Saturday, June 30, 2018

உலகக்கிண்ண ஆச்சரியத் துளிகள்


ரஷ்யாவில் நடைபெறும் 21 ஆவது உலகக்கிண்ணப் போட்டியின் ஆச்சரியத்துளிகள்.
 5 கண்டங்கள்.
32 நாடுகள்.
376 வீரர்கள்.
62 போட்டிகள்
முதல் சுற்று வரை 48  போட்டிகள் முடிந்துள்ளன.

லீக் சுற்றில் 48  போட்டிகளில் 122 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 9 கோல்கள் ஓன் கோல்களாகும். இதன் மூலம் உலகக்கிண்ண வரலாற்றில்   அதிக ஓன் கோல்கள் அடிக்கப்பட்ட தொடராக ரஷ்ய உலகக் கோப்பை தொடர் மாறி உள்ளது. 11 கோல்கள் பெனால்ரி மூலம் அடிக்கப்பட்டன.

அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி கேன் உள்ளார். அவர், 3 போட்டிகளில் 5 கோல்கள் அடித்துள்ளார். பெல்ஜியத்தின் ரோமுலு லுகாகு,போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியார் தலா 4 கோல்களுடன் 2-வது இடத்திலும், ரஷ்யாவின் டெனிஸ் செரிஷேவ்,ஸ்பெயினின் டிகோ கோஸ்டா ஆகியோர் தலா 3 கோல்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.


இவை தவிர உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ், பிறேஸிலின் கோடின்ஹோ உள்ளிட்ட 13 பேர் தலா இரு கோல்கள் அடித்துள்ளனர். மெஸ்ஸி, நெய்மர் உள்ளிட்ட 68 பேர் தலா ஒரு கோல் அடித்துள்ளனர்    இடதுகால்,வலதுகால்,பெனால்ரி, தலை  ஆகியவற்ரின் மூலம் கோல் அடிக்கப்பட்டன. இந்த நான்கு வகையிலும் கோல் அடித்த ஒரே ஒரு வீரர் ரொனால்டோ மட்டும் அதேவேளை பெனால்ரி அடிக்காத வீரராகவும் ரொனால்டோவின் பெயர் பதியப்பட்டுள்ளது.
மஞ்சள் அட்டை 158  , சிவப்பு அட்டை 3,   36,349 முறை பந்து பாஸ் செய்யப்பட்டது.

நெய்மர் 17 முறை கோல் அடிக்க முயற்சி செய்துள்ளார். டென்மாக் வீரர் எரிக்சன் 36 கிமீ வேகத்தில்  ஓடியுள்ளார். ஜேர்மனி வீரர் ரொனி குறூஸ் 310 முறை பந்தை சரியான முறையில் பாஸ் செய்துள்ளார். மெக்ஸிகோ கோல் கீப்பர் ஒச்சோ  17 கோல்கலைத் தடுத்து சாதனை செய்துள்ளார்.
பெல்ஜியம்,துனீஷியா ஆகியவற்றுக்கிடையேயானபோட்டியில் அதிக பட்சமாக 9 கோல்கள் அடிக்கப்பட்டன. அதி கூடிய 8 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன.  பெல்ஜியம் 5 கோல்களும் தினீஷியா 2 கோல்களும் அடித்தன. பெல்ஜிய்ததுகு எதிராக 3 மஞ்சள் அட்டையும் பனாமாவிக்கு எதிராக  5 மஞ்சள் அட்டையும் காண்பிக்கப்பட்டன.


இரண்டு போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் ஹரி கேன், 153 நிமிடங்கள் களத்தில் நின்று 5 கோல்கள் அடித்துள்ளார்.வலதுகாலால் இரண்டு கோல்களும் தலையால் முட்டி ஒரு கோலும் அடித்துள்ளார்.
 இரண்டு போட்டிகளில் விளையாடிய பெல்ஜியம் வீரர் லுகாலு  149 நிமிடங்கள் களத்தில் நின்று 4 கோல்கள் அடித்துள்ளார்.இடதுகாலால் இரண்டு கோல்களும் வலது காலால் ஒரு கோலும் தலையால் முட்டி ஒரு கோலும் அடித்துள்ளார்.


மூன்று போட்டிகளில் விளையாடிய  போத்துகல் வீரர் ரொனால்டோ, 270 நிமிடங்கள் களத்தில் நின்று 4 கோல்கள் அடித்துள்ளார். இடது காலாலும் வலது காலாலும் தலையால் முட்டியும், பெனால்ரியிலும் தலா ஒரு கோல் அடித்துள்ளார்.

No comments: