Saturday, June 16, 2018

முதல் போட்டியில் வெற்றி பெற்றது உருகுவே


உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 1970 ஆம் ஆண்டுக்கு பிறகு   முதல் போட்டியில்  உருகுவே வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை மாற்றி .

ரஷ்யாவின் யேகேத்ரின்பர்க் மைதானத்தில்   ஏ பிரிவுப் போட்டியில் எகிப்தை எதிர்த்து விளையாடிய உருகுவே  1- 0  என்றகோல்கணக்கில் வெறியிடன் உலகக்கிண்னப் போட்டியை ஆரம்பித்தது.

  எகிப்து அணி 4-2-3-1 என்ற பார்மட்டிலும்இ உருகுவே அணி 4-4-2 என்ற பார்மட்டிலும் களமிறங்கியது. காயத்தில் இருந்து குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எகிப்து அணியில் நட்சத்திர வீரரான முகமது சாலா களமிறக்கப்படவில்லை. அந்த அணி 28 வருடங்களுக்கு பிறகு களமிறங்கியதால் ரசிகர்களிடையே சற்று எதிர்பார்ப்பு இருந்தது.  

ஆட்டத்தின் தொடக்கத்தில் எகிப்து அணி துடிப்புடன் ஆடி பந்தை அதிக நேரம் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. எகிப்து அணி வீரர் டிரெஸ்குயட் கோலை நோக்கி அடித்த பந்தை உருகுவே அணியின் கோல்கீப்பர் பெர்னாண்டோ முஸ்லெரா தடுத்து நிறுத்தினார். அடுத்து கிடைத்தபிரிகிக்வாய்ப்பை எகிப்து அணி கோலுக்கு வெளியே அடித்து வீணடித்தது.

உருகுவே அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் சோபிக்கவில்லை. 4 முறை அவருக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அதில் ஒன்றை கூட அவர் கோலாக்காமல் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் அடித்த ஒரு அருமையான ஷாட் எகிப்து அணியின் கோல்கீப்பர் முகமது அல் ஷெனாவின் முழங்காலில் பட்டு மயிரிழையில் கோல் கம்பத்தை விட்டு வெளியே சென்றது. உருகுவே அணிக்கு கிடைத்த பிரிகிக் வாய்ப்பும் வீணடிக்கப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

பின்பாதி ஆட்டத்தில் உருகுவே அணியின் பிடியே சற்று மேலோங்கி இருந்தது. இரு அணிகளும் தலா 3 மாற்று ஆட்டக்காரர்களை களம் இறக்கி கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டினார்கள். இருப்பினும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் வெற்றிகரமான முடிவை கொடுக்கவில்லை. எகிப்து அணி வீரர் அகமத் பாத்தி அடித்த அருமையான ஷாட்டை  உருகுவே அணியின் கோல் கீப்பர் லாவகமாக தடுத்து நிறுத்தி அசத்தினார். இரு அணியின் கோல் கீப்பர்களின் அபாரமான செயல்பாட்டை பார்க்கையில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆட்ட நேரம் முடிய ஒரு நிமிடம் இருக்கையில் (89-வது நிமிடம்) உருகுவே அணிக்கு மீண்டும்பிரிகிக்வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி உருகுவே அணி வீரர் கார்லோஸ் சாஞ்செஸ் வலது புறத்தில் இருந்து கோல் எல்லையை நோக்கி பந்தை தூக்கி அடித்தார். அதனை எகிப்து அணியின் 3 வீரர்கள் துள்ளிக்குதித்து தலையால் முட்டி தடுக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட உயரமாக குதித்த உருகுவே வீரர் ஜோஸ் ஜிமென்ஸ் தலையால் அற்புதமாக முட்டி கண் இமைக்கும் நேரத்தில் பந்தை கோலுக்குள் திணித்து எகிப்து அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு பதில் கோல் திருப்ப எகிப்து அணி எல்லா வகையிலும் மும்முரம் காட்டினாலும்இ எஞ்சிய நேரத்தில் அதற்கு பரிகாரம் எதுவும் கிடைக்கவில்லை. தடுப்பு ஆட்டத்தில் தலைசிறந்து விளங்கிய எகிப்து அணி கடைசி கட்ட சறுக்கலால் டிரா செய்யும் நல்ல வாய்ப்பை கோட்டை விட்டது. முடிவில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி வெற்றியுடன் போட்டியை தொடங்கியது.

ஃபீபா உலகக்கிண்ண வரலாற்றில் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக உருகுவே தோல்வியடைந்ததில்லை. அதே நேரத்தில் மற்றொரு ஆப்பிரிக்க நாடான எகிப்து இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் 2 போட்டிகளைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில்  தோல்வியடைந்தது. 1934 ஆம் ஆண்டின் பின்னர் 1990 ஆம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் எகிப்து பங்கேற்றது. ஆனால் முதல்சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது சாலாஹை நம்பி அவருடைய உதவியால் உலகக்கிண்ணப் போட்டியில்விளையாடத் தகுதி பெற்றது. 1930, 1950 ஆம் ஆண்டுகளில் சம்பியனான உருகுவே கடந்த உலகக்கிண்ணப் போட்டியில்காலிருதிக்கு முன்னைய சுற்றுடன் வெளியேறியது.

இரு அணிகளும் துவக்கம் முதலே கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தில் 58 சதவீத நேரம் பந்து முன்னாள் சாம்பியனான உருகுவே வசமே இருந்தது. இரு அணிகளுக்கும் தலா மூன்று முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  . பிரிவில் ரஷ்யா ஏற்கனவே 3 புள்ளிகளுடன் உள்ளது. தற்போது உருகுவேவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆட்டங்களில்தான் அடுத்தச் சுற்றுக்கு நுழையப் போவது யார் என்பது தெரியவரும்.


No comments: