய செயற்பாடுகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கெவின்
டி புரூனே பெல்ஜியத்தின் நம்பிக்கை நட்சத்திரமாவார். பெல்ஜியத்தின் வீரரான கெவின் டி
புரூனே உலகின் மிகச்சிறந்த 5 மிட்ஃபீல்டர்களில் ஒருவர் மான்செஸ்டர்
சிட்டி அணி
வரலாற்றுச் சாதனையோடு ப்ரீமியர் லீக் பதக்கம்
வெல்ல மிக
முக்கியக் காரணமாக
விளங்கியவர். அட்டா, டிஃபன்ஸ் இரண்டிலும் இவரது
பங்களிப்பு அணிக்குக் கைகொடுக்கும். அசிஸ்ட் செய்வதில்
நம்பர் 1. ஃப்ரீ
கிக் எடுப்பதிலும்
ஸ்பெஷலிஸ்ட். இப்படி இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே
போகலாம். பெல்ஜியம்
அணியை ஹடார்க்
ஹார்ஸ்' என
எல்லோரும் கருத
முக்கியக் காரணமே
இவர்தான். ஹசார்ட்,
லுகாகு, மெர்டன்ஸ்
போன்ற முன்கள
வீரர்கள் இவரின்
பாஸ்களைப் பயன்படுத்திக்கொண்டால்
பெல்ஜியம் நிச்சயம்
ஆச்சரியமளிக்கும்.
உலகின்
மிகச் சிறந்த நடுக்கள வீரர்களான செல்சியாவின் எடன் ஹசார்ட், மான்செஸ்டர் சிட்டியின்
கெவின் டி புருனே ஆகியோர் பெல்ஜியம் அணிக்காக விளையாடுகின்றனர். 2017-18 பிரீமியர்
லீக் ஆட்டங்களில் புருனே 21 கோல்களை அடித்ததுடன், 21 கோல்கள் அடிப்பதில் உதவி புரிந்துள்ளார்.
ஹசார்ட் 17 கோல்களை அடித்ததுடன், 13 கோல்களை அடிக்க உதவி செய்துள்ளார்.
இவர்களுடன்,
முன்கள வீரர்களான ரோமேலு லுகாகு,டிரைஸ் மெர்டன்ஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டால், பெல்ஜியம்
காட்டில் கோல் மழைதான். உலகின் மிகச் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவரான தியாவுத் கோர்டோயிஸ்
உள்ளது பெல்ஜியம் அணிக்கு மிகப் பெரிய பலம். ரெட் டெவில்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் பெல்ஜியம் அணி வீரர் ரோமலு லகாகு 11 கோல்கள் அடித்திருந்தார். கப்டன்
ஈடன் ஹஸார்டு 6 கோல்கள் அடித்த நிலையில்இ 5 கோல்கள் அடிக்க உதவி புரிந்தார்.
ஹஸார்டு,
டிரஸ் மெர்டன்ஸ் ஆகியோர் தலைசிறந்த விங்கர்களாக உள்ளனர். இவர்கள் முன்களத்திலும் சிறந்த
திறனை வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஸ்டிரைக்கரான ரோமலு லகாகு, இந்த சீசனில் பிரிமீயர்
லீக் தொடரில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார். இம்முறை அணியில் உள்ள பெரும்பாலான
வீரர்கள்தான் கடந்த 2014 உலகக் கிண்ணத் கோப்பை தொடரிலும், 2016-ம் ஆண்டு யூரோ கோப்பையிலும்
விளையாடினார்கள். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
வெற்றிக்கான
மனப்பாங்கும், வியூகங்களும் இல்லாதது நட்சத்திர வீரர்களையே ஏமாற்றம் அடையச் செய்தது.
இதனால் இம்முறை உயர்மட்ட அளவிலான ஆட்டத்தை விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் பெல்ஜியம்
வீரர்கள்.
மற்ற
நாடுகள் பயப்படும் அளவுக்கு, பொறாமைப்படும் அளவுக்கு மிகச் சிறந்த நடுகள வீரர்களை பெல்ஜியம்
கொண்டுள்ளது. ஆனால், மிகவும் முக்கியமான போட்டிகளில் பெல்ஜியம் மொத்தமாக சொதப்பிவிடும்.
2014
உலகக்கிண்ண காலிறுதி, 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப்
என பல உதாரணங்களைக் கூறலாம். அந்தக் குறையை நிவர்த்தி செய்தால் பெல்ஜியத்தின் வெற்றியை
தடுக்க முடியாது.
No comments:
Post a Comment