மெக்ஸிக்கோ
வட
,மத்திய அமெரிக்க கண்டத்தில் இருந்து உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற மெக்ஸிக்கோ, பிறேஸில்,சுவீடன்,தென்.கொரியா ஆகியவற்றுடன்
எஃப் பிரிவில் இடம் பெற்றுள்ளது. பிறேஸில் இலகுவாக இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும்
இரண்டாவது சுற்றுக்குச் செல்வதற்காக சுவீடனுக்கும்
மெக்ஸிக்கோவுக்கும் இடையே போட்டி இருக்கும்.
தகுதிகாண்சுற்றில் 6 போட்டிகளில் வெற்றி பெற்ற மெக்ஸிக்கோ, 3 போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.
16 கோல்கள் அடித்த மெக்ஸிக்கோவுக்கு எதிராக
7 கோல்கள் அடிக்கப்பட்டன. 21 புள்ளிகளுடன் உலகக்கிண்ணத்தில் விளையாட மெக்ஸிக்கோ
தகுதி பெற்றது.
தர
வரிசையில் 15 ஆவது இடத்தில் இருக்கும் மெக்ஸிக்கோ 1930 ஆம் ஆண்டு முதல் 15 உலகக்கிண்ணப்
போட்டிகளில் விளையாடியது.1970.1986 ஆம் ஆண்டுகளில் கால் இறுதிச் சுற்றுவரை சென்றது.
1994 ஆம் ஆண்டுகுப் பின்னர் தொடர்ந்து 6 முறை உலகக்கிண்ணப் போட்டிகளில்
விளையாடும் நாடுகளில் மெக்ஸிக்கோவும் ஒன்று.
பல்
வேறு கிளப்களுக்கு பயிற்சியாளராகக் கடமையாற்றிய ஜுவான் கார்லோஸ் ஒசோரியோ 2015 ஆம் ஆண்டு
மெக்ஸிக்கோவின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் சர்வதேசப் போட்டிகளில்
மெக்ஸிக்கோ முன்னேற்றமடைந்துள்ளது. ஒசோரொயோவின் பயிற்சியில் 45 போட்டிகளில் விளையாடிய மெக்ஸிக்கோ, 38 போட்டிகளில்
வெற்றி பெற்றுள்ளது.தகுதிகாண் போட்டியில் மூன்று போட்டிகள் மீதமிருக்கையில் உலகக்கிண்ணப்
போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
தகுதிகாண்
போட்டியில் மூன்று முறை இரண்டு கோல்கள் அடித்த ஜெவியர் ஹமாண்டஸ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு
உள்ளது. ஹிர்விங் லோசானோ,ஜொனதன் டாஸ் சாண்டஸ்,
கோல் கீப்பர் குல்லிர்மோ ஒசோ, ஹெக்டர் மொரேனொ, கார்லோஸ் வேலா,ஜேசுஸ் கொரானோ,அண்ட்ரிஸ்
குராடோ,இளம் வீரர்களான ஒஸ்வால்டோ அலனிஸ், ஹுகொ அயலா, எட்சன் அல்வரிஸ், ஆகியோர் மெக்ஸிக்கோவின் முக்கிய வீரர்களாவ.
நெஸ்ரொர்
அரஜு, கார்லோஸ் சலாடோ ஆகிய இருவரும் காயமடைந்ததால் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
புள்ளிப்பட்டியலில் இரண்டாவது 32 வருடங்களின்
பின்னர் கால் இறுதிப்போட்டியில் விளையாடும் நோக்குடன் மெக்ஸிகோ ரஷ்யாவுக்குச் சென்றுள்ளது.
சுவீடன்
மெஸ்ஸி,ரொனல்டோ,நெய்மர்
வரிசையில் உதைபந்தாட்ட ரசிகர்களால் போற்றப்படுபவர் இப்ராஹிமோவிச்.சுவீடனின் உதைபந்தாட்ட
அடையாளமாகப் பார்க்கப்படும் இப்ராஹிமோவிச் இல்லாத சுவீடன் உலகக்கிண்ணப் போட்டியில்
விளையாடுகிறது.
ஐரோப்பாவிலிருந்து
உலகக்கிண்னப் போட்டிக்குத் தகுதி பெற்ற சுவீடன்,பலம் வாய்ந்த ஜேர்மனி, மெக்சிக்கோ,தென்.கொரியா
ஆகியவற்றுடன் எஃவ் பிரிவில் இடம் பிடித்துள்ளது.
இந்தப்பிரிவில் இருந்து ஜேர்மனி முதல் அணியாக இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும்.
இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்காக மெக்ஸிக்கோவுடன் முட்டி மோத வேண்டிய நிலையில் சுவீடன் இருக்கிறது.
தகுதிகாண் சுற்றில் 6
போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியைச் சமப்படுத்தியது. மூன்று போட்டிகளில்
தோல்வியடைந்த சுவீடன் 26 கோல்கள் அடித்தது. எதிராக 9 கோல்கள் அடிக்கப்பட்டன்.19
புள்ளிகளுடன் ஏ பிரிவில் இரண்டாவது இடத்திப் பிடித்ததால் பிளேஃஓவ் போட்டியில் வெற்றி
பெற்று உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது
.
தரவரிசையில் 24 ஆவது இடத்தில் இருக்கும் சுவீடன், 1924 ஆம் ஆண்டு
முதல் 2006 ஆம் ஆண்டுவரை 11 உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியது. 4 அரை இறுதிப்
போட்டிகளில் விளையாடிய சுவீடன் 1958 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது.
சுவீடனுக்கு
எதிரான பிளேஃஓவ் பீட்டியில் தோல்வியடைந்ததால் 4 சம்பியனான இத்தாலி உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது. 2010, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப்
போட்டிகளில் விளையாடாத சுவீடன் இந்தமுறை தகுதி பெற்றது. ஜேன் அண்டர்சனின் பயிற்சியில்
முன்னேற்றம்டைந்த சுவீடன் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது.
மார்கஸ்
பெக், அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.எமில் போர்ஸ் பெக்,விக்டர் லிண்டலோப்,
இப்ராஹிமோவிச் இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் கிரான் குவிஸ்ட், கோல் கீப்பர் ரொபின் ஒஸ்லென் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
சுவீடன்
அணியின் வீரர்கள் பலர் விளையாடும் திறன் குறைந்து
காணப்படுகின்றனர். கடைசியாக விளையாடிய போட்டிகளிலும் பயிற்சிப் போட்டிகளிலும் திணறியது.
அதனால் முதல் சுற்றைத் தாண்டுவதற்கு சுவீடன் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment