Friday, June 15, 2018

ரஷ்யாவுக்கு முதல் வெற்றி


.

 .மாஸ்கோவில்உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக்கிண்ன  முதலாவது போட்டியில் சவூடி அரேபியாவை எதிர்த்து விளையாடிய ரஷ்யா ,  5- 0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றதுஇரு அணி வீரர்களும் முதல் வினாடியில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடினர். பந்து அரேபியாவின் கட்டுப்பாட்டில் சற்று அதிகமாக (60 சதவீதம்) வலம் வந்தாலும் ரஷ்யா வீரர்கள் தாக்குதல் பாணியை கையாண்டு  அவர்களின் தடுப்பு அரணை எளிதில் உடைத்தனர்.

12-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை ரஷ்யாவின் யுரி காஜின்ஸ்கி தலையால் முட்டி அற்புதமாக கோலாக்கினார். இதன் மூலம் இந்த உலகக்கிண்ணப் போட்டியில் முதல் கோலை அடித்தவர் என்ற சிறப்பை காஜின்ஸ்கி பெற்றார். 14-வது நிமிடத்தில் இன்னொரு கோல் விழுந்திருக்க வேண்டியது. அந்த ஷாட்டை அரேபியா கோல் கீப்பர் அப்துல்லா பாய்ந்து தடுத்து விட்டார்.

ரஷ்யா முன்னணி வீரர் ஆலன் ஜாகோவ் தசைப்பிடிப்பு காரணமாக 23-வது நிமிடத்தில் வெளியேறினார். ஆனாலும் ரஷ்யா நிலைமையை சமாளித்து திறம்பட ஆடியது.  மாற்று ஆட்டகாரராகக் களம் இறங்கிய ரஷ்ய வீரர்    டெனிஸ் செரிஷிவ் 43-வது நிமிடத்தில் இடது காலால் பந்தை உதைத்து வலைக்குள் அனுப்பி அசத்தினார். இதையடுத்து முதல் பாதியில் 2-0 என்ற கணக்கில் ரஷ்யா முன்னிலை பெற்றது.

71-வது நிமிடத்தில் ரஷ்யாவின் மற்றொரு மாற்று ஆட்டக்காரர் ஆர்ட்டெம் டிஸ்யூபா தலையால் முட்டி கோல் போட்டார். வழக்கமான 90 நிமிடங்களுக்கு பிறகு காயம் உள்ளிட்ட விரயத்துக்காக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இந்த 5 நிமிடங்களில் ரஷ்யாவின் வீரர் டெனிஸ் செரிஷி  இன்னொரு கோலை அடித்தார். கடைசி நேரத்தில் கிடைத்த பிறீகிக்கை அலெக்சாண்டர் கோலோவின் கோலாக்க 5-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வெற்றி பெற்றது. உலகக்கிண்ணப் போட்டியை நடத்தும் நாடு தோல்வியடைவதில்லை என்றசரித்திரத்தில் ரஷ்யாவும் இணைந்தது.  கோலாக்கினார். மாற்று வீரர்கள் ஒரு போட்டியில் மூன்று கோல்கள் அடித்தது இதுவே முதல் முறை

 . இரு அணி தரப்பிலும் தலா ஒரு வீரர் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானார்கள். இந்த ஆட்டத்தை மொத்தம் 78 ஆயிரத்து 11 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்   

No comments: