உதைபந்தாட்ட
உலகில் அசைக்க முடியாத வீரராக வலம் வருபவர்களில் மெஸ்சியும் ஒருவர். ஐரோப்பிய லீக்
போட்டிகளில் தான் சார்ந்த அணியை சம்பியனாக்கி மகுடம் சூட்டிப் பார்த மெஸ்ஸியால் தாய்
நாட்டுக்கு ஒரு மகுடத்தைச் சூட்ட முடியவில்லை.
மெஸ்ஸியின் போட்டியாளரான ரொனால்டோ 4 கோல்கள் அடித்தார். நெய்மர்,சுவாரஸ்,சாலா
ஆகியோர் தலா ஒருகோல் அடித்தனர். மெஸ்சி இன்னமும் ஒருகோலும் அடிக்கவில்லை. தவிர கோல் அடிப்பதற்குக்கூட உதவவில்லை
தகுதிச்சுற்றில்
கடைசிப் போட்டிவரை காத்திருந்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. ஐஸ்லாந்து,நைஜீரியா,குரோஷியா
ஆகியவற்றுடன் டி பிரிவில் ஆர்ஜென்ரீனா இடம் பிடித்தது. இந்தப் பிரிவில் முதலிடம் பெற்று
இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்ஜென்ரீனாவை , புள்ளிப்
பட்டியலில் அறிமுக நாடான ஐஸ்லாந்து பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இரண்டு
போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் குரேஷியா அடுத்த
சுற்றுக்கு முன்னேறியது. நைஜீரியா 3 புள்ளிகளுடன் உள்ளது. ஐஸ்லாந்தும் ஆர்ஜென்ரீனாவும்
தலா 1 புள்ளியுடன் உள்ளன. ஆனால் கோல் வித்தியாசத்தில் அர்ஜென்டினாவை நான்காவது இடத்துக்கு
தள்ளி மூன்றாவது இடத்தில் ஐஸ்லாந்து உள்ளது.
முதல்
போட்டியிலேயே ஆர்ஜென்ரீனாவுடன் 1-1 என சமப்படுத்தி ஐஸ்லாந்து அதிர்ச்சி கொடுத்தது. குரேஷியா 2-0 என
நைஜீரியாவை வென்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்தது குரேஷியா. 3-0
என்ற கோல் கணக்கில் குரேஷியா வென்றது. அதற்கடுத்த ஆட்டத்தில் நைஜீரியா 2-0 என ஐஸ்லாந்தை
வென்றது
இன்று
நடக்கும் போட்டியில் நைஜீரியாவை வென்றால் ஆர்ஜென்ரீனா நான்கு புள்ளிகளுடன் இருக்கும்.
அதே நேரத்தில் குரேஷியாவுக்கு எதிராக வென்றால் ஐஸ்லாந்தும் 4 புள்ளிகளைப் பெறும். கோல்
வித்தியாசத்தில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பது தீரமானிக்கப்படும். அதனால்
அடுத்தச் சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஐஸ்லாந்து
உள்ளது முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுகிறது.
2016ல் யூரோ கிண்ணப் போட்டியில் கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பு
2010ல் ஸ்லோவாகியா அணி மட்டுமே அறிமுக உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அந்தச் சாதனையை புரிவதற்கு இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நிலையில் அறிமுக அணியான ஐஸ்லாந்து
உள்ளது.
சி
பிரிவில் இன்று நடக்கும் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா பெருவை சந்திக்கிறது. மற்றொரு
ஆட்டத்தில் பிரான்ஸுடன் டென்மார்க் மோதுகின்றது..
சி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் பிரான்ஸ்
2-1 என அவுஸ்திரேலியாவை வென்றது. டென்மார்க் 1-0 என பெருவை வென்றது. அதற்கடுத்து நடந்த
டென்மார்க், ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. பிரான்ஸ்
1-0 என பெருவை வென்றது. இரண்டு வெற்றிகளைப் பெற்ற பிரான்ஸ் 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு
முன்னேறியது. இரண்டு தோல்விகளை சந்தித்த பெரு வெளியேறுகிறது. டென்மார்க் 4 புள்ளிகளுடனும்,ஆஸ்திரேலியா
1 புள்ளியுடனும் உள்ளன.
பெருவுக்கு
எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு
கிடைக்கும். ஆனால், பிரான்ஸ், டென்மார்க்ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் மற்றொரு லீக் ஆட்டத்தின் முடிவின்படியே
அடுத்தச் சுற்றுக்கு நுழைவது டென்மார்க்கா அல்லது அவுஸ்திரேலியாவா என்பது தெரியவரும்.
அவுஸ்திரேலியா வென்றால் 4 புள்ளிகளைப் பெறும்.
பிரான்ஸுக்கும் எதிரான போட்டியில் வென்றால் அல்லது சமப்படுத்தினால் டென்மார்க் அடுத்தச்
சுற்றுக்கு முன்னேறிவிடும். ஒருவேளை தோல்வியடைந்தால் டென்மார்க்கும் அவுஸ்திரேலியாவும்
தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அப்போது கோல் வித்தியாசத்தில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்
நாடு எது எனத் தீர்மானிக்கப்படும். அதனால் பெருவுக்கு எதிராக அதிக கோல் வித்தியாசத்தில்
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா உள்ளது.
No comments:
Post a Comment