Wednesday, June 13, 2018

உலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு ஜேர்மனி




உலகக்கிண்ண சம்பியன் ஜேர்மனியுடன் மெக்சிகோ,சுவீடன்,தென் கொரியா ஆகியன எஃப் பிரிவில் இடம் பிடித்துள்ளன.  தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜேர்மனி சம்பியன் கிண்ணத்தை தக்கவைக்கும்  திட்டத்துடன் ரஷ்யாவுகுச் சென்றுள்ளது.  எஃவ் பிரிவில் பலமான  நாடான ஜேர்மனி இலகுவாக இரண்டாவது சுற்றுக்குச் சென்றுவிடும்.   இந்தப் பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்குச் செல்வதற்கு மெக்சிக்கோவுக்கும் சுவீடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.


ஐரோப்பிய தகுதிகாண் போட்டியில் சீ பிரிவில் இடம் பிடித்த ஜேர்ம்னி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.  43 கோல்கள் அடித்த ஜேர்மனிக்கு எதிராக 4 கோல்கள் அடிக்கப்பட்டன. தகுதிகாண்  சுற்றில் 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிக கோல்கள் அடித்தாணியாக ஜேர்மனி விளங்குகிறது. ஜேர்மனிக்கு எதிராக நான்கு அணிகள் தலா ஒரு கோல் அடித்தன. 6 நாடுகள் ஜேர்மனிக்கு எதிராக ஒரு கோல்கூட அடிக்கவில்லை. சன்மாரியோவுக்கு எதிரான முதல் போட்டியில்  7-0 கோல்கணக்கிலும் இரண்டாவது போட்டியில் 8-0 கோல்கணக்கிலும் நோர்வேக்கு எதிராக 6 -0 கோல்கணக்கிலும் அசர்பைசானுக்கு எதிரான போட்டியில் 5-1 கோல்கணக்கிலும் ஜேர்மனி வெற்றி பெற்றது.

தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜேர்மனி 1934 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை 18 முறை உலகக்கிண்னப் போட்டியில் விளையாடியது. 13 முறை அரை இறுதிப்போட்டியிகளிலும் 8 முறை இறுதிப் போட்டிகளிலும் விளையாடிய ஜேர்மனி 1954,1974, 1990, 2014 ஆம் ஆண்டுகளில் சம்பியனாகியது.

ஜேர்மனியின் துணை பயிற்சியாளராக இருந்த ஜொச்சிம் லோ, 2006 ஆம் அண்டு முதல் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 2008 ஆம் ஆண்டு யூரோ கிண்ணப்போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றது. 2010 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அரை இறுதிப்போட்டிவரை சென்றது. 2014 இல்  உலகக்கிண்ண சம்பியனாகியது.  2017 ஆம் ஆண்டு கொன்படரேசன் கிண்ணத்தை தாய் நாட்டுக்குக் கொண்டுவந்தது ஜேர்மனி. இம்முறையும் சம்பியனாகி 56 வருட சாதனையை சமப்படுத்தும் எண்ணத்துடன் இருக்கிறது ஜேர்மனி. 1958,1962 ஆம் ஆண்டுகளி பிறேஸில் தொடர்ச்சியாக சம்பியனாகியது.  உலகக்கிண்ண சம்பியன்,கொன்படரேசன் சம்பியன், மீண்டும் உலகக்கிண்ண சம்பியன் என தொடர்ச்சியாக மூன்று முறை சம்பியன் பட்டங்களை முதன் முதலில் பெற வேண்டும் எனவும் ஜேர்மனி  விரும்புகிறது.

ஜொச்சிம் லோவின் 12 வருட பயிற்சி  ஜேர்மனியை பலப்படுத்தியுள்ளது. கொன்படரேசன் கிண்ணப் போட்டியில் விளையாடிய 10 வீரர்கள் ஜேர்மனியில் இடம் பிடித்துள்ளனர்.எதிரணியின் களவியூகங்களை உள்வாங்க் உடைத்தெறிவதில் ஜேர்மனி முன்னிலையில் உள்ளது.

ரசிகர்களின் நம்பிக்கையான வீரராக தோமஸ் முல்லர்   உள்ளார். ஜோஷூவ கிமிமிச், டொனி கிராஸ்,மேசட் ஒசில்,மார்க் ஆந்தரே டெர், ஸ்டீகன்,மேட்ஸ் ஹம்மல்ஸ்,ஜெரோம் போடங்,லோரோ சானே, லியோன் கோரட்கா,டிமோ வெர்னர், ஷமி கெதிரா,  மெசூட் ஓஸ்வில் ஆகியோரின் அனுபவம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல்  போட்டிகளில் விளையாடாத  கோல் கீப்பர்  மனுவல் நொயர் அணியில் இணைந்து பயிற்சிப் போட்டியில் விளையாடினார். இது ஜேர்மனிக்கு  புதுத் தெம்பை அளித்துள்ளது. சிறந்த நடுக்கள வீரரான லராய் சானே, கோல்கீப்பர் பெர்ட் லினோ, முன்கள வீரர் நில்ஸ் பீட்டர்சன்,பின்கள வீரர் ஜொனதன்,நடுக்கள வீரர் செர்ஜியோ பெனோ ஆகியோர் ஜேர்மனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 22 போட்டிகளில் தோல்வியடையாத ஜேர்மனி அடுத்த வெற்றிக்காகக் காத்திருக்கிறது.

No comments: