ரஷ்யாவில்
நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்ட பீ பிரிவில்
மிகப்பலம் வாய்ந்த போத்துகல், ஸ்பெய்ன், ஆகியவற்றுடன்
மொராக்கோ,ஈரான் ஆகியன இடம் பிடித்துள்ளன. பீ பிரிவில் இருந்து போத்துகலும் ஸ்பெயினும்
சிரமமின்றி இரண்டாம் சுற்றுக்குச் சென்றுவிடும்.
முதலாவது
தகுதிகாண் போட்டியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து விளையாடிய போத்துகல் 2-0 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது. அதன் பின்னர்
நடைபெற்ற ஒன்பது போட்டிகளிலும் வெற்றி பெற்று 27 புள்ளிகளுடன் உலகக்கிண்ணப் போட்டியில்
விளையாடத் தகுதி பெற்றது. போலந்து 32 கோல்கள் அடித்தது. போலந்துக்கு எதிராக நான்கு
கோல்கள் மட்டும் அடிக்கப்பட்டன. கப்டன் கிறிஸ்ரியானோ ரொனால்டோ, அந்த்ரே சில்வா கூட்டணி
24 கோல்கள் அடித்து அசத்தியுள்ளது.
அண்டோனோவுக்கு எதிராக 6 கோல்களும் , புரூஸ் ஐலண்ட்டுக்கு
எதிராக 5 கோல்களும் அடித்துள்ளது. தரவரிசையில் 4
ஆவது இடத்தில் இருக்கும் போத்துகல் 1966 ஆம்
ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை ஆறுமுறை போத்துகல்
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது..இரண்டு முறை அரை இறுதிப்போட்டியில் விளையாடிய
போத்துகல் 1966 ஆம் ஆண்டு 3 ஆவது இடத்தைப் பெற்றது. முதல் சுற்றை இலகுவாகத்தாண்டும்
போத்துகல் இரண்டாவது சுற்ரில் கடுமையாகப் போராடவேண்டும்.
போத்துகலின்
முன்னாள் பின்கள வீரரான பெர்னாண்டோ சாண்டோஸ் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போத்துகல்
அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. சாண்டோஸின்
பயிற்சியில் 24 போட்டிகளில் விளையாடிய போத்துகல் 20 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2016 ஆம் ஆண்டு யூரோ சம்பியனான போத்துகல் 2014 உலகக்கிண்ணப் போட்டியின்
பின்னர் இரண்டு போட்டிகளில் மட்டும் தோல்வியடைந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் காயம்
காரணமாக ரொனால்டோ விளையாடவில்லை.
போலந்துக்காக 148 போட்டிகளில் விளையாடிய ரொனால்டோ
81 கோல்கள் அடித்துள்ளார். ஐந்து முறை ஃபீபாவின் விருதைப் பெற்ற ரொனால்டோ தனது தாய்
நாட்டுக்கு யூரோ கிண்ணத்தைப் பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். ரியல் மட்ரிக்
ஐந்து முறை சம்பியன் லீக் பட்டத்தைப்பெற்றதற்கு ரொனால்டோவின் பங்களிப்பு முக்கியமானதாகும்.
ரியல் மட்ரிக்குக்காக 153 போட்டிகளில் விளையாடிய ரொனால்டொ 120 கோல்கள்
அடித்துள்ளார். இந்த சீசனில் அடித்த 15 கோல்களும் இதற்குள் அடங்கும்.
ரொனால்டோவுக்கு
பக்க பலமாக இருக்கும் வீரர்கள் 30 வய்துக்கு மேற்பட்டவர்கள். பெபே {35}, புரூனோ ஆல்வ்ஸ்
[36}, ரிக்கார்டோ குரேஷ்மா { 34} அதிக கோல்கள்
அடிக்க உதவிய குரேஷ்மாவின் பங்களிப்பு உலகக்கிண்ணப்
போட்டியில் அதிகமாக இருக்கும்.
2006,2010,2014
ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் ரொனால்டோ விளையாடினார். 13 போட்டிகளில் 3 கோல்கள் மட்டும் அடித்துள்ளார். ஐரோப்பிய
லீக் போட்டிகளில் கலக்கும் ரொனால்டோவால் தனது தாய் நாட்டு அணிக்கு உலகக்கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
உலகக்கிண்ணம் ரொனால்டோவுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.
ஸ்பெய்ன்
உலகக்கிண்ண
பீ பிரிவில் போத்துகல், மொராக்கோ,ஈரான் ஆகியவற்றுடன் ஸ்பெய்ன், இடம் பிடித்துள்ளது. இந்தப்பிரிவில் போத்துகலைப்போன்று
பலம் வாய்ந்த அணியாக ஸ்பெய்ன் இருக்கிறது. போத்துகலும் ஸ்பெய்னும் மிக இலகுவாக முதல் சுற்றைத் தாண்டி இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும்.
தகுதிகாண்
போட்டியில் 9 போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்பெய்ன்,
இத்தாலிக்கு எதிரான ஒரு போட்டியைச் சமப்படுத்தியது. ஸ்பெய்னிடம் தோல்வியடையாத
இத்தாலி உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெறாதமை துரதிர்ஸ்டவசமானது. ஸ்பெய்ன் 36 கோல்கள்
அடித்தது. ஸ்பெய்னுக்கு எதிராக மூன்று கோல்கள் மட்டும் அடிக்கப்பட்டது. 28 புள்ளிகளுடன்
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட ஸ்பெய்ன் தகுதி பெற்றது.
தர
வரிசையில் 8 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெய்ன், 1930 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை
15 முறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. இரண்டுமுறை அரை இறுதியில் விளையாடிய
ஸ்பெய்ன் 2010 ஆம் ஆண்டு சம்பியனாகியது.
ஸ்பெய்ன்,பர்சிலோனா,ரியல்
மட்றிட் ஆகியவற்றின் முன்னாள் கோல்கீப்பரான ஜுலன் லொபடிகியு ஸ்பெய்ன் அணியின் பயிற்சியாளராவார். ஸ்பெய்னின் U19,
U21 அணிகள் ஜுலன் லொபடிகியுவின பயிற்சியில் சம்பியனாகியது.
அன்ரஸ்
இனியஸ்டா, இஸ்கோ உட்பட பத்து வீரர்கள் ரியல்
மட்ரிச்,பர்சிலோனா ஆகிய கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். டியாகோ கொஸ்டா,
இயாகோ அஸ்பாஸ், ரொட்ரிகோ மொரானோ ஆகியோர் ஸ்பெய்ன் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மார்கெஸ்
அலன்சோ, செஸ்க் பப்ரேகாஸ், ஹெக்டர் பெல்லரின் ,இளன் வீரரான மொராடோ ஆகியோர் அணியில்
இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக நடந்த போட்டிகளில் தமது திறமையை வெளிப்படுத்தாமையே இவர்களின் வெளியேற்றத்துக்குக் காரணம். அசை இறுதிவரை
முன்னேறுவதற்குரிய சந்தர்ப்பம் ஸ்பெய்னுக்கு உள்ளது.
மொராக்கோ
அட்லஸ்
லயன் எனச்செல்லமாக அழைக்கப்படும் மொராக்கோ
இடம் பிடித்த பீ பிரிவில் பலம் வாய்ந்த போத்துகல்,ஸ்பெய்ன் ஆகியவற்றுடன் ஈரானும்
உள்ளது. தற்பாதுகாப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தும் மொராக்கோ சில வேலையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.தரவரிசையில்
42 ஆவது இடத்தில் இருக்கிற்து. மொராக்கோ, நான்குமுறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது.
1970,1994,1998 ஆம் ஆண்டுகளில் முதல் சுற்றுடன்
வெளியேறிய மொராக்கோ 1986 ஆம் ஆண்டு இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்று ஆச்சரியமளித்தது.
அப்போது இங்கிலாந்து ,போலந்து ஆகியவற்ருக்கு எதிரான போட்டியை கோல்கள் இன்றி சமப்படுத்திய
மொராக்கோ, போத்துகலுக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல்
அணியாக இரண்டாவது சுற்றுக்குச் சென்றது. அப்படி ஒரு ஆச்சரியம் இம்முறை நடைபெறும் என
மொராக்கோ ரசிகர்கள் நம்புகிறார்கள்.
தகுதிகாண்
போட்டியில் 3 வெற்றிகளைப் பெற்ற மொராக்கோ, 3 போட்டிகளை கோல்கள் இன்றி சமப்படுத்தியது.
11 கோல்கள் அடித்த மொராக்கோவுக்கு எதிராக ஒரு கோல்கூட அடிக்கப்படவில்லை. மாலிக்கு எதிராக
அதிக பட்சமாக 6 கோல்கள் அடிக்கப்பட்டது. 12 புள்ளிகளுடன் ஆபிரிக்கக்கண்டத்தில் இருந்து
முதல் அணியாக மொராக்கோ தகுதி பெற்றது. ஐவரிகோஸ்ட்,கோபன்,மாலி ஆக்யவற்ரி வீழ்த்திய மொராக்கோ
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
பிரான்ஸின்
முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ஹெவர் ரெனாட் மொராக்கோவின் பயிற்சியாளராவார். இவரின் பயிற்சியில்
மொராக்கோ ஆபிரிக்க சம்பியனாகியது .ஜுவண்டர்ஸ் கிளப்புக்காக விளையாடும்
மெதி பெனட்டியா
மொராக்கோவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார். நெதர்லாந்து கிளப்புக்காக
இந்த சீசனில் 15 கோல்கள் அடிக்க உதவிய ஹக்கிம் ஸியெக் தகுதிகாண் போட்டியில் இரண்டு
கோல்கள் அடித்துள்ளார். கரீம் எம் அஹமதி, வளர்ந்துவரும் வீரரான அச்ஃராப் ஹக்மி, தகுதிகாண்
போட்டியில் கபான் அணிக்கு எதிராக மூன்று கோல் அடித்த காலித் பியூட்டிப். இவர் துருக்கி
லீக்கில் 12 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். 20 வருடங்களுக்குப் பின்னர் உலகக்கிண்ணப்
போட்டியில் விளையாடும் மொராக்கோவின் மீது அந் நாட்டு ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
ஈரான்
ஆசியாவில்
இருந்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் ஈரான், போத்துகல், ஸ்பெய்ன், மொராக்கோ
ஆகியவற்றுடன் பீ பிரிவில் இடம் பிடித்துள்ளது. மற்றைய மூன்ரு நாடுகளுடன் ஒப்பிடுகையில்
ஈரான் பலவீனமான அணியாக இருக்கிறது. தர வரிசையில் 36 ஆவது இடத்தில் இருக்கும் ஈரான்
1978 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டுவரை நான்குமுறை உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடியது. நான்கு முறையும் முதல் சுற்றுடன் வெளியேறியது.
தகுதிச்சுற்றில்
10 போட்டிகளில் விளையாடிய ஈரான் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 4 போட்டிகளைச் சமப்படுத்தியது.
ஒரு போட்டியிலும் தோல்வியடையாத ஈரான் 10 கோல்கள் அடித்தது. ஈரானுக்கு எதிராக இரண்டு
கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. 22 புள்ளிகளுடன்
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
போத்துகலைச்
சேர்ந்த காலோஸ் கியூறியஸ் ஈரானின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். சர்தார் அஸ்மோ ஈரானின் பிரபலமான வீரராக இருக்கிறார். ரூபின் கசானுடன்
இணைந்து 11 கோல்கள் அடித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் ரிம்சஹில், டென்மார்க்கின் கிறிஸ்ரியன்
எரிக்சன், பெல்ஜியத்தின் ரெமொல் லுகாலு ஆகியோர் முன்னதாக தகுதிகாண் போட்டியில்
11 கோல்கள் அடித்துள்ளனர்.
No comments:
Post a Comment