Monday, June 25, 2018

முதலிடத்துக்காக முட்டிமோதும் நாடுகள்


ரஷ்யாவில நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  ஏ பீ ஆகிய இரண்டு பிரிவுகளின் கடைசிப் போட்டி இன்று நடைபெறுகிறது. ஏ பிரிவில் ரஷ்யாவும் உருகுவேயும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தலா ஆறு புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன.

இன்று ரஷ்யாவும் உருகுவேயும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் நாடு முதல் இடம் பிடிக்கும். போட்டி சமநிலையில் முடிந்தால் கோல்களின் அடிப்படையில் ரஷ்யா முதலிடம் பிடிக்கும். ரஷ்யா எட்டு கோல்கள் அடித்தது ரஷ்யாவுக்கு எதிராக ஒரு கோல் அடிக்கப்பட்டது. உருகுவே இரண்டு கோல்கள் அடித்தது.எதிராக  ஒரு கோல்கூட அடிக்கப்படவில்லை.

சவூதியும் எகிப்தும் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தன. ஒரு  வெற்றியுடன் நாடுதிரும்புவதற்கு இரண்டு நாடுகளும் விரும்புகின்றன.

பீ பிரிவில் ஸ்பெயினும் போத்துகலும். ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமநிலைப்படுத்தி தலா  நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளன.  ஸ்பெய்னும் போத்துகளும் நான்கு கோல்கள் அடித்துள்ளன. எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. ஈரான் ஒரு போட்டியில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது.

பீ  பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது  போர்ச்சுகல் ,ஸ்பெயின் ஆட்டம் 3-3 என சமனானது.. அதற்கடுத்து போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. ஸ்பெயின் 1-0 என ஈரானை வென்றது.

தற்போதைய நிலையில் ஸ்பெயினும்    போத்துகலும்   தலா 4 புள்ளிகளுடன் உள்ளன. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த மொராக்கோ முதல் சுற்றுடன் வெளியேறுகிறது

பீ  பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மொராக்கோவை ஸ்பெயின் சந்திக்கிறது. மற்றொரு ஆட்டத்தில்   போர்ச்சுகல் ஈரானை சந்திக்கிறது. 4 புள்ளிகளுடன் உள்ள போர்ச்சுகல்,  3 புள்ளிகளுடன் உள்ள ஈரானை சந்திக்கிறது. முன்னைய இரண்டு போட்டிகளிலும்  ரொனால்டோ  தனி ஆளாக வெற்றியைப்  பெற்றுக் கொடுத்தார். ஆகையால்  இன்றைய ஆட்டத்தில் வென்று போத்துகல் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இங்கிலாந்து அணித் தலைவர் இரண்டு போட்டிகளில் ஐந்து கோல்கள் அடித்து  முன்னிலைஅயில் உள்ளார்.ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்துள்ளார். பெல்ஜியம் வீரர் லுகாகு இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் ரொனால்டோ அவர்களை முந்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

No comments: